35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகிய இருவரும் இன்று பிணையில் விடுதலையாகினர். அவர்களை இயக்குநர்கள் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வந்தபோது அவரது கார் மீது ஒரு கும்பல் கற்களை வீசியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.
இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, இங்குள்ள தமிழர்கள் மற்றும் பல பிரமுகர்கள் நிவாரணத் தொகையை அள்ளி வழங்குகின்றனர். நேற்று வரை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ரூ.2 1/2 கோடி குவிந்தது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
விடுதலைப் புலிகள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னையில் விபசாரம் செய்வதாக புகார் வந்ததின் பேரில் 5 பிரபல நடிகைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். விபசார வழக்கில் டி.வி. நடிகையும், நடன அழகியும் கைது செய்யப்பட்டனர்.