அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத் தில் கையெழுத்திடுவதில் காலவரையறைக்குள் செல்லவில்லை; எனி னும் நாட்டின் நலன்களுக்கே முன் னுரிமை அளிக்கப்படும் என்று மத் திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 105 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தமிழக கடற்படைத் தளபதி கொமாண்டர் பி.ஈ.வான் ஹல்ட்ரென் மறுத்துள்ளார்.
மக்களவை உறுப்பினர்கள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 5 தொடர்குண்டு வெடிப்புக்களில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 20ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் அக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தில்லியில் புதன்கிழமை கூறினார்.