வரும் 22-ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படக் கூறினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார்.
மீனவர்களுக்கு ஆதரவாக, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிக் கொண்டிருந்த விஜயகாந்திடம், மூதாட்டி ஒருவர் கேள்வி கேட்டு, அதற்கு அவர் பதிலளித்ததை அனைவரும் ரசித்தனர்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இருவர் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்குள் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற் படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நகை மவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரல் சுட்டுக் கெல்லப்பட்டதற்கு மத்திய அரசின் அலட்சியம்தன் கரணம் என்று ம.தி.மு.க. பெதுச்செயலளர் வைகோ குற்றம் சட்டியுள்ளர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதில் இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர் சிங் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்த நாட்டின் தூதரகம் முன்பு இந்த மாதம் 30ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.