ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில், பலர் மீன் பிடிக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தனர்.
திண்டிவனத்தை அடுத்த மயிலம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது கலவரம் மூண்டது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
கச்சத் தீவில் தேசியக் கொடியை ஏற்றச் சென்ற இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் 33 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்த போலீஸôர் வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.
அரசு ஊழியர்களுக்கு சலுகை மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் அறிவித்துள்ளதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அதனுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தொடர முடியாமல் போகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
சேது சமுத்திர திட்டம், பொடா சட்டம் போன்ற பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா கூறினார்.