அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி புஷ், இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியிலும் நடந்த பல்வேறு மோதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி உள்பட 19 பேர் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரராக திகழ்ந்துவரும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான பில்கேட்ஸ் அப்பதவியிலிருந்து நாளை மறுநாள் 27 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிகரித்துவரும் விலை உயர்வுக்கு உடனடித் தீர்வு கொண்டுவர விரும்பவில்லை. மசகு எண்ணெய் விலையேற்றத்துக்கு ஊக அடிப்படையிலான வர்த்தகம் காரணமாக இருந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து மட்டும் முதல் கட்டமாக எழுந்திருக்கிறது.
நகரங்களை நோக்கி குடிபெயர்கின்ற பல பில்லியன் கணக்கான மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், உலகிலுள்ள நீர் வளத்தை அவதானமாக முகாமை செய்ய வேண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றுப் பண்ணை மற்றும் அணுசக்தி ஆகியன தொடர்பாக பிரித்தானியாவில் நீண்டகாலத் திட்ட அடிப்படையில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது இலாபங்களின் ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டுமென பிரித்தானியப் பிரதம மந்திரி கோர்டன் பிரவுண் விரும்புகிறார்.
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜோன்மெக்கெய்னை விட 15 சதவீத புள்ளிகள் அதிகம் பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஓபாமா முன்னிலையிலுள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை பதவிவிலகக்கோரி, புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நேபாள குடியரசு அரசாங்கத்திலிருந்து மாயோயிஸ்ட்கள் வெளியேறியிருப்பது நேபாள அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிலா, பிலிப்பைன்ஸை தாக்கிய "பெங்ஷென்' புயலால் 155 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொகை மென்மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.