சூடானில் நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது. இதன்போது 50 க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் அமெரிக்க விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் குறைந்த்து 10 பாகிஸ்தானிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் ரீதியில் சட்டபூர்வமான ஜனாதிபதியாக முஷாரபை ஏற்றுக்கொள்ள முடியாதென பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
ஈராக்கை தளமாகப் பயன்படுத்தி, இஸ்லாமிய குடியரசான ஈரானை அமெரிக்கா தாக்குவதை ஈராக் ஒரு போதும் அனுமதிக்காதென ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மாலிக்கி உறுதிமொழி வழங்கியுள்ளார்.
உக்ரைன் நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் எழுதிய ஹாரிபாட்டார் கதைகள் இவருக்கு பெயரையும், புகழையும் கொடுத்ததோடு, கோடி கோடியாக பணத்தையும் குவித்தது. உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்தது.