|
PTR.
|
|
1. November 2008 12:45 |
டில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
1. November 2008 05:21 |
இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
31. October 2008 13:06 |
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
31. October 2008 05:58 |
சர்வதேசக் கிரிக்கட்டிலிருந்து அவுஸ்ரேலியக் கிரிக்கட் அணியுடனான டெஸட் தொடருடன் ஓய்வு பெறுவதாக இந்தியக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்கூலி அறிவித்தது தனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று இந்தியக் கிரிக்கட் அணியின் மற்றுமொரு முன்னணி வீரராக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், சிரேஷ்ட வீரர்கள் மதிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
31. October 2008 05:17 |
இந்திய சதுரங்க(செஸ்) வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனைகளை எதிர்கால இளைஞர்கள் முறியடிப்பது அவ்வளவு எளிதனதல்ல என்று முன்னாள் சதுரங்க உலகச் சாம்பியன் ரஷியாவைச் சேர்ந்த காரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார். ‘செஸ்பேஸ்’ இணைய தளத்துக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
30. October 2008 05:44 |
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியிலிருந்து சகலதுறை ஆட்டக்காரர் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரரும், இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், மேற்கு அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் தற்போதயை பயிற்சியாளருமான டொம் மூடி தெரிவித்துள்ளார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
30. October 2008 05:21 |
இலங்கை முதல்தர கிரிக்கட் போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனெஸர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி கழகமான புளூம்பீல்ட் கழகத்திற்காக பெனஸர் விளையாட திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் இந்தியாவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கட் அணி 2 போட்டிகளைகொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ளது.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
30. October 2008 05:06 |
உலக சதுரங்க (செஸ்) பட்டத்தினை இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வென்றார். ஜேர்மனியின் பான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரஷ்யா வீரர் விளாடிமிர் கிராம்னிக்குக்கு எதிராக நடந்த கடைசி சுற்று ஆட்டத்தை சமன் செய்து பட்டத்தை மீண்டும் விஸ்வநாதன் ஆனந்த் தக்கவைத்துக் கொண்டார்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
29. October 2008 05:23 |
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 2008ஆம் ஆண்டு இறுதிவரை ஜெலினா ஜோன்கோவிச் முதலிடத்தில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் இந்த ஆண்டு ஊசலாட்டமாகவே இருந்து வந்தது. பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின்(20வாரம்) திடீரென ஓய்வு பெற்றதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. அவருக்குப் பின் சேர்பியாவின் இவானோவிச்(12வாரம்), ரஷ்யாவின் மரியா ஷரபோவா(3வாரம்), அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்(4வாரம்) ஆகியோர் முதலிடத்தில் ஏறி இறங்கினார்கள்.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
29. October 2008 05:04 |
இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டு மேற்கிந்தியத் தீவுகளின் மகளிர் கிரிக்கட் அணி, எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கிறது. சுற்றுலா வரும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கும் இடையில் சுமார் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
|
|
விபரம்
|
|
|
PTR.
|
|
29. October 2008 04:53 |
எனது திறமை குறித்து முழுமையாகத் தெரியாதவர்கள்தான் இதுமாதிரி பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட முடியும் என்று அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளதாக வெளியான கருத்து குறித்து இந்தியக் கிரிக்கட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியை வைத்து நேர்மையற்றவர், விளையாட்டு உணர்வு இல்லாதவர் என சச்சின் குறித்து தனது சுயசரிதையில் கில்கிறிஸ்ட் கூறியுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
|
|
விபரம்
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 1 - 21 / 419 |