22. November 2008 11:34
 
 
யூரோ 2008 செய்திகள் , ஆய்வுகள்


ஐரோப்பியக் கிண்ணம் 2008: கோல்கள் 77, ஸ்பெயினுக்கு 375 கோடி ரூபாய்.
PTR.   
1. July 2008 06:01
david_villa_euro2008.jpgசுவிற்சலாந்தும், ஒஸ்திரியாவும் இணைந்து நடத்திய 16வது ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் தொடர் நேற்று முன்தினம் (29-06-2008) வியன்னா நகரில் ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியிடம் கிண்ணத்தை கையளித்ததுடன் நிறைவு பெற்றது. 23 நாட்கள் இடம்பெற்ற இந்தத் தொடரில் இறுதிப் போட்டி உட்பட 31 ஆட்டங்கள் நடைபெற்றன.
விபரம்
 
நான்கு தசாப்தங்களின் பின் ஸ்பெயின் ஐரோப்பா சம்பியன்
ரி.என்.ஜே   
1. July 2008 00:45
spanien_murasam.jpgஐரோப்பிய கிண்ண போட்டிகளுகளின் இறுதிப்போட்டி ஒஸ்ரிய தலைநகர் வியனில் நடைபெற்று முடிந்ததது . இதில் நான்காவது முறையாக கிண்ணம் வெல்லத் துடித்த ஜேர்மனியும் 44 வருட இடைவெளையை தகர்க்க வேண்டிய ஸ்பெயினும் மோதிக்கொண்டன. போட்டி தொடங்க முதல் நிறைவுவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று இரு அணி வீர்ர்களும் மைதானத்தில் அணிவகுத்து கைகுலுக்கி போட்டிக்கு தயாரான தமது நிலைகளில் நின்றனர். அப்போது மைதானத்தில் கடமைபுரிந்த இத்தாலி நாட்டு நடுவர் Rosetti விசில் ஊதியதும் பரபரப்பு எகிறிப்பாய பந்து அங்கும் இங்குமாக மைதானத்தில் வலம் வந்தது.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம், 44 வருடங்களின் பின்னர் மீண்டும் ஸ்பெனிடம்.
PTR.   
30. June 2008 05:57
spain_04.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் வெற்றிக்கிண்ணத்தை பலம்பொருந்திய ஜேர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துடிப்பு மிக்க ஸ்பெயின் அணி கைப்பற்றியது. இதன் மூலம், ஸ்பெயின் அணி ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கிண்ணத்தை 44 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் பாரிய வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: இறுதியில் ஜேர்மனியும், ஸ்பெயினும் பலப்பரீட்டை.
PTR.   
28. June 2008 05:00
euro_2008_cup_final.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடரின் வெற்றியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான கட்டத்தை போட்டிகள் எட்டியுள்ளன. ஓஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் ஏதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2008) இரவு 8.45 இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் 3 முறை ஐரோப்பியக் கிண்ணம் வென்ற ஜேர்மனியும், ஒரு முறை கிண்ணம் வென்ற ஸ்பெயினும் மோதுகின்றன.
விபரம்
 
ஸ்பெயினின் அபார ஆட்டம் ரஷ்யாவை புறம்தள்ளியது
ரி.என்.ஜே   
27. June 2008 19:47
spain_fussballer.jpgஐரோப்பிய கிண்ணப்போட்டிகளின் அரையிறுதியாட்டம் சுவிற்சர்லாந்தில் முடிவுற்று அதன் ஆர்ப்பரிப்புக்கள் அடங்குவதற்குள் மீண்டுமொரு எதிர்பார்ப்பு மறுநாளே ஒஸ்ரிய தலைநகர் வியனில் மையம் கொண்டது. ஸ்பெயின், ரஷ்ய நாட்டவர்களின் உதைபந்தாட்டட ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பளிப்பது போல வியன் நகர (Wien)வீதிகள் விழாக்கோலம் பூண்டன. இரு நாட்டு தேசியக்கொடிகளும் வீதிவீதியாக உலா வந்தன.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: 14 ஆண்டுகளின் பின்னர் ஸ்பெயின் இறுதிக்கு தெரிவு.
PTR.   
27. June 2008 05:03
spain_23_cassilla.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின்  இரண்டாவது அரையிறுதியில் துடிப்பு மிக்க ரஷ்யா அணியை, பலம்பொருந்திய ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 14 ஆண்டுகளின் பின்னர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இதன் மூலம், 1964 ஆம் ஆண்டு கிண்ணம் வென்ற ஸ்பெயின் மீண்டும் கிண்ணம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
விபரம்
 
ஜேர்மனியின் எழுச்சியும் துருக்கியின் வீழ்ச்சியும்
ரி.என்.ஜே   
26. June 2008 18:18
deutschland.jpgஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் முடிவுக்கட்டத்தை அண்மித்துக்கொண்டிருக்கையில் சுவிற்சர்லாந்து நாட்டில் நடைபெறும் இறுதி ஆட்டமான ஜேர்மனி துருக்கி இடையிலான அரையிறுதியாட்டம் அமைந்தது. மூன்று நாடுகளின்  எல்லையாக விளங்கும் சுவிற்சர்லாந்தின் முக்கிய நுழைவாசல் நகரான பாசெல் நகரிலுள்ள சென் ஜேக்கப் பார்க் மைதானம் ஜேர்மனி துருக்கிய ரசிகர்களின் ஆரவார ஆடல் பாடல் களியாட்டங்களுக்கிடையே விழாக்கோலம் பூண்டது. வேக வீதிகள், உள்ளூர் வீதிகள் எங்கும் சாரை சாரையாக ஊர்திகள் ஊர்ந்து வந்தன. 
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: 2வது அரையிறுதியில் ஸ்பெயினும், ரஷ்யாவும் இன்று.
PTR.   
26. June 2008 06:17
ru_sp.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடன் மோதும் அணியைத் தெரிவு செய்யும் மிக முக்கியமான இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஒஸ்திரியாவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பலம்பொருந்திய ஸ்பெயினும், ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஷ்யாவும் ஆடுகின்றன.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: துருக்கியை போராடி வென்று இறுதிக்குள் நுழைந்தது ஜேர்மனி.
PTR.   
26. June 2008 05:40
ger_26_1.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முதல் தகுதி பெற்ற அணியென்ற பெருமையை துடிப்பு மிக்க துருக்கி அணியைத் தோற்கடித்து, பலம்பொருந்திய ஜேர்மனிய அணி பெற்றது. பலத்த ஆரவாரங்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் சுவிற்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற இந்த  முதல் அரையிறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: முதல் அரையிறுதியில் ஜேர்மனியும், துருக்கியும் இன்று.
PTR.   
25. June 2008 05:53
tur_251.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்பு மிக்க இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. பல்வேறு எதிர்வுகூறல்களையும் பொய்யாக்கி இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலம்பொருந்திய ஜேர்மனியும், துடிப்பு மிக்க துருக்கியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பு மிக்கதாக இருக்கும் என்று நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
விபரம்
 
ஐரோப்பியக் கிண்ணம் 2008: போராடித் தோற்றது இத்தாலி, அரையிறுதியில் ஸ்பெயின்.
PTR.   
23. June 2008 05:09
spain_23_cassilla.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி காலிறுதி ஆட்டத்தில் உலகக் கிண்ண வெற்றியாளர்களான  இத்தாலியைத் தோற்கடித்து ஸ்பெயின் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம், ஒஸ்திரியாவில் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் ரஷ்யாவுடன், ஸ்பெயின் மோதும். கடந்த 24 வருடங்களுக்கு பின் ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி பெற்றள்ளது.
விபரம்
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 58