20. ஜூலை 2008 10:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
5. ஜூலை 2008 06:59
16. ஜூன் 2008 00:09
23. ஜூன் 2008 21:38
16. ஜூன் 2008 00:19
28. ஜூன் 2008 23:53
கட்டுரைகள்
சிறப்புப் பார்வை-உலகின் இரட்டை அளவு முறைகளும் பலியாகும் அப்பாவி இனங்களும். ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: பத்மா   
8. ஜூலை 2008 19:12
மனித உரிமை மக்களாட்சி, மக்களின் கருத்துச் சுதந்திரம் ,ஊடக மற்றும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி கூரை மீதேறிக் கொக்கரிக்காத அரசுகளும் அரசியல் வாதிகளும் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர்களே தாம் நினைத்தபடி பிறர் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட்டு வகை தொகையற்ற கடத்தல் , கற்பழித்தல், கொலை, களவு, காணாமல் செய்து ஆளையே கொன்று புதைத்து விடுதல் என்பன எல்லா நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும். சட்டம் ஒழுங்கு என்ற சாட்டில் சட்டமும் அப்பாவிப் பொது மக்களும் இருட்டறைக்குள் தவிக்கின்றனர். இதில் உலகின் நாட்டாமை நாடுகளின் பங்களிப்பு பற்றி இங்கு பார்வையே இது.
விபரம்
 
நேற்றுப் பொங்கியது ! இன்று பொங்குகிறது ! நாளையும் பொங்க வேண்டும் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: ஈழப் பிரியன்   
7. ஜூலை 2008 19:41
poongutamil_.jpg1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை.
விபரம்
 
தற்கொடையாளரின் நெஞ்சுறுதி கண்ணுற்று உலகே வியக்கின்றது! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: நிலவரம்   
5. ஜூலை 2008 08:54
bt.jpgயுலை! இது கரும்புலிகள் மாதம். யாரிந்தக் கரும்புலிகள்? காலக் கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்கள்! கந்தகத்தை நெஞ்சில் சுமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினர். அணுவாயுதங்களை அழித் தொழிக்கப் பிறந்திட்ட உயிராயுதங்கள்! 1987 ஆம் ஆண்டில் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக் குழந்தைகள்.
விபரம்
 
திருப்புமுனைகள் பல தந்த கரும்புலிகள் ஒரு தனிப்பலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: -க.ப.துஸ்யந்தன்-   
5. ஜூலை 2008 06:59
miller.jpg1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய வடிவம் ஒன்று பிறப்பெடுத்த நாளை யாரும் மறந்திருக்க முடியாது.நெருப்புக் குளித்து நின்ற தேசத்தில் தனி ஒருவனாய் பொறுப்புச் சுமந்து போய்வெடித்த அந்த அற்புத தியாகத்தின் தோற்றுவாய் அன்று ஒரு பெரும் மாறுதலை எம் விடுதலைப் போராட்டத்திற்கு பெற்றுத்தந்தது.
விபரம்
 
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமும் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: நிலவரம்:வன்னித்தம்பி தங்கரத்தினம்   
30. ஜூன் 2008 18:50
1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம்.
விபரம்
 
குடாநாட்டில் தரையிறங்கத் தயார் நிலையில் புலிகள்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி   
28. ஜூன் 2008 23:53
see_Tigier.jpgகளமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்கினாலும் நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர். அதேநேரம யாழ் குடாநாட்டை இராணுவத்தினர்  தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது.
விபரம்
 
ஒபாமாவினால் புலிகள் தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு மாறுமா? : இலங்கையில் தோன்றியிருக்கும் கலக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: மகேஷ் பிரசாத்   
28. ஜூன் 2008 15:18
obama.jpgமாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபரம்
 
உள்ளிருந்து ஒரு குரல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: அம்பலி   
26. ஜூன் 2008 06:38
வன்னிக்களத்தின் முதன்மை இலக்கொன்றில் நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது. பஞ்சுடரின் மோட்டார் சுடு கருவி. பஞ்சுடருக்கு கொடுக்கப்பட்டது ஒரு மோட்டார் தொகுதியின் பொறுப்பு மட்டுமே. ஆனால் அவளின் திறமை கருதி அவளது தளபதி இரண்டு மோட்டார் தொகுதிகளின் பொறுப்பை அவளிடம் கொடுத்தார்.
விபரம்
 
உலகளாவிய ஈழத் தமிழின அழிப்பு ! சிங்களத்தின் வெற்றிகரப் பரப்புரை !! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: வன்னித்தம்பி தங்கரெத்தினம்   
23. ஜூன் 2008 21:38
கருத்துருவாக்கப் பரப்புரையில் தமிழின ஒழிப்பு வேலையைச் சிங்களம் இரகசியமாக ஆனால் மிகச் சாதுரியமாக உலக அளவில் சாதித்து வருகிறது. அறுபது நாடுகளில் அமைப்பு ரீதியாகச் செயற் பட்டும் ஈழத் தமிழினம் ஏமாந்து நிற்கிறது. ஈழத் தமிழருக்கு தனியான தேசியமோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உலகம் ஏற்கச் செய்யவும் இலங்கையில் இருப்பது இனப் பிரச்சனை அல்ல புலிப் பயங்கரவாதமே என்பதையும் நிரூபிக்கும் வகையிலும் நிரந்தரமான பரப்புரையை சிங்களம் உறுதிப் படுத்தி விட்டது.
விபரம்
 
பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் :வண. பிதா ஜெகத் கஸ்பார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: நிலவரம் பத்திரிகை   
16. ஜூன் 2008 00:19
balraj5.jpgவானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது.
விபரம்
 
ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்படுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக சண் தவராஜா   
16. ஜூன் 2008 00:09
iran.jpg ணு வல்லரசாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா? ஈராக் மீதான ஆக்கிரமிப்பாலும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும் ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப் போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திர நிலை மேலும் குழம்பிப் போகுமா? உலகின் அநேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் எரிபொருட்களின் விலை மேலும் உயர வழி செய்யுமா? இது இன்றைய உலகில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 99