22. November 2008 09:42
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
29. September 2008 22:52
12. October 2008 00:13
13. October 2008 13:01
27. August 2008 15:01
கட்டுரைகள்
தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுமிக்க போராட்டங்களும் இந்திய அரசியலும் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: பத்மா   
26. October 2008 11:43

வீரவசனங்கள் விசில் அடிப்புக்கள் கை தட்டல்கள் கடல் அளவு வாங்கியவர் கலைஞர். எவரும் பதவிப் பொறுப்புக்கள் பாசப் பிணைப்புக்கள் வந்த பின்புதான் அவற்றால் பெற்ற பேருக்கும் புகழுக்கும் உள்ள சுமை தெரியும். கலைஞரின் செயற்பாடு ஈழத் தமிழினத்துக்கு இது வரை காலமும் ஏமாற்றம் தந்தன என்பது உண்மை. ஆனால் அவர் எத்தகைய ஒரு கீழ்த் தரமான எதிரியை வைத்துக் கொண்டு தமது தமிழ் உணர்வையும் தமிழினப் பாசத்தையும் வெளிப் படுத்த வேண்டும் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

விபரம்
 
மற்றுமொரு வரவை–மீறிய செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தயாராகும், 'மஹிந்த அரசு'. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
15. October 2008 12:52
mahinda_think.jpgநாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏழு வீதம் என, 2008ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை பாராளுமன்றத்தில் கடந்த வருடம் சமர்ப்பித்து உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வளவு பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவித அறிகுறியும் நாட்டிலில்லை என்கின்றனர் பொருளியலாளர்கள். இந்த நிலையில், 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிக்க மஹிந்த அரசு தயாராகி வருகின்றது. இதில், 17,610 கோடி ரூபாய்களை பாதுகாப்பு செலவீனங்களுக்காக மாத்திரம் ஒதுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
விபரம்
 
ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய தமிழகத்தின் இப்போதைய வெளிப்பாடுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பீஷ்மர்   
13. October 2008 13:01
india.jpgஆங்கிலத்தில் "பனிக்கட்டி திரள்கை' என்ற ஒரு மரபுத் தொடர் உண்டு. அதாவது, சிறிதாக உருளத் தொடங்கிய பனிக்கட்டி ஓடிச் செல்கையில் படிப்படியாக அளவில் பெரிதாகி ஒரு பிரமாண்டமான உருவத்தைப் பெறும் நிலைமையைக் குறிப்பதற்கு மேலை நாட்டின் சீதோஷ்னப் பண்பாட்டிற்கமைய இவ்வாறு கூறுவது மரபு. 
 
விபரம்
 
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
12. October 2008 00:13

அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன.

விபரம்
 
புலிகள் எதிர்கொண்டிருப்பது அவர்களின் இறுதிக் கட்டச் சமரா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: அங்கதன்   
11. October 2008 23:48

வன்னிச் சமர்க்களத்தில் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது நடக்கின்ற சமர்கள், அரச தரப்பு குறிப்பிடுவது போன்று இறுதிக் கட்டத்;தை நோக்கிய பயணமா என்பன பலராலும் பேசப்படுகின்ற விடயமாக இருக்கிறது.இந்த நிலையில், இப்போது படையினர் வன்னியின் மேற்குப் போர்அரங்கில் அதாவது, ஏ-9 வீதிக்கு மேற்காக எங்கெங்கு நிலை கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் பலம் என்ன?  பலவீனம் என்ன?

விபரம்
 
இந்திய அரசுக்கு இது பொன்னான சந்தர்ப்பம் பயன்படுத்துமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்   
4. October 2008 12:47
நடக்கப் போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் காட்சிக்கு ஜாக் பொட் அடிக்கும் சான்ஸ் கிடைத்து இருக்கிறது. அதனைக் காங்கிரஸ் கட்சி பயன் படுத்துமா என்பதே இப்போது உள்ள கேள்வி ? இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கை எல்லை மீறிப் போய் உலக நாடுகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலைக்கு வந்து விட்டது. இலங்கை இராணுவ வன்னிப் படைக் கட்டளைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய ஈரூடகத் தாக்குதலில் இரண்டு இந்திய ராடார் பொறியியலாளர் காயம் அடைந்ததால் தமிழகம் கொதிப் படைந்திருக்கிறது.
விபரம்
 
ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பின்புலதாருக்கு வலித்திருக்கும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
மதி   
3. October 2008 18:45
வவுனியாவின் அதிகாலைப்பொழுதை அதிர வைத்த வெடியோசை சிறீலங்காவின் அரசையும் படைத்தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தேர்ந்தெடுத்த இலக்கு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியதொன்றல்ல. ஜோசப் படைதளம் என்றால் அது புலிகள் மூச்சுக்கூடப் பட்டுவிட முடியாத இடமாக படையாள் ஒருவர் தொடக்கம் சிறீலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகா வரை அதீத நம்பிக்கை வைத்திருந்த இடம்.
விபரம்
 
உளவியல் போரும்,பிரசாரப் போரும்,அரசுக்கு வெற்றியைத் தேடித் தருமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு:அங்கதன்   
29. September 2008 22:52

வன்னிப் படைகளின் தலைமையகம், வவுனியா விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதான புலிகளின் வான் தாக்குதல்களை அடுத்து இலங்கை விமானப்படை தனது இயலாமையை வன்னியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது காட்டி வருகிறது.

விபரம்
 
பண மழை பொழியட்டும் ! பசித்த வயிறு குளிரட்டும் ! கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்கொடுப்போம் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு; பத்மா   
27. August 2008 15:01
vanni_refug1.jpgஇலங்கையின் இனவெறி அரசும் அரச படைகளும் வன்னிப் பெருநில எம் மக்கள் மீது தடைகள் மேல் தடைகளப் போட்டுப் பசியும் பிணியும் கொள்ள வைத்தது. வாழ்வியல் ஆதாரங்களை முடக்கிப் பொருளாதாரத் தடைகளைப் போட்டது. விமானக் குண்டுகள் போட்டும் பல்குழல் எறிகணை செலுத்தியும் பட்டிணி போட்டும் படை நடத்தியும் பதி எழுப்பிப் படை நடத்திக் கொட்டம் போட்டது. திருமலையில் தமிழீழ விடுதலை விமானப் படையால் அடிபட்டுத் தவிக்கிறது. எம்மை எல்லாம் மகிழ வைக்கும் அற்புதமான அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திதான். ஆனாலும் எம் உண்மையான மகிழ்ச்சி வன்னிப் பெருநில தமிழ் மற மக்களின் மகிழ்ச்சியில்தான் உள்ளது.
விபரம்
 
திகில் தரும் மயான அமைதி கூறும் செய்தி என்ன ? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்   
21. August 2008 23:30
வன்னேரி-அக்கராயன் அகதிகள் முரசம்.chஇலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் ஊடகச் செய்திளும் அரச தரப்பினரின் அரசியல் மேடைப் பேச்சுகளும் தமிழ்ப் பொது மக்களின் வயிற்றைக் கலக்கும் அளவுக்கு பீதியை உண்டு பண்ணிக் கொண்டு வருகின்றன. வன்னிப் பகுதி மக்களின் துயரும் துன்பமும் எளிதில் எவராலும் புரிந்து கொள்ளவோ எளிதில் மற்றவருக்குப் புரிய வைக்கவோ முடியாதவை. அத்தனை பெரிய சோகத் துயரில் பெருமழையும் எதிரியின் குண்டு மழையும் மேலும் அவர்களின் நாடி நரம்புகளை வருத்துகின்ற வேளை இது. இன்று அவர்களுக்குப் பக்க பலமாகவும் உயிர் காக்கும் அருமருந்தாகவும் இருக்க வேண்டியவர்கள் அவர்களின் உறவுகளாகிய புலம் பெயர் தமிழ் மக்களே.
விபரம்
 
சிலு சிலுப்பு பணியாரம் ஆகிவிடாது !சிறுமதியோர் வீராப்பும் வெற்றி தராது ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: முரசத்திற்காக பத்மா   
19. August 2008 23:28
helphand.jpgவீடும் நாடும் இழந்து கண்ணீரும் செந்நீரும் சிந்தி உணர்வுகளையும் இன்பங்களையும் கொன்று , உயிர்களை விதைத்து வீரத்தைப் பயிரிட்டு விடுதலையை அறுவடை செய்ய வேண்டிய இனமாக நம் இனம் உலகில் தனித்துப் போராடுகிறது. இந்த உண்மையை நாமும் உணர்ந்து பிற உலகினர்க்கும் உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எமது பெரும் அறிவுப் போரியல் பிரச்சாரப் பெட்டகமாகத் திகழ்ந்த  பாலா அண்ணாவைக் காலன் பறித்தான். அதனால் புலத்தில் எம் கலங்கரை விளக்கம் மறைந்தது. சிரிப்புத் தூதனான பிரி கேடியர் தமிழ்ச் செல்வனை கயவர் கொன்றனர். இதனால் பிற நாடுகளுடன் உருவாக்கப் பட்ட அரிய ராஜரீகத் தொடர்புகளும்  துண்டிக்கப் பட்ட நிலையில் புலத்தில் தவிக்கிறோம்.
விபரம்
 
மேலதிகமாக…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 21 / 123