| நாடு எதிர்நோக்கும் அரசியல் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வக்கில்லாத பிரதான க |
|
|
| ஜி.ரி [ஈழம்] | |
| 14. March 2007 11:32 | |
|
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம் (CFA) இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) வினரால் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே. அந்த ஒப்பந்தமானது நாட்டைக்காட்டிக் கொடுக்கும் வகையிலானதும் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானதும் என மேற்படி கட்சிகள் பரப்புரை செய்து வந்துள்ளது மட்டுமல்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாத ஒன்று எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டது
(ஐ)) 2004 டிசம்பர் கடல்கோளால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது அம்பாறை மாவட்டமாகும். மீள் கட்டமைப்பு விடயத்தில் இன்றும் அதே அம்பாறை மாவட்டமே பின்தங்கியுள்ளது. இதை வேறு யாருமல்ல அமைச்சர் பேரியல் அஷ்ரப் அம்மையாரே அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கவலையோடு குறிப்பிட்டிருந்தார். இவ்விடயத்தில் போக்குவரத்து சிக்கல்கள் தவிர்க்க முடியாத தடை தாமதங்கள் போன்ற சாக்குப் போக்குகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஒட்டுமொத்தமான வடக்கு கிழக்கு கடல்கோள் மீள் கட்டமைப்புக்கென அறிமுகப்படுத்தப்படவிருந்த " P-வுழுஆளு" எனப்படும் "கடல்கோளுக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ திட்டம்" நிறைவேற்றப்பட்டிருந்தால் அம்பாறை மாவட்டமும் நிச்சயமாக பெரிதும் பயனடைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ககூணிட்ண் செயற்பாடானது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கும் குறிப்பிடத்தக்களவு உந்து சக்தியாய் அமையுமென பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்இ அதையெல்லாம் முறியடித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டி நின்ற குறிப்பாக ஜே.வி.பி.யினரே நீதிமன்றத்தின் ஊடாக தமது எண்ணத்தை நிறைவேற்றினர். (ஐஐ) அதுபோலவே 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணங்கள் அண்மையில் பிரிக்கப்பட்டிருப்பதையும் நோக்கலாம். அவ்விணைப்பானது தற்காலிகமானதுஇ அது நிரந்தரமானதாக்கப்பட வேண்டுமாயின் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஒப்பந்தத்தில் விதந்துரைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆயினும்இ சர்வஜன வாக்கெடுப்பு விடயமானதுஇ வருடாவருடம் ஒத்திவைக்கப்பட்டு வந்து 18 வருடங்கள் கழிந்துவிட்டன. எனவேஇ இணைப்பு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்புகள் நடைமுறையிலானதொரு நிரந்தரத் தன்மையை எட்டிவிட்ட நிலையில்இ வடக்கு கிழக்கு நாடு முழுவதையும் போலவே பல்லினஇ பல்கலாசாரம்இ கொண்ட பிராந்தியம் என்ற வகையில் அதனை சட்ட பூர்வமாக நிரந்தரமாக்குவதை விடுத்து அதனைத் துண்டாடியாக வேண்டுமென்று துடியாய்த்துடித்தே ஜே.வி.பி.யினர் நீதிமன்றம் சென்றனர். 1987 இல் ஏற்படுத்தப்பட்டிருந்த இணைப்பு சட்டரீதியானதல்ல எனும் அடிப்படையிலேயே மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க கிழக்கு வடக்கோடு இணைந்திருக்க வேண்டுமா என்பதை கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டுமென 07.11.2006 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். அதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய மறுநாளே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பது மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமென கூறியிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்தவர்களாகிய சிரேஷ்ட அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கலாநிதி சரத் அமுனுகம போன்றோர் அத்தீர்ப்பானது குறிப்பாக இன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக நிலவும் சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் வரவேற்புக்குரியதல்ல. அது சர்வதேச ரீதியிலும் சற்று சலிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றெல்லாம் ஷ்ரீ.ல.சு.க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். எவ்வாறாயினும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது வடக்கு கிழக்கு உடனடியாக பிரிப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என அர்த்தம். கற்பித்து துரித கதியில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டம் பிறிதொரு பிரிவாகவும் கூறு போடப்படுகின்றது. ஆக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு 3 கூறுகளாக துண்டாடப்பட்டுள்ளன. இதுதான் பிரிவினையை எதிர்ப்பதாக ஓங்கி ஒலிப்பவர்கள் அரங்கேற்றியுள்ள பிரிவினை நாடகம் ஆகும். இலங்கை - இந்திய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலானதாகையால் அதன் மீது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை சரியா தவறா என்பதும் எண்ணிப்பார்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஐ.தே.க. மற்றும் ஷ்ரீ.ல.சு.க. இரண்டும் இணைந்தோ தனியாகவோ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்றவை என்பதைக் காணலாம். இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் மட்டுமல்லாமல்இ கட்சிகளுக்குள்ளேயும் குத்து வெட்டுகள் மலிந்திருப்பதைக் காணலாம். இது இன்று நேற்றல்ல இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க காலம் முதல் இருந்து வந்துள்ள விடயமாகும். அன்று டி.எஸ். தனக்குப் பின் மகன் டட்லி சேனாநாயக்கா பிரதமராக வேண்டுமென்ற அவாவின் மேலீட்டினால் அப்பதவிக்கு வேண்டிய மூப்பும் பிற தகைமைகளையும் கொண்டிருந்தவராகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவை ஓரங்கட்டி வெளியேற்றுவதற்கு அன்றைய தேசாதிபதி சோல்பரி பிரபுவுடன் சேர்ந்து சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்தார். சோல்பரி அதற்கு மிகவும் ஒத்திசைவாகவே கருமமாற்றி வந்தார். எனவே மிகுந்த விரக்தி காரணமாகவே பண்டாரநாயக்க ஐ.தே.க.வை. விட்டு வெளியேறி 1951 இல் ஷ்ரீ.ல.சு.க. வை ஸ்தாபித்தார். கட்சியின் ஆரம்ப விஞ்ஞாபனத்தில் சிங்களம்இ தமிழ்இ இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக விளங்கும் என வரையப்பட்டிருந்தது. இதனிடையில் ஐ.தே.க. 1955 இல் தனிச் சிங்களம் தொடர்பான பிரேரணை ஒன்றினை நிறைவேற்றியதை அடுத்து பண்டாரநாயக்க குத்துக்கரணம் அடித்து விரைந்து பிரதமர் பதவியை எட்டுமுகமாக "24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களம்" எனும் கோஷத்தினை முன்வைத்து 1956 தேர்தலில் வெற்றியீட்டியது வரலாறு. டட்லி ஒரு கனவான் என அன்று சில தமிழ் தலைவர்கள் வர்ணித்ததுண்டு. மிக அண்மையில் கூட டட்லி நெஞ்சில் ஈரம் நிறைந்த வஞ்சகமற்ற தலைவர் என ஒரு பிரபல தமிழ் அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டிருந்தார். அதே டட்லி தான் எவ்வாறு பண்டாரநாயக்க பண்டா - செல்வா ஒப்பந்தத்தினை 1957 இல் பௌத்த துறவிகள் குழுவொன்றுக்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தாரோ அவ்வாறாகவே 1965 டட்லி - செல்வா ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிந்தவர்; மற்றும் கோணேஸ்வரத்தை "புனித பிரதேசம்" என பிரகடனப்படுத்த வேண்டுமென காலஞ்சென்ற அமைச்சர் மு. திருச்செல்வம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தவரும் அதே டட்லி தான். இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பினை மீட்டுப்பார்ப்பது பொருத்தமானதாயிருக்கும். அதாவது முன்னாள் வவுனியா பா.உ. காலஞ்சென்ற செ. சுந்தரலிங்கம் எழுதிவைத்த தொடர் கட்டுரைகளில் டி.எஸ். சேனநாயக்க தனது மகன் டட்லியை விட கூடுதலாக நாட்டை நேசித்திருந்தால் நாட்டின் வரலாறே வேறாக அமைந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தமை ஆகும். எவ்வாறாயினும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு வளைந்து கொடுத்து செயற்பட்டு வருபவையான ஷ்ரீ.ல.சு.க. அல்லது ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கங்கள் எதுவும் தமிழ் பேசும் மக்களுக்கு ஏன் ஏழை எளிய சிங்கள மக்களுக்கும் கூட உருப்படியான விடுதலையையோ விமோசனத்தையோ கொண்டுவரப்போவதில்லை. இன்று வாழ்க்கைச் செலவோ என்று மில்லாதளவுக்கு உயர்ந்துள்ளது. பணவீக்கமானது 21 சதவீதத்தை தாண்டும் நிலையில் சாதாரண பொதுமக்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். மத்திய வங்கியை பிணியொன்று பீடித்துள்ளது எனும் தொனியில் மத்திய வங்கி ஆளுநரே அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். எனவே இரு பிரதான பேரினவாத சார்பு கட்சிகளையும் குறிப்பிடத்தக்களவு பலவீனப்படுத்தும் வகையில் அடக்கி ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வரும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன்இ காட்டிக் கொடுப்புகள் இன்றி செயற்பட்டு வரும் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கரங்கள் பலப்படுத்தப்படுவது மிக அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
நன்றி தினக்குரல்
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




