22. November 2008 08:12
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
11. October 2008 23:48
21. August 2008 23:30
4. October 2008 12:47
15. October 2008 12:52
கட்டுநாயக்க தாக்குதலும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஜி.ரி [ஈழம்]   
2. April 2007 02:04

அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது.

புலிகளுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற ஹஇக்கட்டு சிந்தனை' சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான ஹஇக்கட்டு சிந்தனை' தான். ஏனெனில்இ எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தையும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும். தாக்குதலுக்கு முந்திய பகுப்பாய்வு வேவுத் தகவல்களிலேயே தங்கியுள்ளது. வேவு மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பான வகையில் அமையுமாயின் முழு அளவிலான போரின் ஆரம்பமே அஸ்தமனத்தை நோக்கியதாகவே அமையும்.

வேவுத் தகவல் சேகரிப்பின் ஆக்கபூர்வ அமைவாக்கம் என்பது நுண்ணியதும் நுட்பமானதுமான தரவு சேகரிப்பில் தங்கியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே தாக்குதல் திட்டங்கள் தீட்டப்படுவது வழமை. ஆகவே ஒரு தரப்பு தனது எதிரியின் தாக்குதல் திட்டத்திற்கு அடிப்படையான வேவுத்தகவல் சேகரிப்பை குழப்பி விடுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படும். அதனூடாக எதிரியின் தாக்குதல் திட்டத்தை முறியடிப்பது இலகு.

அதனைத்தான் (ஹஇக்கட்டு சிந்தனை') இலங்கைத் தீவினுடைய போராட்ட களத்தில் புலிப் போராளிகள் திட்ட மிட்டு மேற்கொண்டனர். புலிகளுடைய இந்தப் பாணி ஒன்றும் புதியதல்ல. ஆனால்இ அதன் வடிவம் புரிய கடினமானது. மூன்று தசாப்த காலத்தில் ஒருமுறை கூட புலிகளுடைய இக்கட்டு சிந்தனை உண்டாக்கத்தை சிறீலங்கா அரசாலோ அன்றேல் அவர்களது படையினராலோ சரிவர கணிப்பிடமுடியாமை என்பதுவும் புலிகளுடைய வெற்றிகளுக்கான காரணங்களிலொன்றாகக் காணப்படுகிறது. வீரதுங்காஇ அத்துலத் முதலிஇ ரஞ்சன் விஜேயரட்ணஇ அனுருத்த ரத்வத்த போன்றோர் எவ்வாறு புலிகளால் ஏமாற்றப்பட்டார்களோ அதுதான் இன்று கோதாபய ராஜபக்‌ஷவுக்கும் நடக்கிறது.

இந்த உபாயம்தான் புலிகளுடைய தந்திரோபாய வெற்றியாகவும் சிங்களத்தின் தோல்வியாகவும் கொள்கை வகுப்பாளர்களால் கருதப்படுகிறது. இருப்பினும் சிங்களப் பேரினவாதம் இன்னும் தனது தவறுகளை நிவர்த்தி செய்ய யோசிக்காமல் தொடர்ந்தும் கனவுலகிலும் மாயையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தான் மட்டும் இன்றி தனது மக்களையும் அவ்வாறே வாழத் தூண்டுகிறது.

இது போன்ற நிலையே ஹஇறுதிப்போருக்கான நுழைவாயிலை' புலிகள் வெற்றிகரமாக திறப்பதற்கு துணைநின்றது. இந்த துணைநிற்றலின் தோற்றுவாயென்பது புலிகளால் உண்டாக்கப்பட்டதென்பதுதான் சிங்கள பேரினவாதத்துக்கு அச்சத்தைஇ அதிர்ச்சியைஇ ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய மூன்று அம்சங்களும் என்றைக்குமே நிதானமாவும் புத்தி சாதுர்யமாகவும் சிந்திக்க விடாது. நிதானமாவும் புத்திசாதுர்யமும் அற்ற சிந்தனையென்பது புதைகுழி நோக்கிய பயணமாகவே இருக்கும். இதனுடைய மறுதலை யாதெனில்இ தமிழர்களுடைய தளை நீக்கத்துக்கான போராட்டத்தின் விரைவு நிலையாகும்.

இந்த அடிப்படையிலேயேஇ கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது கடந்த மார்ச் 26ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் தமிழீழ வான் புலிகள் ( வுயஅடை நுநடய யுசை வுபைநசள- வுநுயுவு) அல்லது தமிழீழ வான் படையினர் (வுயஅடை நுநடய யுசை குழசஉந- வுநுயுகு) நடத்திய அதிர்ச்சி மிகுந்த அதிரடித் தாக்குதலை நோக்குதல் பயன்மிக்கதாக அமையும்.

வான் புலிகளின் தோற்றம்

தமிழீழ விடுதலை புலிகளிடம் வான் படைப்பிரிவும் உள்ளதென்பது 1998 ம் ஆண்டிலேயே தெரியவந்தது. 1998-11-27 மாவீரர் தினத்தன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ வான் படையினரின் வானூர்திகள் மாவீரருக்கு மலர்தூவி அஞ்சலி செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. வான்புலிகளின் வளர்ச்சியில் கேணல் சங்கர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இவர் விமானப் பறப்பு தொடர்பான பயிற்சியையும் வான்படை உருவாக்கத்திற்கான படிப்பையும் கனடாவில் பெற்றதாக ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ வான்படையின் விமானங்கள் வடக்கு வான்பரப்பில் பலதடவை பறந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் இருப்பதென்பதை சிறீலங்கா படைகளின் உளவு விமானமான க்அங படம் பிடித்திருந்த போதும் சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து நிவாரணப் பணியென்ற போர்வையில் வந்த சில நாட்டின் பிரதிநிதிகளினாலேயே அது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் ஒரு தாக்குதல் இடம்பெற்று முடிந்த பின்னரும் கூட வான் புலிகளிடம் எந்த ரக விமானம் உள்ளதென்பதை யாரும் திட்வட்டமாகக் கூறவில்லை.

ணுடுஐN ணு- 143 அல்லது சுவிஸ் தயாரிப்பான பிளற்ரஸ் ஹீஊ-7 அல்லது Pஊ 21 இருக்கக் கூடுமென கருதப்படுகிறது. விமானப் பறப்புக்கான பயிற்சிகளை வான் புலிகள் கனடாவிலும் சுவிஸிலும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1250 மீற்றர் நீளமான விமான ஓடு பாதை இரணைமடுவிலும் புதுக்குடியிருப்புக்கு அண்மித்த பிரதேசத்திலும் அமைக்கப்பட்டிருந்ததாகவும்இ அவற்றை இனங்கண்ட சிறீலங்கா விமானப் படை விமான ஓடுபாதையை வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வான்புலிகளின் தாக்குதலானது சிறீலங்கா விமானப் படையின் கூற்று பொய்யென நிரூபித்துள்ளது.

புலிகளைப் பொறுத்தவரை ஒரு மாதிரி போதும் பல அசல்களை உருவாக்க. தொழிட்நுட்ப ரீதியாக சிறப்பு நிலையடைந்தவர்கள் கணிசமான தொகையினர் அவர்களிடம் உள்ளனர். இவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பே ஜொனி மிதிவெடியாகஇ அருள் 81 மோட்டாராகஇ பசீலன் எறிகணையாக கடந்த காலத்தில் வெளிப்பட்டிருந்தது. சிறப்புத் தேர்ச்சி அடைந்தவர்களைக் கொண்ட புலிகளின் தொழில்நுட்பப் பிரிவினூடாக எதிர் காலத்தில் வானூர்திகளை உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன.

கொழும்பிலுள்ள நண்பர் ஒருவருடன் தொடர்பு கொண்டு வான் புலிகளின் தாக்குதல் தொடர்பாகக் கேட்ட போது பின்வருமாறு குறிப்பட்டார்.

ஹ ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை அவர்களின் மகனால் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தலைவலி இருந்து வந்தது. ஆனால்இ இனிமேல் பிரபாகரன் அவர்களின் மகனும் தென்னிலங்கைக்கு தலைவலியாக இருக்கத் தொடங்கி விட்டார்' என்பதே விமானத் தாக்குதல் சொல்லும் ஒரு சேதியாகும் எனக் குறிப்பிட்டார்.

வானுயர்ந்த புலிவீரம்

தற்கொலைத் தாக்குதல்களுக்கே புலிகள் விமானங்களை பயன்படுத்துவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும்இ புலிகளோ தமது விமானங்களை அதிரடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியதுடன் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளார்கள். அதுவும் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள். இதிலுள்ள விசேட அம்சம் யாதெனில்

1. சிறீலங்காப் படையினரின் ராடர் கருவிகளுக்குள் சிக்காமல் சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் பறப்பிலீடுபட்டிருக்கிறார்கள்.

2. மின்குமிழ்களை ஒளிர விடாமல் பறப்பிலீடுபட்டனர்.

3. நடுநிசிப் பொழுதிலும் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.

4. புவியியல் அமைவுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புத்தளம்இ வில்பத்து போன்ற பகுதிகளில் மரங்களோடு உரசுவது போல் வானூர்திகளை செலுத்தியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்டது போன்ற விசேட அம்சங்கள் சிறீலங்கா விமானப் படையினராலேயே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில் வான்புலிகள் தமது திறமையை தமது நுழைவுத் தாக்குதலினூடாக வெளிப்படுத்தியுள்ளார்கள். வான் தாக்குதலின் நோக்கம்

மேற்குறிப்பிட்ட தாக்குதலானது தமிழர்களுக்கான தனியரசு என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் குறைந்தது ஐந்து குறிக்கோள்களை அடைவிலக்காகக் கொண்டிருக்கலாம். அவையாவனஇ

1. சிறீலங்கா விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் பலத்தையும் அதன் தொடர்பாடல் திறனையும் இயன்றவரை வலுவிழக்கச் செய்தல.

2. உளவியற் போரூடாக சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் மனோரீதியான தாக்கத்தை உண்டுபண்ணல்.

3. சிறீலங்காப் படைகளின் மையக் கவனத்தை சிதறடித்தல் அல்லது திசைதிருப்பல்.

4. தமிழ் மக்களுக்கு தென்பூட்டல்

5. புலிகளின் பலத்தை நிரூபிப்பதனூடாக இராணுவ வலுச் சமநிலையின் உண்மை நிலையை வெளிப்படுத்தல்

6. புலிகளென்றால் யாரென்பதை சிங்கள மக்கள்இ சிங்கள பேரினவாத அரசு மற்றும் சர்வதேச சமூகத்துக்கு புரியவைத்தல்.

அத்துடன்இ சிறீலங்கா விமானப் படையினின் தளத்துக்கு அருகிலே இருந்த சிவில் விமானத் தளத்துக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமை புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு இக்கட்டு நிலையை உண்டுபண்ணியுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலை

சுமார் 270 நாட்களாக தாம் ஈட்டிய வெற்றியென அரசினால் காண்பிக்கப்பட்ட வெற்றிப் பெருமிதங்கள்இ மார்தட்டல்கள்இ கர்ச்சனைகள் போன்றவை எல்லாவற்றமையுமே சில வினாடிகளுக்குள் வீழ்ந்த மூன்று குண்டுகள் சிதறடித்துள்ளன. அரசு கூறுவது போல் உண்மையிலேயே சிறீலங்கா வான்படையினருக்கு இழப்புகள் இல்லையாயின் ஏன் ஊடகவியலாளர்கள்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை? வாகரையிலும் சம்பூரிலும் தாம் வெற்றி பெற்றதாகக் கூறி அதனை காட்டுவதற்காக ஊடகவியலாளர்களை பாதுகாப்பற்றதும் தொலைவிலுள்ளதுமான பகுதிக்கு அழைத்துச் சென்ற அரசாங்கத்தால் ஏன் கட்டுநாயக்காவிற்கு கூட்டிச் சென்று நடந்தது இதுதான் என விபரிக்க முடியவில்லை? இராஜதந்திரிகளையே கிழக்கு மாகாணத்திற்கு கூட்டிச் சென்றவர்கள் ஏன் கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க வானூர்தி தளத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுத்தி நிறுத்தினார்கள்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட றாடர்கள் சரியாக செயற்படவில்லையென கூறி தமக்குள்ள பொறுப்பிலிருந்து பொறுப்பானவர்கள் நழுவ முடியாது. ஒரு நாட்டின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையொன்று இடம்பெறுமாயின் உடனடியாகவே அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ பதவி விலகுவது உலக வழக்கம். இலங்கை உலக வழக்கத்தை பின்பற்றுகின்ற நாடெனில் யார் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லையென்பதை ஏற்றுக்கொண்டு பதவி விலகப் போகிறார்கள்? இந்தியாவில் ஒரு ரயில் விபத்து இடம்பெற்றதற்கே அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் 24 மணி நேரத்துக்குள் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் வான்புலிகளின் பாய்ச்சல்

இரட்டைக் கோபுரம் மற்றும் பென்ரகன் மீதான செப்டெம்பர் 11 வான் தாக்குதல்இ ஈராக் மீதான அமெரிக்க சார்பு படைகளின் வான் தாக்குதல்இ லெபனான் மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் ஆகியவற்றுக்கு அண்மித்ததான முக்கியத்துவம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தமிழீழ வான் புலிகளின் தாக்குதலுக்கும் வழங்கப்பட்டிருந்தது. பிபிசிஇ சிஎன்என்இஅல்ஜசீராஇ வாஷிங்டன் போஸ்ட்இ த ஏஜ்இ ரைம்ஸ் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஊடகங்கள் உலக வரலாற்றில் புரட்சிப் படையொன்றினால் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவென்றும்இ தாக்குதல் முறைமையானது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்ற தொனியிலேயே செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த தாக்குதல் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு பெரும் புகழ்மிகு பிரசாரத்தை வழங்கியிருந்ததை சிறீலங்கா அரசாங்கம் கூட மனதளவிலாவது உணர்ந்து கொண்டிருக்கும்.

அரசுக்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு விடுதலை அமைப்பு தமிழர் தேசத்திலேயே உறுதியாகக் கால் பதித்து நிமிர்ந்து நிற்கிறது. விடுதலை அமைப்பு என்னும் பொழுது தனித்து இராணுவக் கட்டமைப்போடு மட்டும் நின்று விடாமல் சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளான காவல்துறைஇ நிதித் துறைஇ நீதி நிர்வாகத் துறை போன்ற துறைகளை முதன்முதலில் நிறுவி சிறப்பாக பேணிவரும் விடுதலைப் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளே என்றும் அத்துடன் அவர்களிடம் மட்டுமே கடற்படையும் வான்படையும் உண்டென்பதுவும் மேற்கூறிய ஊடகங்களால் கூறப்பட்டிருந்தமை நினைவுகூரத் தக்கது

நன்றி தினக்குரல்
 

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >