| அமெரி. கனவுகளைத் தகர்க்கும் ஈராக்கிய கார்க்குண்டுகள் |
|
|
| ஜி.ரி [ஈழம்] | |
| 2. April 2007 02:09 | |
|
ஈராக்கிய தலைநகரில் சந்தைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வாகனத் தாக்குதல்கள் நாளாந்த விடயமாகிவிட்டன. அமெரிக்கா அளித்துவரும் அதீத வாக்குறுதிகளையும் மீறி தற்கொலைக் கார்க்குண்டுதாரிகள் ஷியாஇ ஷுன்னி பகுதிகளை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர். அமெரிக்க காவலரண்களுக்கும் ரோந்து படையணிகளுக்கும் மத்தியில் இவை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி மாதம் பாக்தாத்தில் மாத்திரம் 44 கார்க்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. மார்ச் மாதமும் இதே போன்ற நிலை காணப்பட்டது. ஈராக்கில் கார்க் குண்டுகள் அடுத்த கட்ட வளர்ச்சியை கண்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது குளோரின்இ வாயுவை பயன்படுத்தி முதலாவது இரசாயன வாயு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மெசப்பொட்டாமியாவில் அல்-ஹைடா எனும் அமைப்புடன் தம்மை இனம் காண்பவர்களே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அன்பர் பிராந்தியத்தின் ஷுன்னி பழங்குடியினருக்கு எதிராகவும் பக்தாத்தில் ஷியா யாத்திரிகர்களுக்கு எதிராகவும் இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கார்க்குண்டு தாக்குதல் மூலமும் பக்தாத்தை பாதுகாக்கலாம் என்று அமெரிக்க நம்பிக்கை தகர்க்கப்படுகின்றது. பெப்ரவரி 23 ஆம் திகதி மேற்கு பக்தாத்தில் உள்ள ஹடானியாவில் இடம்பெற்ற தற்கொலை வாகனத் தாக்குதலில் 36 ஷுன்னிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பத்து நாளிற்கு பின்னர் பக்தாத்தின் சந்தைப்பகுதியொன்றில் (புத்தக)இடம்பெற்ற வாகன தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மார்ச் 10 ஆம் திகதி இன்னுமொருவர்கள் தற்கொலைத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். சதா நகரில் அமெரிக்காவின் புதிய தளமொன்றிற்கு அருகில் இது இடம்பெற்றது. இதற்கு மறுதினம் இன்னுமொரு கார்க்குண்டுதாரி ஷியா யாத்திரிகர்களின் மத்தியில் தனது வாகனத்தை செலுத்தி 30 பேரை கொலை செய்தார். இதற்கு ஒரு வார காலத்திற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவம் சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கார் ஒன்றினுள் இரு சிறுவர்களை இருக்க வைத்து அவர்கள் இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சென்ற மறுகணம் காரை வெடிக்க வைத்தனர். கடந்தவாரம் இடம்பெற்ற கார்க்குண்டு மற்றும் தனிநபர் தற்கொலைத் தாக்குதல் மூலம் ஈராக்கின் பிரதி பிரதமர் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும்இ இவை யாவற்றையும் விட முக்கியமானவை கடந்த ஜனவரி முதல் இடம்பெற்று வரும் குளோரின் வாயு தாக்குதல்கள். பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட னுசைவல டீழஅடிள என்பதற்கு இது மாறானது எனப்படுபவை கதிரியக்க பொருட்களை வெளிவிடக்கூடியவை. ஈராக்கில் தற்போது பயன்படுத்தப்படும் குளோரின் குண்டுகள் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வெடிமருந்துகளையும் இரசாயன பொருட்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. குளோரின் வாயு தாக்குதல்கள் தமது தாக்குதல்களின் ஒரு பகுதி என்பதை வெளிப்படுத்துவதற்காக ஈராக்கின் வாகன குண்டுதாரிகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குளோரின் தாக்குதலில் 350 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஈராக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் குளோரின் வாயு தாக்குதல்களும் கார் குண்டு தாக்குதல்களும் அமெரிக்க படையினர் மேலும் பரவலாக நிலைகொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க படையினர் தற்காலிக கார்க்குண்டு தொழிற்சாலைகளை கண்டுபிடிப்பதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தாத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இவை இயங்குகின்றன. பக்தாத்தின் அரச மற்றும் தனியார் தொழிற்சாலைகள் சதாம் ஹுசைன் காலத்தில் சகல வகையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக காணப்பட்டன. இன்று இவை செயலிழந்து போயுள்ளன. கார்க் குண்டுகளுக்கான உற்பத்தி நிலையங்களாக மாறியுள்ளன. இதேவேளைஇ அமெரிக்க படையினரால் இந்த தொழிற்சாலைகளை கண்டுபிடிக்க முடியுமா என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்இ உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வீதியோர குண்டுகளை போலஇ கார்க் குண்டுகளும் வெல்ல முடியாதவையாக காணப்படுகின்றன. ஈராக்கில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தளபதிகளோ அல்லது புஷ் நிர்வாகத்தின் நியோ கொன்சவேர்ட்டிவ்களோ கற்பனை செய்து பார்க்காத ஆயுதமாகவும் இது காணப்படுகின்றது. மார்ச் 2003 இலிருந்து ஜூன் 2006 இற்குள் ஈராக்கில் கார்க் குண்டு வெடிப்பிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78இ000 என ஆய்வொன்று மதிப்பிடுகின்றது. மேலும்இ 200 கிலோகிராம் (4 பொருத்தப்பட்ட களவாடப்பட்ட மெர்செடெஸ் வாகனங்களை இனம் காண்பதற்கான தொழில்நுட்பங்களும் இல்லை. ஈராக்கில் தற்போது காணப்படும் தீவிபத்தில் தொடர்ந்து கார்க் குண்டு வெடிப்புகள் இடம்பெறும் பட்சத்தில்இ ஷியா ஆயுதக் குழுக்கள் தமது பகுதிகளை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க படையினருடன் மோதுவார்கள் என்ற அச்சமும் காணப்படுகின்றது. மேலும்இ இது ஷியாக்களின் சதா நகரில் மக்களின் எதிர்ப்பினை உருவாக்க கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. கார்க்குண்டு வெடிப்புகள் மற்றும் குளோரின் தாக்குதல்கள் மூலம் அன்பார் பிராந்தியத்தில் அமெரிக்காவினால் அவர்களது சகாக்களை பாதுகாக்க முடியாது என்பதை ஈராக்கிய கிளர்ச்சிக்காரர்கள் புலப்படுத்தியுள்ளனர். மேலும்இ குளோரின் தாக்குதல்கள் அமெரிக்காவிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. நியூயோர்க் பொலிஸ் அதிகாரிகள் தமது நகரத்தின் மீது இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். நன்றி தினக்குரல் கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






