| குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? |
|
|
| . | |
| 28. April 2007 19:51 | |
குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-1
(இரா.துரைரத்தினம்)
தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் அடிப்படை உரிமைகளுக்காக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டு சிலமாதங்கள் கடந்து விட்டன. கோழி களவெடுத்தவனும் கூட நின்று தேடுகிறான் என்பது போல மகிந்த ராஷபக்ச மற்றும் ஜே.வி.பி போன்றோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்ல சிங்கள பேரினவாத அரசினால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் சில உதிரி தமிழ்இணையத்தளங்களும் கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தன. அதேவேளை மீண்டும் ஒரு கொலையை நடத்துவதற்கு இப்போது கொலைகாரர்கள் தயாராகிக்கொண்டிருப்பார்கள். கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காவும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசிவருவதை ஜீரணிக்க முடியாதவர்களே இப்படுகொலையை செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையான விடயம் என்றாலும் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் யார்? கொழும்பு நகரில் குமார் பொன்னம்பலம் சிவராம் ரவிராஜ் மட்டக்களப்பில் நடேசன், ஜோசப் பரராசசிங்கம் திருமலையில் விக்னேஸ்வரன், சுகிர்தராஜன், யாழ்ப்பாணத்தில் நிமலராஜன், மதிமுகராசா, என நீண்டு செல்லும் பட்டியல்……. இந்த கொலைகளை புரிந்தவர்கள் யார்? இதற்கு உத்தரவிட்டவர்கள் யார்? பின்னணியில் இருந்தவர்கள் யார்?
கொலைகளை திட்டமிட்டவர்கள், உத்தரவிட்டவர்கள், கொலைகளை புரிந்தவர்கள் இவர்களில் யாரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படவில்லை. சமாதானப்புறா வேசம் போட்டு தமிழர்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகிய கையோடு தன்னுடைய சுயரூபத்தை காட்ட தொடங்கினார் சந்திரிக்கா. புலிகள் கொழும்பை தாக்கினால் தமிழர்களை நானே தலைமை தாங்கி கொல்வேன் என கொழும்பில் பிரமுகர்கள் சிலருடனான சந்திப்பின் போது சந்திரிக்கா கூறினார். சண்டே லீடர் பத்திரிகையில் குமார் பொன்னம்பலம் இதை ஆதாரத்துடன் வெளியிட்டார். நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டில் இருக்கும் இன்னொரு இனத்தை கொலை செய்வேன் என கூறுவது எவ்வளவு பாரது}ரமான விடயம். வெளிநாட்டு து}தரக அதிகாரிகள் மட்டத்திலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.
தமிழர்கள் மட்டத்திலும் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமிழர்களை கொல்லுவேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை என்றும் தமிழ் மக்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர் என்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பபட்டிருந்தது
தமிழர்களை நானே தலைமை தாங்கி கொல்வேன் என கூறினாரா இல்லையா என தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எப்படி தெரியும்? சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கருதப்படும் சிலர் கலந்து கொண்ட சந்திப்பு அது. தமிழர் என்று சொல்லப்போனால் இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் மட்டுமே கலந்து கொண்டார்.
சந்திரிக்கா பேசிய விடயம் எப்படி வெளியில் போனது? தமிழர் என்ற காரணத்தால் ராஜன் மீது சந்திரிக்காவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இலங்கை வங்கி தலைவர் பதவியிலிருந்து ராஜன் து}க்கி எறியப்பட்டார். தமிழர் விடுதலைக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் இன்னொரு மிகப்பெரிய மோசடியும் இடம்பெற்றிருந்தது. (தொடரும்) நன்றி
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..

