22. November 2008 07:02
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
4. October 2008 12:47
29. September 2008 22:52
13. October 2008 13:01
11. October 2008 23:48
தமிழர் தாயகப் பகுதியில் மாத்திரம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தமிழவன்   
29. April 2007 18:17

சிறிலாங்கா அரசின் உயர்பீடத்தை தன்னகத்தே வைத்திருக்கும் பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்று எந்தக் காலத்திலும் ஈழத்தமிழினத்தை அழித்தொழிப்பதில் தான் அக்கறையாக இருந்து வந்துள்ளனர். இதில் பல வடிவங்களை கையாண்டு வந்தனர். படுகொலைகள் இடப்பெயர்வு நில ஆக்கிரமிப்பு பொருளாதாரத்தை அழித்தல் என்பனவற்றைக் கூறலாம். தமிழரின் பொருளாதாரத்தை அழித்தொழித்தல் என்பதில் சிங்கள தேசம் குறியாக உள்ளது.  தமிழர் இது பற்றி வாய்திறக்க முடியாத நிலை இன்றுள்ளது.

ஒரு சமூகத்தை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் போது அவர்களின் சுயபொருளாதாரம் அழித்தொழிக்கப்படுகின்றது. இதனை தனியொரு மனிதன் குடும்பம் சமூகம் நாடு உலகம் என் நோக்க முடியும். இன்று சமாதானம் பேசிக்கொண்டு நாடு முழுவதும் தமிழரின் பொருளாதாரத்தை அழித்தொழி;க்கும் வகையில் மிகவும் நயவஞ்சகமாக திட்டமொன்று அரங்கேற்றப்படுகின்றது. இதில் கோடரிக்கம்புகளும் ஈடுபடுகின்றனர். எனினும் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் தான் இடம்பெறுகின்றது. அல்லது அரசே ஒழுங்கமைத்து இப்படியும் தமிழரைத் துன்பப்படுத்த திட்டமிட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கமே இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இந்த புதிய வடிவிலான தமிழரின் பொருளாதாரத்தின் அடிமடியில் கைவைப்பதென்பதனை நாம் விபரமாகப் பார்ப்போமாயின் சில பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
1.தொலைபேசியூடாக மிரட்டி பணம் பறித்தல் சரிவராத பட்சத்தில் ஆட்களைக் கடத்தி பணப்பறிப்பு நடக்கின்றது.
2.இரவுவேளை ஆயுதங்களுடன் வீடுகளிற்குள் நுளைந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதுடன் கையில் இருக்கும் பணத்தையும் பறித்தல்.
3.சோதனை என்ற பெயரில் நேரடியாக வீடுகளிற்கு சென்று எப்படியான வசதியுடன் இருக்கின்றீர்கள் என்ற விளக்கத்தை விபரித்து. இரவுவேளைகளில்  இவ்வளவு தாருங்கள் என பேரம் பேசி பணத்தை பறித்தெடுத்தல்.
4.வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிருமாறு மிரட்டி வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடச் செய்தல்.
5.வீடுகளிற்கு கைக்குண்டெறிதல். எதுவுமே சரிவராத பட்சத்தில் பணம் கேட்டு தராதவரை சுட்டுக் கொலை செய்தல்.
இப்படி தமிழரின் பொருளாதாரத்தை வேரடி மண்ணோடு பிடுங்கி எடுப்பதும் இன்று சிறிலங்கா அரசின் புதிய தொழில்நுட்பமாகத் தான் தெரிகின்றது.அரசின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்துவதற்கு காரணம் உள்ளது. உதாரணத்திற்காக அல்லாமல் முழுமையாக ஆராய்ந்து பார்ப்போமானால் உண்மையை யாரும் மறுக்க முடியாது என ஆணித்தரமாக சொல்லலாம்.

யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தான் இரவு நேரக் கொள்ளைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய பின் முழுக்கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பை தானே வைத்திருப்பதாக கொல்லிக் கொள்ளும் அரச படையினர் குவிக்கப்பட்டியிருக்கும் யாழ்ப்பாணத்தில் இந்தப் படையினரிற்கு தெரியாமல் ஆயுத முனை கொள்ளைகள் எவ்வாறு நடக்க முடியும்? சில இடங்களில் துப்பாக்கிப் பிரயோகத்தை செய்த கொள்ளையர்கள் இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளனர். என அறிய முடிகி;ன்றது.

கொள்ளையிடச் சென்றவர்களின் துப்பாக்கிப் பிரயோகம் சத்தமற்றதுல்லவே. எனவே அந்த வெடிச்சத்தம் அருகில் இருக்கக் கூடிய படை முகாங்களில் காவலரண்களில் இருக்கும் படையாட்களிற்கு கேட்டியிருக்கும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது எவ்வாறு வாகனங்களில் கொள்ளையர் செல்ல முடியும்? சரி இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்ற போது எந்தக் கொள்ளையரும்  பிடிபடாமைக்கான காரணம் என்ன?

யாழ்குடாவின் பொருளாதாரத்தையே அடியோடு அழிப்பதில் ஏ9 வீதியை மூடி வைத்துக் கொண்டு கையில் இருக்க கூடியதையும் பிடுங்கியெடுப்பது போல வேறு கொடுமையும் செய்யத் தான் வேண்டுமா? இந்த மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். ஊரடங்கு அமுலில் உள்ள போது அந்த இடத்தில் சிறிலங்கா அரச படையினரைத் தவிர பேறு யார் நடமாட முடியும்? எனவே இதற்கு அரசு தான் முழுப் பொறுப்பையும் எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலமையோ தலை கீழாக்கப்பட்டுள்ளது. ஒன்றைரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரச படை நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக எறிகணை வீச்சினால் தான் இந்த இடப்பெயர்வு இடம் பெற்றுள்ளது. வாழ்விடங்களில் இருந்து வெளியேறியமை சுயபொருளாதாரத்தை இழந்தமை என்பது அங்குள்ள மக்களிற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் துன்பமே…. இவ்வளவையும் செய்தவர்கள் மழை வெள்ளத்திலிருந்து  அவதியுற்றும் மக்கள்  இலங்கையில் தான் பிறந்தோமா? என கண்ணீர்; விடும் மக்களிற்கு பயன்படுத்த முடியாத பழைய கூரைவிரிப்புக்களையும் கூடாரங்களையும் அமைப்பதற்கு கூட உதவாத பொருள்களை கொடுத்துவிட்டு கூட்டங்களை மட்டும் அபிவிருத்தியென்ற பெயரில் நடத்துகின்றனர்.

இடம்பெயர்வினால் வாழ்வாதாரம் இன்றி மட்டுமல்லாமல் உயிர்வாழ்தலிற்கு அச்சத்துடன் மக்கள் துன்பப்படுவதனை கவனத்திலெடுக்க வக்கற்றவர் போன்ற அரச தரப்பினர் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு அபிவிருத்தி செய்யப் போவதாக நாடகமாடுகின்றனர். இத்துடன் விட்டார்களா? நாளாந்தம் பல வழிகளில் துயரத்தை கொடுத்துக் கொண்டு ஆயுத முனையில் கொள்ளையும் தாராளமாக நடக்கின்றனர். மிகவும் பொறுக்கித்தனமாக செயலான ஆயுத முனைக் கொள்ளை தமிழரை மட்டுமே இலக்கு வைத்து நடப்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது. எமக்கு விடிவே இல்லையா? என ஏங்கித் தவிக்கும் மக்களிற்கு எவரின் ஆறுதல் வார்த்தையும் தேவையில்லை. நிம்மதியாக வாழ்வதற்கு முடிவொன்;ற எண்ணம் மட்டுமே தொக்கி நிற்கின்றது.

ஆயுத முனை கொள்ளை எனும் போது மட்டக்களப்பில் பலர் கொள்ளை  நடந்த இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளது. சுட்டிக்காட்டத்தக்கது. இவற்றை யார் செய்கின்றனர். அரசு இதற்கு காரணம் புலிகள் தான் என கைநீட்ட முடியுமா? அரச படைகளுக்கு தெரியாமல் அரச படையின் கட்டுப்பாட்டிற்குள் ஆயுத முனைக் கொள்ளைகள் இடம்பெறுகின்றது. இதனை தடுக்க முடியாதென அரசு சொன்னால் இந்தக் கொள்ளையர்களையே பிடிக்க முடியாத அரசு புலிகளுடன் போரிட்டு எப்படி வெல்லப் போகின்றது.

வவுனியாவை பார்த்தீர்களானால் இன்று மயானம் போல் தான் தென்படுகின்றது. நாலாபுறமும் அரச படையினர் சுற்றிவளைத்து குந்திருக்க இரவு வேளை ரி56 ரக துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு வெள்ளையர்கள் வெள்ளை  வானில் திரிவது இவர்களிற்கு தெரியாதென்றால் இவர்கள் ஏன் அங்கிருக்க வேண்டும். ஆகவே… இந்த கொள்ளை சம்பவங்களை அரச படையினரிற்கு தெரியாமல் நடப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

வசதியுடையவர் வசதியில்லாதவர் என்ற வேறுபாடின்றி பணப்பறிப்பு நடக்கின்றது. சட்டத்தரணிகளிடம் கேட்ட போது. அவர்கள் பணிப்புறக் கணிப்புச் செய்து போராடினார்கள். அதேபோல் வைத்தியர்களிடம் கேட்ட போதும் அவர்கள் பணிப்புறக் கணிப்பு செய்து தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். கூட்டாக இப்படி எதிர்ப்பு காட்டக் கூடியவர்கள் எதிர்ப்பு காட்டினார்கள். ஏனையவர்களின் நிலை என்ன? அடியெற்றி வழித்துடைத்து வவுனியா மாவட்டத்தில் பணப்பறிப்பு நடந்து விட்டது.

இன்னும் நிறுத்தப்பட்டதாக காணவில்லை. ஒரு சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் ஆனால்… ஆதார பூர்வமாக எவரும் பிடிபடவில்லையென்றால் இதற்கு யார் பொறுப்பு? மர்மமாக மந்திரவாதிகள் யாராவது செய்கின்றனரா? தொடர்ந்து கொண்டியிருக்கும் இந்தக் கொள்ளைக் கூட்டம் அரச கொள்ளைக் கூட்டம் என்பதனை மறுத்தால்…. கொள்ளையர்களை பிடித்து வெளிப்படுத்த வேண்டும். அதுவும் முடியாதென்றால் தமிழரை அவர்கள் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும்.

கொள்ளையர்கள் வழித்து துடைத்த மாவடடமாக வவுனியா மாவட்டம் உள்ளது. இருந்த போதும் இன்னும் நிறுதத்தப்பட்டதாக காணவில்லை. தமிழ் மக்கள் இந்த கொடுமையை சொல்லுவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றார்கள்.

கொழும்பிலும் தமிழ் வர்த்தகர்கள் மட்டுமே இலக்கு வைக்கப்படுகின்றனர். இலட்சம் கோடியென வாய்கூசாமல் கேட்பவர்களிற்கு  பணம் கொடுக்க மறுப்பவர்களை மிகவும் இலகுவாக கடத்தி விட முடியும் என்றால் நாட்டின் தலைநகரின் பாதுகாப்புத் தான் என்ன? தமிழ் வர்த்தகர்களை மட்டும் தான் இலக்கு வைக்கின்றனர். என்றால் இதனையார் செய்ய முடியும். பணம் கொடுக்க மறுத்தவர்கள் சிலர் கடத்தப்பட்டு காணாமல் போயுமுள்ளனர். சிலர் கொடுத்த பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் பணம் கொடுத்த பின்பும் விடுவிக்கப்படவில்லை. உறவினர்கள் கண்ணீருடன் அங்கலாய்ந்து திரிகின்றனர்.

மன்னார் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீடும் அளவில் இல்லையென இன்றைய நிலவரத்தில் சொல்ல முடிகின்றது. ஆனால் இனிவரும் காலங்களில் என்ன நடக்குமோ சொல்ல முடியவில்லை.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடங்கலாக புலிகளினால் விடுவிக்கப்பட்ட தமிழரின் தாயகப் பிரதேசத்தின் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். கொள்ளையோ பாலியல் வன்புணர்ச்சிகளோ படுகொலைகளோ இடம்பெறுவதில்லை. எந்த மனிதரும் நிம்மதியாக இருக்க தமிழ் படை காவலாகவுள்ளது. உலகத்திலேயே பாதுகாவலர் இல்லாமல் இயங்கும் வைப்பகம் தமிழீழ வைப்பகம் தான் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

மக்களைப் பாதுகாப்பதென்பது இதுதான் எனவே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழரின் பொருளாதாரம் புதிய தொழில்நுட்ப ரீதியல் கையாளப்படுகின்றது. இதற்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

கிளிநொச்சி முல்லைதீவு போன்ற தமிழரின் தாயகம் மீட்க்கப்படவில்லையெனின் தமிழர் நாளாந்தம் துன்பப்பட வேண்டிய நிலை தான் ஏற்படும் என்பதற்கு அரசின் புதிய தொழில் நுட்ப நயவஞ்சக செயற்பாடு தான் தமிழரின் பொருளாதாரத்தை சிதைப்பது என்பதை தவிர வேறு என்ன தான் சொல்ல முடியும்?

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >