| குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? |
|
|
| . | |
| 8. May 2007 08:00 | |
குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-3
(இரா.துரைரத்தினம்)
தமிழர்கள் பூர்வீககுடிகள் அல்ல. வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக அறிவித்தார் சந்திரிக்கா
குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது.
President Chandrika Kumaratunga had said : "They are wanting a separate state - the minority Tamils who are not the original habitants of the country".
தென்னாபிரிக்க தொலைக்காட்சிக்கு சந்திரிக்கா வழங்கிய பேட்டியில்
அவர்கள் தனிநாடு கோருகிறார்கள். சிறுபான்மையாக இருக்கின்ற தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீககுடிகள் அல்ல. அவர்கள் வந்தேறுகுடிகள் என தெரிவித்திருந்தார். இந்த பேட்டி தொடர்பாக குமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் தெரிவித்தார். குமார் பொன்னம்பலம் சொர்ணவாகினி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வந்தேறு குடிகள் என கூறிய சந்திரிக்காவை கண்டித்த அவர் ஐரோப்பியர்கள் வரும்வரை தமிழர்களின் ஆட்சியே இங்கு இருந்தது. விடுதலைப்புலிகள் தமது தாயகத்தை மீட்டெடுப்பதற்காக ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்கள். அந்த ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கும் அதேவேளை நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்றும் குமார் பொன்னம்பலம் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். சொர்ணவாகினி தொலைக்காட்சியில் குமார் பொன்னம்பலம் வழங்கிய பேட்டியை தொடர்ந்து அவரை பழிவாங்க வேண்டும் என சந்திரிக்கா மூர்க்கத்தனமாக திட்டமிட்டார். சிங்கள இனவாத பத்திரிகையான திவயின 1998 நவம்பர் 18ம் திகதி இதழில் குமார் பொன்னம்பலம் புலிகளின் தீவிர ஆதரவாளர் அவரை கொழும்பில் இருக்க அனுமதிக்க கூடாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 2(1) (ர்) பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனியாவிடம் கேள்வியும் எழுப்பியிருந்தது. சொர்ணவாகினி தொலைக்காட்சி பேட்டி தொடர்பாகவும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என கூறியது தொடர்பாகவும் 1999 ஜனவரி 13ம் திகதியும் 20ம் திகதியும் ஸ்ரீலங்கா பொலிஸார் குமார் பொன்னம்பலத்திடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தையும் பெற்றனர். அந்த விசாரணைகளின் போது பொலிஸார் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே குமார் பொன்னம்பலத்திடம் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த குமார் பொன்னம்பலம் தனது தாய்மொழியான தமிழில் மட்டுமே வாக்குமூலம் தருவேன். தமிழ் இந்த நாட்டின் தேசிய மொழி. தமிழில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் மட்டுமே கையொப்பம் இடுவேன் என அவர் திடமாக கூறினார். அதன் பின்னர் மொழிபெயர்பாளரான முஸ்லீம் நபர் ஒருவரை கொண்டு குமார் பொன்னம்பலத்திடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. குமார் பொன்னம்பலம் மீது பாதுகாப்பு அமைச்சு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை பாதுகாப்பு அமைச்சு மீது குமார் பொன்னம்பலம் மிகமுக்கியமான வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். செம்மணி கொலைவழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வாதாடுவதற்காகவும் அவர்களின் நலன்களை கவனிப்பதற்காகவும் குமார் யாழ்ப்பாணம் செல்ல இருந்தார். 30.8.99அன்று யாழ்ப்பாணத்தில் அவ்வழக்கு நடைபெற இருந்தது. அந்நேரம் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை மூடப்பட்டிருந்தது. ர்நடi-வுழரச விமான சேவை நிறுவனம் பொதுமக்களுக்கான விமானசேவையை இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையில் நடத்தி வந்தது. 27.8.99 பிரயாணம் செய்வதற்காக அந்நிறுவனத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாததால் பிரயாணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விமான மூலமோ கப்பல் மூலமோ செல்பவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை அப்போது இருந்தது. தற்போது மீண்டும் அது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கைப்பிரசை ஒருவர் இலங்கையின் எந்த பகுதி செல்வதற்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும் என கூறுவது மனித உரிமை மீறல் என தெரிவித்த குமார் பொன்னம்பலம் மேற்படி தனியார் விமான சேவை நிறுவன பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். இராணுவத்தளபதி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தால் பாதுகாப்பு அமைச்சின் பிரயாண அனுமதி என்ற சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல் அம்பலத்திற்கு வந்திருக்கும். அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முதல் குமார் பொனனம்பலத்தை கொலை செய்யவேண்டும் என திட்டமிடப்பட்டது.
(தொடரும்) நன்றி
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தினால் வருடாந்தம் ஜெனிவாவில் நடத்தப்படும் உலகநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மனித உரிமை அமர்வில் இலங்கையில் இருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக குமார் பொன்னம்பலம் கலந்து கொண்டவர். இதன் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தவர். 

