| குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? |
|
|
| . | |
| 9. May 2007 08:00 | |
குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-4
(இரா.துரைரத்தினம்)
“ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ என்பவரிடமே குமாரை கொலை செய்வதற்கான பொறுப்பை சந்திரிக்கா வழங்கியிருந்தார்.;;;…”
தன்னை ஒருவிதவையாகவும், அனுதாபத்திற்குரியவராகவும் மக்களுக்கு காட்டிகொண்ட சந்திரிக்கா, இயல்பாகவே பழிவாங்கும் குணமும் கொலைவெறியும் கொண்டவர். தன் பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் - தாயைப்போல.
சந்திரிக்காவின் தாய் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் தன்னை ஒரு விதவையாக காட்டி பதவிக்கு வந்தவர்தான். தன்னுடைய கணவனை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தவர் என்பது பண்டாரநாயக்காவை கொலை செய்த பிக்குவின் வாக்குமூலத்தின் மூலம் ஏற்கனவே நாம் அறிந்து கொண்டதுதான். பண்டாரநாயக்காவை கொலை செய்வதற்கு அவரின் மனைவி ஸ்ரீமாவோ துணைபோனது போல, விஜயகுமாரதுங்காவின் கொலைக்கு சந்திரிக்காவும் உடந்தையாக இருந்தார் என முன்னர் பல சிங்கள ஊடகங்கள் எழுதியிருந்தன.
1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டை ஸ்ரீலங்கா படைகள் ஆக்கிரமித்த பின்னர் ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரிலும் அவரின் மாமன் அனுருத்த ரத்வத்தையின் வழிகாட்டலிலும் யாழ்ப்பாணத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டவிடயங்களை ஜெனிவாவில் நடைபெற்ற 53வது மனித உரிமை ஆணைக்குழு மாநாடு தொடக்கம் சர்வதேச ரீதியாக அப்பலப்படுத்திய குமார் பொன்னம்பலம், உள்நாட்டிலும் தமிழ் சிங்கள மக்கள் மத்தியிலும் வெளிநாட்டு இராஜதந்திரிக்கள் மட்டத்திலும் சந்திரிக்காவின் மனித உரிமை மீறல்களையும் கொலைக்கலாசாரத்தையும் ஆதரபூர்வமாக முன்வைத்து வந்தார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் மிகவும் நம்பிக்கைக்குரியவரும், சந்திரிக்காவின் இரகசியமான விடயங்களை கையாள்பவருமாக இருந்தவர்தான் பட்டேகன சஞ்சீவ என்பவர். சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிளாக பொலிஸ் சேவையில் சேர்ந்த இவர், படுகொலைகளுக்கு பெயர்போன பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னாவின் கையாளாக இருந்தவர். நிஹால் கருணாரத்னாவே ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு பிரிவில் சஞ்சீவ என்பவரை சேர்த்து விட்டார். இரகசியமான வேலைகளை செய்வதற்கு நம்பிக்கையான ஆள் என நிஹால் கருணாரத்னாவால் சந்திரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சஞ்சீவ காலப்போக்கில் சந்திரிக்காவிற்கு மிகவும் நெருக்கமானார். அவரின் இரகசியமான வேலைகள் அனைத்தையும் செய்பவராக சஞ்சீவ திகழ்ந்தார். அவரிடமே குமார் பொன்னம்பலத்தை கொலை செய்யும் பொறுப்பை சந்திரிக்கா 1999ம் ஆண்டு ஆரம்பத்தில் கொடுத்திருந்தார். இதற்காக பெருந்தொகையான பணமும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ பாதாள உலக கோஷ்டியைச்சேர்ந்த சாந்த மற்றும் முறட்டு சமன் ஆகிய இருவரையும் இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு அமர்த்திக்கொண்டார். இதற்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது.
சாந்த என்பவருக்கு ஏற்கனவே சில வழக்குகள் இருந்தன. இந்த கிரிமினல் வழக்குகளுக்கு வாதாடுவதற்கு குமார் பொன்னம்பலத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் அவருடன் பழகும் வாய்ப்பு ஏற்படும் என்றும், அவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் கொலையை செய்வதற்கும் திட்டமிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், குமார் பொன்னம்பலத்தை கொலை செய்த சாந்த மற்றும் முறட்டு சமன், கொலையாளிகளுக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையில் தொடர்பாளராக இருந்த சஞ்சீவ ஆகிய மூவரும், பின்னர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டனர்.
தகவல்கள் வெளியில் வராமல் இருப்பதற்காக சந்திரிக்காவின் நேரடி உத்தரவின் பேரில் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குமார் பொன்னம்பலம் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற விபரத்தையும், சாந்த, முறட்டுசமன் , ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ ஆகியோர் கொலை செய்யப்பட்ட விபரத்தையும் அடுத்த இதழில் பார்ப்போம் (தொடரும்) நன்றி
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..

