| குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? |
|
|
| . | |
| 11. May 2007 08:00 | |
குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-6
(இரா.துரைரத்தினம்)
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான இசுசு வாகனத்தில் வந்தவர்களே குமாரை சுட்டுக்கொன்றனர்.
ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த பின் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிசாந்தி உட்பட 700க்கு மேற்பட்ட பொதுமக்களை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவத்தை ஆவணப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவின் போலித்தனங்களை நேருக்கு நேராக அம்பலப்படுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரிக்கா, குமார் பொன்னம்பலத்தை கொல்வதற்கு திட்டமிட்டதையும் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ என்பவரிடம் ஒப்படைத்திருந்ததையும் ஏற்கனவே கடந்த இதழ்களில் பார்த்திருந்தோம். சந்திரிக்கா தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறார் என்பதை உணர்ந்து கொண்ட குமார் பொன்னம்பலம் என்னுடைய இரத்தம் அவர்களுக்கு தேவைப்படுகிறது என கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முதல் சொன்னார். அது உண்மையாக நடந்து விட்டது.
இந்த கொலை திட்டத்தின் ஒரு அங்கமாக சாந்த என்ற நபர் குமார் பொன்னம்பலத்துடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டமை பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். சாந்த என்பவன் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்தவன்தான். ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரில் சஞ்சீவ கூறும் நபர்களை கொலை செய்வதுதான் இவனின் வேலை. அரைமணி நேரத்தில் திரும்பிவருவேன் என சென்றவர்.......
கொலை நடைபெறுவதற்கு முதல் நாள் மாலையும் குமார் பொன்னம்பலம் வீட்டிற்கு தொலைபேசி எடுத்திருந்தான். அப்போது நாளை நீதிமன்றத்திற்கு செல்லமாட்டேன் வீட்டில்தான் நிற்பேன் என குமார் பொன்னம்பலம் சொல்லியிருந்தார். சுமார் 11.00மணியளவில் சண் எவ்.எம்.வானொலியிலிருந்து தொலைபேசி அழைப்பு குமார் பொன்னம்பலம் வீட்டிற்கு வந்தது. கஜேந்திரகுமார்தான் தொலைபேசியை எடுத்தார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. உங்கள் தந்தை இறந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. உண்மையா என சண் எவ்.எம். நிலையத்திலிருந்து கேட்டார்கள். கஜேந்திரகுமாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே தந்தையின் 077311922 என்ற இலக்க கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தார். அத்தொலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. உடனே கஜேந்திரகுமார் அவரின் வீட்டில் வேலை செய்யும் தோமஸ் என்பவருடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் நீலநிற பென்ஸ் காரின் சாரதி ஆசத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்த நிலையில் குமார் பொன்னம்பலம் காணப்பட்டார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி
குமாரின் கொலை சம்பவத்தை கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவர் நேரில் கண்டிருக்கிறார். அவர் குமார் பொன்னம்பலத்தின் நண்பரும் கூட. அவரின் பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நாம் இங்கு குறிப்பிடவில்லை.
ஏற்கனவே கொலைக்கான திட்டத்தை தீட்டிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த மற்றுமொரு நபரான சுனில் ரணசிங்க மற்றும் முறட்டுச்சமன் ஆகியோர் அந்த ஜீப் வண்டியில் வந்து காத்திருந்தனர். குமார் பொன்னம்பலத்தை அந்த இடத்திற்கு அழைத்து வந்த சாந்த என்பவன் சஞ்சீவ என்பவனை தன்னுடைய நண்பன் என அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது முறட்டு சமன் என்பவனே குமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்தான். குமாரை சுட்டுக்கொன்றதும் சாந்த என்பவன் கொலைகாரர்களுடன் அந்த ஜீப்பில் தப்பிச்சென்றுவிட்டான். குமார் பொன்னம்பலத்தின் கைத்தொலைபேசியையும் அவர்கள் அபகரித்து சென்றனர்.
பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் குமார் பொன்னம்பலத்தின் வாகனத்தை பரிசோதித்தனர். கைஅடையாளம் எதுவும் இல்லை, குண்டுகளும் காருக்குள் இல்லை என்றனர். ஆனால் பின்னர் அந்த காருக்குள் இருந்து இரு தீர்ந்த தோட்டாக்களை குமார் பொன்னம்பலத்தின் வீட்டார் எடுத்திருந்தனர். நன்றி
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




குமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்திற்கு மட்டுமல்ல காலத்திற்கு காலம் பதவியில் இருந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கும் குமார் பொன்னம்பலம் ஒரு சவாலாகவே இருந்தார். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்தி வந்தார்.
குமார் பொன்னம்பலம் 23.12.1999 அன்று சந்திரிக்காவுக்கு எழுதிய பகிரங்க கடிதம் சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமானதும் பிரதிபொலிஸ்மா அதிபர் நிஹால் கருணாரத்னா, சஞ்சீவ ஆகியோரை அழைத்து உடனடியாக தனது உத்தரவை நிறைவேற்றும் படி கூறினார்.
சம்பவம் நடைபெற்ற போது அங்கு காணப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த அந்த ஜீப் பற்றி பொலிஸார் எந்த வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. அக்கொலையை விசாரிப்பவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் பற்றி விசாரித்திருக்க வேண்டும். அதைப்பற்றி விசாரிப்பதை பொலிஸார் ஏன் தவிர்த்துக்கொண்டனர் ?. அது மட்டுமல்ல இவ்வாறான ஒரு கொலை நடைபெற்றால் சி.ஐ.டியினர் உடனடியாகவே விசாரணைகளை ஆரம்பிப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களின் பின்பே சி.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதுவும் வெறும் கண்துடைப்பாகத்தான் நடைபெற்றது.

