22. November 2008 06:20
 
 
ஐபிசி தமிழின் அகவை பத்தாவது விழா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஐபிசி சுவிஸ் கலையகம்   
13. June 2007 03:25
அனைத்துலக ஒலிபரப்புக்  கூட்டுத்தாபனம் ஐபிசி தமிழ் 09.06.2007 அன்று தனது 10 வது அகவையை நிறைவு செய்வதை முன்னிட்டு ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் Solothun Gerlafingen மண்டபத்தில் 10.06.2007 ஞாயிற்றுக்கிழமை அன்று முத்தமிழ் விழாவை நடத்தியது.

15.30 மணிக்கு மங்கள விளக்கினை ஐபிசி தமிழ் பொறுப்பாளர் திரு.ரமணன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து விழாச்சுடரினை சொலத்தூண் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. சிவபாதசுந்தரம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.



சொலத்தூண் நலன்புரிச் சங்க நடனாலய மாணவிகள் , கலாநிகேதன் நடனாலய  சொலத்தூண், பீல் மாணவிகள் வழங்கிய நடனங்கள் இடம்பெற்றன. ஐபிசி தமிழ் சுவிஸ் கலையக செயற்பாட்டாளர் திரு.பவான் வழங்கிய வரவேற்புரை இடம்பெற்றது.


ஐபிசி தமிழின் பத்தாவது அகவையை முன்னிட்டு வெளியிட்ட அலை வனையும் உலகு மலர், உறவொலி இறுவட்டு வெளியீடுகள் இடம்பெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை கலைபண்பாட்டுக் கழகம் வழங்கிய இசைமாலை , ஈழம் போய்ஸ் பாசல் வழங்கிய மேற்கத்தேய நடனம் , கலைஞர்கள் கௌரவிப்பு. நையாண்டி மேளம்  என்பனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளைப் பேச்சாளர் திரு. அல்பேட் , தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா, ஐபிசி தமிழுக்கு இந்தியக் கண்ணோட்டம் வழங்கும் அப்துல் ஜபார் ஆகியோரது சிறப்புரைகள் இட்பெற்றன. ஐபிசி தமிழ் சுவிஸ் கலையக செயற்பாட்டாளர் திரு. விசாகம் நன்றியுரை வழங்க நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன. சுவிசில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒரே மேடையில் 9 ஐபிசி அறிவிப்பாளர்கள் தோன்றி நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய முதல் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தகவல் - ஐபிசி சுவிஸ் கலையகம்

 
< முந்தைய