| எட்டாவது தடவையாக நடாத்தப்பட்ட தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா |
|
|
| . | |
| 23. August 2007 07:43 | |
சுவிஸ் தமிழர் இல்லத்தால் எட்டாவது தடவையாக நடாத்தப்பட்ட தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஓகஸ்ட் மாதம் 11, 12 ஆம் நாட்களில் சுவிஸ் சூரிச் வின்ரத்தூர் நகரில் நடைபெற்றது
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் காலநிலையும் சாதகமாக இருத்ததனால் விழா மேலும் சிறப்புப் பெற்றது. உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆண் - பெண், கிளித்தட்டு ஆண் - பெண், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பெடுத்தாட்டம், சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டி, கயிறு இழுத்தல், குறிபார்த்து எறிதல், குறிபார்த்துச் சுடுதல், முட்டி உடைத்தல் என எமது பாரம்பரிய விளையாட்டுக்களும், சர்வதேச விளையாட்டுக்களும் சங்கமித்துக்கொண்டது.
இத்துடன் தரிசனம் கலைஞர்களின் நேரடி நிகழ்வுகள் பார்வையாளர்களை பங்குபெறச் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, சுவீடன், டென்மார்க், பிரத்தானியா, நெதர்லாந்து நாட்டிலிருந்து பெருமளவில் கழகங்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இப்போட்டியில் பிரான்ஸ்சிலிருந்து மட்டும் பன்னிரண்டு அணிகள் பங்குபற்றி அதிலும் சாதனை படைத்தது. முதல் நாள் நிகழ்வுகள் காலை 8.30 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது. பொதுச்சுடரினை சுவிஸ் தமிழர் பேரவை பொறுப்பாளர் திரு. கிருஷ்ணா அம்பலவாணர் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கேணல் சங்கர், லெப். கேணல் விக்ரர், மேஜர் அல்பேட், மேஜர் சோதியா, லெப். சதா, கப்டன். அன்பரசி, லெப். கேணல். புலேந்திரன், லெப். கேணல் கௌசல்யன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச் சுடரினை போட்டி நடாத்துனர்களும், உப அமைப்புப் பொறுப்பாளர்களும் ஏற்றிவைத்தனர். 08.50 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு. குலம் அவர்கள் ஏற்றிவைத்து விடுதலைப் போரில் விதையாகி வீழ்ந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து விளையாட்டுத்துறைக் கொடியினை விளையாட்டுத்துறை சுவிஸ்கிளைப்
உலகத் தமிழர்களால் உலகக்கிண்ணம் என்று அழைக்கப்படும் தமிழீழக் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியில் பார்வையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ந்தோர் உதைபந்தாட்டத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிண்ணத்தைவென்ற றோயல் விளையாட்டுக் கழகம் சுவிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்ட டென்மார்க் அணிகளுக்கிடையிலான ஆட்டங்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. டென்மார்க் அணி றோயல் விளையாட்டுக் கழகத்தின் சாதனையினை முறியடிக்கும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குமாறாக சுவிஸ் றோயல் விளையாட்டுக் கழகம் குழுநிலையிலிருந்து இறுதி
2001 ஆம் ஆண்டுமுதல் 2007 ஆம் ஆண்டுவரை
2001 - கனடா தமிழர் விளையாட்டுக் கழகம்
11 வயதுப் பிரிவில் சுவிஸ் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகமும் 15 வயதுப் பிரிவில் தமிழ் இளநட்சத்திர விளையாட்டுக் கழகம்
வளர்ந்தோர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் என்பவற்றின் இறுதி ஆட்டங்கள் மின்னொளியில் இரண்டாம் நாள் நிகழ்வுகளும் காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு பத்துமணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சென்ற ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவுகூர்ந்து மலர்வணக்கம் செய்யப்பட்டது. அத்துடன் திரு. மயில்வானம் ஜெகன்நாதன் அவர்களால் தயாரித்து தமிழர் இல்லத்தால் வெளியிடப்பட்ட வலைப்பந்தாட்ட ஆட்ட விதிகள் என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றது. இந்நூலினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் வெளியிட்டு வைக்க வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிப் பொறுப்பாளர் திரு. ராதா பெற்றுக்கொண்டார். ஒலிம்பிக் தீபத்தினை சுவிஸ் வோ மாநிலத்தைச் சேர்ந்த சுவிஸ் உதைபந்தாட்ட அணியில் 13 வயதுப் பிரிவின் பயிற்சியாளராக பணிபுரியும் திரு. ராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆண் - பெண் செற்றப், 9, 13, 17, 21, 30 வயதுப் உதைபந்தாட்ட வல்லுனர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 21 வயதுப்பிரிவினர்களுக்கான ஆட்டத்தில் சுவிஸ் இளம் றோயல் விளையாட்;டுக்கழகம் பிரான்ஸ் அணியினருடன் மிகவும் சிறப்பாக ஆடி தமிழீழக் கிண்ணத்தினை தமதாக்கிக்கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிக்கொண்ட தமிழ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் 17 வயதுப்பிரிவு அணி இம்முறை பிரான்சிடம் இறுதியாட்டத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டது. 15 வயதுப்பிரிவு மிகச்சிறப்பாக ஆடி வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது. 13 வயதுப்பிரிவில் பிரான்ஸ் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் 9 வயதில் சுவிஸ் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகமும் 30 வயதில் தமிழ் தேசிய விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவும் வெற்றிபெற்றன. மென்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸ் தாய்மண் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தையும், சிவாஜி த பொஸ் விளையாட்டுக் கழகம் சுவிஸ் இரண்டாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன. வலைப்பந்தாட்டத்தில் சுவிஸ் ஜொலி கேள்ஸ் அணியும், கரப்பந்தாட்டம் செற்றப் ஆண்களில் நெதர்லாந்து அணியும் பெண்களில் ஈழம் கேள்ஸ் அணியும் வெற்றிபெற்றன.
இரு நாட்களாக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் 9, 11, 13, 15, 17, 21, வளர்ந்தோர், 30 வயதிற்கு மேற்பட்டோர், பெண்கள் பிரிவு என ஒன்பது பிரிவுகளாக நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மட்டும் 78 அணிகள் பங்கேற்றன.
கரப்பந்தாட்டத்தில் 30 அணிகளும், வலைப்பந்தாட்டத்தில் 10 அணிகளும், கிளித்தட்டில் 9 அணிகளும், மென்பந்து துடுப்பெடுத்தாட்டத்தில் 16 அணிகளும், சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகளில் 250ற்கும் அதிகமான மாணவர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் ஏழாயிரத்திற்கும் |
| < முந்தைய | அடுத்த > |
|---|


சுவிஸ் தமிழர் இல்லத்தால் எட்டாவது தடவையாக நடாத்தப்பட்ட தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஓகஸ்ட் மாதம் 11, 12 ஆம் நாட்களில் சுவிஸ் சூரிச் வின்ரத்தூர் நகரில் நடைபெற்றது
ஒலிம்பிக் தீபத்தினை சுவிசின் முன்னனிக் கழகங்களில் ஒன்றான தமிழ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சிறந்த சகல நிலை ஆட்டக்காரனான செல்வன் யசிந்தன் ஏற்றிவைத்ததும் வீரர்களின் சத்தியப்பிரமாணத்துடன் காலை 09:30 மணிக்கு
சுவிஸ், பெண்கள் உதைபந்தாட்டத்தில் யேர்மன் தமிழ் தேசிய விளையாட்டுக்கழகமும், கிளித்தட்டு ஆண் - பெண் இரு பிரிவுகளிலும் புறூக் விளையாட்டுக் கழகம் சுவிசும், கரப்பந்தாட்டம் ஓவர்கேமில் சுவிஸ் செல்வா விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றது.
கரம், குறிபார்த்து எறிதல், சதுரங்கக் காட்சி ஆட்டம் என்பனவற்றுடன் சுவிசின் முன்னணி