| அரசியல் இருப்பைத் தக்க வைக்க ஒரு இராணுவ நடவடிக்கை |
|
|
| கொழும்பு நிருபர் | |
| 9. September 2007 14:41 | |
|
கடந்த சனிக்கிழமை கடுமையான ஷெல் தாக்குலுடன் ஆரம்பமான இந்தப் படை நடவடிக்கை இன்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் முடிவுக்கு வரவில்லை. மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை, அரிப்பு, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டே இந்தப் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தரப்புத் தெரிவித்தது. ஆட்டிலறி ஷெல்கள் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வீசப்பட கவச வானங்கள், தாங்கிகள் சகிதம் படையினர் முன்னேற முயன்றார்கள். அதேவேளையில், ஆள ஊடுருவும் படை அணியும் களத்தில் இறங்கித் தாக்குதலைத் தொடுத்ததில் அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
முதலாவதாக, சிலாவத்துறையை மையப்படுத்தியே மன்னார் மாவட்டத்தின் கடற்புலிகளின் போக்குவரத்துக்கள் அமைந்திருப்பதால் அதனைத் தடுத்து நிறுத்துவது. ன்னிந்தியாவுக்குச் சென்று வருவதற்கும், புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிகளுடாக தென்னிலங்கைக்குள் பிரவேசிப்பதற்கும் சிலாவத்துறையைக் கடற்புலிகள் பயன்படுத்தியுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது. இதனால், சிலாவத்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதன் மூலம் கடற்புலிகளின் சுதந்திரமான நடமாட்டத்தைப் பெருமளவுக்குக் குறைத்து அவர்களைப் பலவீனப்படுத்தியிருப்பதாக படைத் தரப்பு சொல்கின்றது. இரண்டாவதாக, மன்னார் - மதவாச்சிப் பகுதியூடாக வில்பத்துக் காடு அமைந்திருக்கின்றது. அனுராதபுரம் போன்ற பகுதிகளிலும், எல்லைப் புறச் சிங்களக் கிராமங்களிலும் தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த காட்டுப் பகுதியூடாக அமைந்திருக்கும் பாதைகளைத்தான் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் எனப் படைத்த தரப்பு கருதுகின்றது. அதனால், சிலாவத்துறையைக் கைப்பற்றினால் புலிகளின் வில்பத்துக் காட்டினூடான போக்குவரத்தும் தடைப்படும் என்பது படைத் தரப்பினது கணிப்பு.
இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஒருவர், இது ஒரு இராணுவ தாக்குதல் நடவடிக்கை அல்ல எனக் கூறியிருக்கின்றார். இது மக்களை மீட்பதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கைதான் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைத்துச் செயற்படவில்லை என்பதையும், புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைத்தான் முன்னெடுக்கின்றோம் என் சர்வதேச சமூகத்தின் முன்பாகக் காட்டிக்கொள்வதற்கான ஒரு கருத்தே இது என்பதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. அதாவது தமது இராணுவ முகத்துக்கு ஒரு மனிதாபிமான முகமூடியைப் போடும் ஒரு முயற்சிதான் இது.
அப்படியானால் இந்த பாரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழலாம். யாருடைய கட்டுப்பாட்டிலுமில்லாத ஒரு பகுதியைக் கைப்பற்ற இப்படியொரு தாக்குதல் நடவடிக்கையா?
முதல் நாள் நடவடிக்கையின் போது இராணுவத்தினர் சிலாவத்துறை, அரிப்பு, கொண்டைச்சி ஆகிய பகுதிகளை கைப்பற்றினர். இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சிலாவத்துறை மற்றும் அரிப்பு பகுதிகளை அண்டிய பகுதிகளை படையினர் சென்றடைந்தனர். அங்கு எந்த விதமான எதிர்ப்பையும் விடுதலைப் புலிகள் காண்பிக்கவில்லை. அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிகளை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தினர் கொண்டுவந்த பின்னர் இராணுவத்தினரின் வாகனங்களும், காலாட் படையினரும் அப்பகுதிக்கு நகர்ந்தனர். இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு முள்ளிக்குளம் பகுதியும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக இராணுவத் தரப்புத் தெரிவித்தது. இப்பிரதேசமானது அரச படைகளோ அல்லது புலிகளோ முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டிருக்காத பிரதேசமாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றது. புலிகளின் மரபுவழிப் படையணிகள் எதுவும் நிலைகொள்ளாத அப்பிரதேசத்தினை சிறிலங்கா இராணுவத்தினர் நடந்து சென்று நிலைகொண்டுவிட்டுப் பாரிய இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்வது சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை மறக்க வைப்பதற்குத்தான் உதவுமே தவிர வேறொன்றுக்குமல்ல.
அதனால்தான் பிரச்சார நோக்கத்துடன் கூடிய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது இராணுவ நலன்களை நோக்கமாகக் கொண்டதல்ல.. பதிலாக தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்பதே உண்மை. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



இந்த நடவடிக்கையானது இரண்டு இராணுவ நோக்கங்களைக் கொண்டது என்பது சிறிலங்கா படைத் தரப்பின் தகவலாக இருந்தது.
இந்த இந்த இரண்டு இராணுவ நோக்கங்களனதும் அடிப்படையில்தான் இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த இலக்கில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக இராணுவத் தரப்பு இப்போது உரிமை கோருகின்றது.
இந்த நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த ஒரு வார காலத்தில் ஒரு சந்தர்பத்தில் கூட புலிகளுடன் முன்னேறிச் சென்ற படையினர் நேரில் மோதிக்கொள்ளவில்லை என்பதுதான். இந்த நடவடிக்கையின் போது புலிகள் தரப்பில் யாரும் கொல்லப்படவும் இல்லை. பல உண்மைகளை வெளிப்படுத்துவதாக இதுததான் இருக்கின்றது. இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்காதததுதான் இதற்குக் காரணம்.
இது முற்று முழுதாக அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான் என்பதே அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது. தென்பகுதியில் அரசுக்கான எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது. ஐ.தே.க. மட்டுமன்றி ஜே.வி.பி. கூட அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றது. அதிகரித்து வரும் விலைவாசிகள் மக்களுக்குப் பெரும் சுமையைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் கிழக்கு வெற்றியைப் பற்றி மட்டுமே தொடர்ந்தும் பேசக்கொண்டிருக்க முடியாது. வடபகுதியிம் அதிலும் குறிப்பாக வன்னியையடுத்துள்ள ஒரு பகுதியில் பாரிய இihணுவ வெறறியொன்றைக் காண்பித்து சிங்கள மக்களைக் கவர வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. அதற்காகத்தான் சிலாவத்துறை தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது.
சிலாவத்துறையும் அதனையடுத்துள்ள பகுதிகளும் இராணுவத்தினதோ அல்லது விடுதலைப் புலிகளினதோ கட்டுப்பாட்டிலிருக்காத ஒரு பகுதியாகும். இப்பகுதிக்கு விடுதலைப் புலிகளும் வந்து செல்வது வழமை. இராணுவத்தினரும் வந்து செல்வதுண்டு. புலிகளின் கட்டமைப்புக்களோ அல்லது நிர்வாகப் பிரிவுகளோ இங்கு செயற்படவில்லை. புலிகளின் மனிதாபிமானப் பணியாளர்கள் சிலர் மட்டும்தான் இப்பகுதியில் இருந்துள்ளார்கள் என புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஆக, புலிகளின் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு பகுதியில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தென்பகுதிச் சிங்கள மக்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நன்றாக ஏமாற்றியிருக்கின்றது என்பதே உண்மை.
இப்பொழுது மகிந்த அரசின் நெருக்கடி என்னவென்றால் சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் தொடர்ச்சியாக வெற்றிச் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே தொடர்ந்து தமது ஆட்சி அதிகாரத்தினை தென்னிலங்கையில் தக்கவைக்கமுடியும். ஏன்பதாகும். ஆனால் இப்பொழுதோ படைத்துறை மிகவும் கடினமான இக்கட்டான நிலைமைக்குள் வந்துவிட்டது. புலிகளின் கோட்டையாக விளங்கும் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்குள் காலடி எடுத்துவைப்பது என்பது ஆபத்தானது என்பது அரசுக்குத் தெரியும். 
