22. November 2008 12:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
4. October 2008 12:47
11. October 2008 23:48
3. October 2008 18:45
27. August 2008 15:01
இராணுவ, பொருளாதார முற்றுகைக்குள் யாழ்ப்பாணக் குடாநாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சத்தியன்   
7. October 2007 09:00

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிக்கை  ஒன்றில் யாழ்ப்பாணத்தின் நிலை தொடர்பாக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குடாநாட்டு மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள் எனவும் அவர்களது வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறியிருக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் குடாநாட்டின் இன்றைய நிலை எவ்வாறிருக்கின்றது என்பதையிட்டு 'முரசம்'  வாசகர்களுக்காக இவ்வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள் இரண்டுவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது முதலாவது பிரச்சினை அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைதான். அதாவது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பான பொருளாதாரப் பிரச்சினை.

அவர்களது இரண்டாவது பிரச்சினை உயிர்ப் பிரச்சினை. அதாவது கொலைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தப்பித்துக்கொள்வது என்பது தொடர்பிலான பிரச்சினை. அத்துடன் இராணுவக் கெடுபிடிகள். இந்த இரண்டு பிரச்சினைகளும்  குடாநாட்டு மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான ஏ-9 பாதை மூடப்பட்டமை, மீன்பிடித் தடை, அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் என்பவற்றால் மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை மோசமடைந்திருக்கின்றது. குடாநாட்டுக்கான அத்தியவசியப் பொருட்களின் விநியோகத்துக்கு கப்பலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதால், அவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.   அத்துடன் அவற்றின் விலைகளும் சாதாரண மக்களுக்கு எட்டாததாகிவிட்டது. மீன்பிடித் தடை காரணமாக ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்திருப்பதுடன், குடாநாட்டு மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றான மீனுக்குப் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது.

இதனைவிட அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்கின்றார்கள். இவர்களுக்கான மாற்று இருப்பிடங்களையோ அல்லது, நிவாரணங்களையோ வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால், இவர்களது அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருக்கின்றது. இவர்கள் கைவிட்டுவந்த விவசாய நிலங்கள் பாழடைந்துகொண்டிருக்கின்றது. இதனால் ஒருபுறம் உள்ளுர் விவசாய உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன மறுபுறம் இவற்றை தமது ஜீவனோபாயத்துக்கு நம்பியிருந்த விவசாயிகள் கையேந்தும் நிலையில் உள்ளனர்.

உத்தியோகப்பற்றற்ற ஒரு தகவலின் படி யாழ் மாவட்டத்தில் மட்டும் இரு வருடத்துக்குள் சுமார் 1200 இளம் விதவைகள் உருவாகியுள்ளர்கள். அதாவது 1,200 க்கும் அதிகமானவர்கள் சுட்டுக் கொல்லப்படடுள்ளார்கள். சுமார் 2 இலட்சம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்கள். காணமல் போவோர் அதிகரித்துள்ளமை தொடர்பாக உலகிலேயே இரண்டாம் இடம் இலங்கைக்குத்தான் கிடைத்துள்ளது. ஈராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமை மீறல் இடம்பெறும் நாடாக இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்படும் இடமாக யாழ்ப்பாணம்தான் இருக்கின்றது. 

மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தகவலின்படி, குடாநாட்டில் தினசரி இரண்டு பேர் கொல்லப்படுகின்றார்கள். மேலும் இரண்டு பேர் கடத்திச் செல்லப்படுகின்றார்கள். கடத்திச் செல்லப்பட்டவர்கள் திரும்பிவரும் நிகழ்வுகள் ஒருபோதுமே இடம்பெறுவதில்லை. இந்த நிலைமைகள் காரணமாக தமது உயிருக்கு அஞ்சி குடாநாட்டிலுள்ள மனித உரிமைகள் பணியகத்தில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. தினசரி இரண்டு அல்லது மூன்று பேர் அடைக்கலம் கோருவதால், இதுவரையில் இவ்வாறு அடைககலம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் இருநூறாக அதிகரித்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதி. இங்கு இராணுவத்தைத் தவிர அரசாங்கத் துணைப் படையான ஈ.பி.டி.பி.யும் செயற்படுகின்றது. குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் இந்த இரு தரப்பினரும்தான் காரணமாக இருக்கின்றார்கள். குடாநாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் இடம்பெற்றுள்ள படுகொலைகளை ஒப்பிட்டு நோக்கினால், அவை அனைத்தும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருக்கும் வேளையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. குடாநாட்டில் இரவு 7.00 மணி முதல் காலை 6.00 மணிவரையில் ஊடங்குச் சட்டம் தினசரி றடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுமார் 40,000 படையினர் குவிக்கப்பட்டு, சந்திக்குச் சந்தி பாதுகாப்பு அரண்களை அமைத்து படையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு நடைமுறையிலுள்ள வேளையில் வெள்ளை வான்களில் வந்து கொலைகளையும், கடத்தல்களையும் செய்யக் கூடிய துணிச்சல் யாருக்கு வரும் என்ற கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தில் எழுப்பப்படுகின்றது.

அதனால்தான் குடாநாட்டில் இடம்பெறும் படுகொலைகள் அனைத்தும் இராணுவத்தால் அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அல்லது, இராணுவத் துணைப் படையினரால் செய்யப்படுகின்றது என மனித உரிமைகள் அமைப்புக்கள் சில சுட்டிக்காட்ட முன்வந்திருக்கின்றன. குடாநாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள், கொல்லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கும் நிலைமையில் இவற்றில் சம்பந்தப்பட்ட யாருமே கைது செய்யப்படவோ அல்லது விசாரணைக்குள்ளாக்கப்படவோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த வாரம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவை நியூயோர்க்கில் சந்தித்த அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நிக்கலஸ் பேர்ன் கூட இந்த நிலைமைகள் தொடர்பாக முக்கியமாகச் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் சற்று மேம்பாடடைந்திருப்பதையிட்டு தன்னுடைய திருப்தியை அவர் வெளிப்படுத்தினார். அதாவது கொழும்பில் ஆள்கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் மோசமானதாகவிருக்கின்றது என்பதைக் குறிப்பிடத்தவறவில்லை. இந்த நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றவாழிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

குடாநாட்டைப் பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்குள்ள மக்களின் உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்பட்டிருக்கின்றது. ஊயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும் குடாநாட்டைவிட்டு அவர்களால் வெளியேற முடியாமலிருப்பதுதான் மிகப்பெரிய கொடுமை.

குடாநாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு மார்க்கங்கள்தான் இப்போது இருக்கின்றன. ஓன்று பலாலியிலிருந்து விமான மூலமாக வரமுடியும். இது பெருமளவு செலவானதாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் கப்பல் மூலமாகவே வெளியேற விரும்புகின்றனர். இது பெரும் சிரமமானதாக இருந்தாலும் செலவு குறைவானதென்பதால் இதனைத்தான் பலரும் விரும்புகின்றார்கள். ஆனால், இந்த இரண்டு வகையான பயணங்கபளுக்கும் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கே நீண்ட கால தாமதம் ஏற்படும் என்பதுடன் பலத்த சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாதுகாப்பு அனுமதிக்காக பெயர், முகவரி போன்ற தகவல்களைப் பதிந்துவிட்டு வந்தவர்கள் பின்தொடரப்பட்டு கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அதனால்தான் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் அலுவலகத்தில் தஞ்சமடைகின்றார்கள். இவ்வாறு தஞ்சமடைபவர்கள் சாதாரண கைதிகளைப் போல சிறைச்சாலைகளில் வைக்கப்படுகின்றார்கள். இவர்களில் பலர் கிரிமினல் குற்றவாழிகளுடன் அடைக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை. திறந்தவெளிச் சிறைச்சாலையாகவுள்ள குடாநாட்டில் வசிப்பதைவிட, அடைக்கப்;பட்ட சிறைச்சாலை தமது உயிர்களுக்குப் பாதுகாப்பைத் தரும் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் குடாநாட்டு மக்கள் உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் குடும்பம், குடும்பமாகவே அடைக்கலம் புகுந்து சிறை வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு. உலகில் எங்காவது இப்படியிருக்குமா?

குடாநாட்டில் பிறந்துவிட்டதால், பிறந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என விரும்பியதால் இவ்வாறான கொடுமைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதுதான் அவர்களது தலையெழுத்தாக இருக்கின்றது.

இதற்கு என்ன முடிவு எப்போது முடிவு என்பதுதான் இன்று அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >