| கள நிலையை தலைகீழாக மாற்றிய அநுராதபுரத் தாக்குதல் |
|
|
| - சத்யன் - | ||
| 27. October 2007 17:51 | ||
|
மிகவும் பாதுகாப்புடன் கூடிய அநுராதபுர விமானத் தளத் தாக்குதலின் மூலம் ஏனெனில், அநுராதபுர விமானத்தளத் தாக்குதலைப் பொறுத்தவரையில் புலிகளின் விமானப் படையால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மிகவும் குறைவு . விமானத் தளத்துக்குள் ஊடுருவிச் சென்ற கரும்புலிகளால்தான் அந்தளவு சேதங்களும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தரையில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் விமானப் படையையும் அதற்கு உதவியாகப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒத்திகையை இதன் மூலம் புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என்பதுதான் அவரது கருத்து . இக்கருத்தின் அடிப்படையில் பார்த்தால், இது போல தரைப் படையும், வான் படையும் இணைந்த தாக்குதல்களை புலிகள் மேலும் நடத்தலாம் என அவர் எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது .
மிகவும் துல்லியமான திட்டமிடலுடன் கூடிய துணிச்சலான ஒரு நடவடிக்கையாகவே அநுராதபுரத் தாக்குதல் சர்வதேச இராணுவ ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. உலகில் எந்தவொரு கெரில்லா அமைப்பும் நடத்தியிராத வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது . அத்துடன் இவ்வாறான தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடிய சக்தியுடன் எந்தவொரு கெரில்லா அமைப்பும் உலகத்தில் இல்லை என ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றார்கள் . மிகவும் சிரமத்துடன் சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள், துல்லியமான விடுதலைப் புலிகளின் சிறப்புப் பயிற்சிபெற்ற 21 கரும்புலிகளே இத்தாக்குதலில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இரண்டு பகுதிகளுடாக விமானப் படைத் தளத்துக்குள் ஊடுருவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உள்ளே நுனைந்த உடனடியாகவே அதிரடியாக விமானப் படைத் தளத்தை அவர்கள் தம்முடைய முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் . 20 நிமிடங்களுக்குள்ளேயே காவலரண்களில் கடமையிலிருந்த விமானப் படையினரை சுட்டுவீழ்த்திய அவர்கள், காவலரண்களிலிருந்த ஆயுதங்கள் தொலைத் தொடர்பு கருவிகளைக் கைப்பற்றி , அங்கிருந்த ராடார்களையும் செயலிழக்கச் செய்ததுடன், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் .
எந்தவொரு இழப்புக்களையும் சந்திக்காமல் முதல் 20 நிமிட நேரத்தில் இதனைச் செய்துமுடித்த கரும்புலிகள் தம்மிடமிருந்த சற்றலைட் தொலைபேசி மூலமாக கள நிலைமைகளை வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தினார்கள் . இந்தத் தகவலைத் தொடர்ந்தே வன்னியிலிருந்து விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்களும் புறப்பட்டது. அநுராதபுரத்தில் தமது விமானங்களுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே புலிகளின் இரண்டு விமானங்களும் வந்து குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பிச் சென்றன .
அதேவேளையில், அநுராதபுர விமானத் தளத்திலுள்ள விமான எதிர்ப்பு நிலைகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விடுதலைப் புலிகள் , அதிலிருந்த விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களைத் தகர்க்கத் தொடங்கினார்கள். காலை 9.00 மணிவரையில் அங்கிருந்த விமானங்கள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன. ஹெலிக்கொப்டர்கள் விமானங்கள் என மொத்தம் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட இங்குள்ள ஆயுதக் களஞ்சியம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டிருக்கின்றது . இந்த களஞ்சியம் வெடித்தபோது அநுராதபுரமே அதிர்ந்தது. தளத்தின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சத்தால் வீடுகளைவிட்டு வெளியேறினார்கள்.
இதேவேளையில், அநுராதபுர விமானத் தளம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிலையில் அங்குள்ள படையினருக்கு உதவுதற்காகவென வவுனியாவிலிருந்து விரைந்த விமானப் படையின் பெல் 212 ரக ஹெலிக்காப்டர் மிகிந்தலைப் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் அநுராதபுரம் பகுதிக்குள் நுளைந்திருப்பதாக படையினருக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்தே குறிப்பிட்ட ஹெலிக்கொப்டர் புலிகளுடையதாக இருக்கலாம் எனக் கருதிய படையினர் அதனைச் சுட்டுவீழ்த்தினார்கள் . அதிலிருந்த நான்கு படையினரும் கொல்லப்பட்டனர். காலை சுமார் 3.00 மணியவில் விமானத் தளத்துக்குள் நுளைந்த விடுதலைப் புலிகள் காலை சுமார் 11 மணிவரையில் முகாமைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் , வன்னித் தலைமையுடன் தொடர்புகளையும் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்குப் பின்னரே அவர்கள் தம்மைத் தாமே வெடிக்கவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்கள் . விமானப் படை முகாமில் பத்து விமானப் படையினர் கொல்லப்பட்டனர். ஹெலி விபத்தில் 4 பேர் பலியானார்கள். இதனைவிட முகாமிலிருந்த பெருந்தொகையான விமானப் படையினர் நிலத்துக்கு அடியிலுள்ள பாதுகாப்பு அரண்களுக்குள் பதுங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . விமானப் படையினருக்குப் பயிற்சியளிப்பதற்காக வந்திருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சிலரும் இவ்வாறு நிலத்துக்கு அடியிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது . அநுராதபுர விமானத் தளம் பொதுவாக விமானப் படையினருக்கான பயிற்சி முகாமாகவே செயற்பட்டுவருகின்றது. விமானப் படையினருக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றும் இங்குள்ளது. விமானப் படைக்குப் பயிற்சியளிப்பவர்களும் இங்குதான் தங்கியிருப்பார்கள். பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளின் விமானப் படை அதிகாரிகளும் இங்கு அடிக்கடி விஜயம் செய்வார்கள். விமானப் படையினருக்கு இவர்கள்தான் பயிற்சியளிக்கின்றனர். இதனைவிட கடற்பிராந்தியத்தில் புலிகளின் நடமாட்டங்கள் தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களும் இந்த முகாமிலிருந்தே பெறப்படுகின்றது. அதிநவீன வசதிகளுடன் கூடிய 'பீச் கிராப்ட்' என்ற கண்காணிப்பு விமானம் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது . இந்த விமானம் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டிருப்பது விமானப் படைக்கு ஒரு பாரிய இழப்பாகவே கருதப்படுகின்றது. இதன்மூலம் கடலில் தம்முடைய கட்டுப்பாட்டை அரசாங்கம் இழக்கும் நிலை ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது . விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்கும் அதன் மீதான தாக்குதல்களை நடத்துவதற்கும் தேவையான புலனாய்வுத் தகவல்கள் இந்த விமானத்தின் மூலமாகவே பெறப்பட்டது . இதனைவிட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புனாய்வுக் கண்காணிப்பு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் ஆட்களின்றிச் செல்லக் கூடிய விமானங்களும் இங்குதான் நின்றன. அவையும் அழிக்கப்பட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் திறனைப் பாதிப்பதாகவே உள்ளது. வன்னிப் பகுதியை நோக்கிய பாரிய படை நகர்வை அரச படைகள் விரைவில் ஆரம்பிக்கப்போகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புலிகள் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதல் அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்திருக்கின்றது . வன்னி மீதான ஒரு படைநடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்காகச் சேகரிக்கப்பட்டிருந்த ஆயுதங்களின் ஒரு பெரும் தொகுதி இத்தாக்குதலின் மூலம் அழிக்கப்பட்டிருக்கின்றது . அதாவது உடனடியாக மற்றொரு தாக்குதலுக்குத் தம்மைத் தயார்படுத்தக் கூடிய நிலையில் அரச தரப்பு இல்லை. இழக்கப்பட்ட விமானங்களை ஈடுசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருக்கின்றார் . ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள பொருளாதாரத்தை இது மேலும் பாதிக்கப்பேகின்றது . அதாவது அநுராதபுரத் தாக்குதல் இராணுவ அரசியல் பொருளாதார நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் தொடர்பாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் சுருக்கமாக இவ்வாறு கூறியிருக்கின்றார்: "கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன." கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
||
| < முந்தைய | அடுத்த > |
|---|




விடுதலைப் புலிகள் உணர்த்தியிருக்கும் விடயங்கள் பல. தரைப் படையினர் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் விமானத் தாக்குதலையும் தம்மால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் விடுதலைப் புலிகள் உணர்த்தியிருக்கும் முக்கிய விடயமாகும் . தரைப் படைகளுடன் இணைந்து விமானத் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகள் நடத்தியிருப்பது இதுதான் முதல் தடவையாகும். இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவருடைய கருத்தின்படி, தமது விமானப் படையை ஒரு பரிசோதனை முயற்சியாக அல்லது ஒரு ஒத்திகையாகத்தான் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்கின்றார்கள் .
திட்டமிடல் , கடுமையான பயிற்சி, நேர்த்தியான ஒத்திகை என்பன இந்தத் தாக்குதலின் வெற்றிக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது. அநுராதபுரம் விமானத் தளத்தின் உள் அமைப்பு, காவலரண்கள் அமைந்துள்ள இடங்கள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் , ஆயுதக் களஞ்சிகள், இங்குள்ள படையினரின் எண்ணிக்கை என்பன தொடர்பான முழுமையான தகவல்களும் துல்லியமாகப் பெறப்பட்ட பின்னரே தாக்குதலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.


