22. November 2008 12:28
 
 
சுவிஸ் லுட்சேர்னில் நடைபெற்ற பிரிகோடியர் தமிழ்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களது வீரவணக்க நிகழ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
4. November 2007 18:35
01tamilselvan-03110சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் சனிக்கிழமை (03.11.07) தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களது வீரவணக்க நிகழ்வு மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டன. பிரதான சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து 5 மாவீரர்களுக்கும் ஈகைச்சுடரினை திரு.அன்ரன் பொன்ராசா, திரு.சண்முகதாஸ், திரு.ரஞ்சன், திரு.விஜயரட்ணம், திரு.சுபைதரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயபரிபாலன சபையினர் நெய்விளக்கு ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெருந்திரளாக வந்திருந்த மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
01tamilselvan-03110  30atamilselvan-03110 
 10tamilselvan-03110
18tamilselvan-03110

மேலும் நீதிக்கும் நேர்மைக்கும் ஆன சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு.அன்ரன் பொன்ராசா, சுவிஸ் தமிழர்பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருஸ்ணஅம்பலவாணர், தமிழர் புணர்வாழ்வுக்கழக சுவிஸ் கிளை சார்பாக திரு.சிவா, லுட்சேர்ன் தமிழ்மன்ற நிர்வாகத் தலைவர் திரு.ரஞ்சன், துர்க்கை அம்மன் ஆலய உப.தலைவர் திரு.பகீர் ஆகியோரது இரங்கல் உரையோடு கவிதாஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இவ் நிகழ்வு நடந்த மண்டபம் இன்று சனிக்கிழமை (03.11.07) வாணி விழா நடைபெற ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதனை இரத்து செய்தநிலையில் இவ் வீரவணக்க நிகழ்வு மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்று சுமார் 17.45 மணியளவில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாராக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
 
< முந்தைய   அடுத்த >