22. November 2008 12:51
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
12. October 2008 00:13
27. August 2008 15:01
21. August 2008 23:30
15. October 2008 12:52
முகமாலைச் சமர்: ஆழம் அறியாமல் காலை வைத்து... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
- சத்தியன் -   
10. November 2007 19:49
07_11_07_ltte_02பாரியதிட்டமிடலுடன், அதிகளவான ஆயுத மற்றும் படைப் பலத்தையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவுவதற்குப் படையினர் மேற்கொண்ட மற்றொரு திட்டமும் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. முகாமாலை மற்றும் கிளாலி முன்னணிக் காவல் நிலைகளிலிருந்து வன்னிப் பகுதி யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக புதன்கிழமை அதிகாலை படையினர் ஆரம்பித்த முன்னகர்வு இரண்டு மணி நேரக் கடுஞ்சமருடன் முடிவுக்கு வந்திருக்கின்றது. சில மைல் தொலைவுக்கு முன்னேறிய படையினர் பாரிய இழப்புக்களுடன் திரும்பவேண்டியிருந்தது.

வடபகுதியில்இடம்பெறும் அண்மைக்காலச் சமர்களைப் பொறுத்தவரையில் இந்த முகமாலைச் சமர் மிகவும் முக்கியமானது. சமீப காலச் சமர்களில் சந்தித்திராதளவுக்கு அதிகளவு இழப்புக்களை இந்தச் சமரில் அரச தரப்பு சந்தித்தது. வடக்கைப் பொறுத்தவரையில் , தமது பிரதேசத்த்தில் ஒரு அங்குத்தைக்கூட அரச படைகள் ஆக்கிரமிக்க முடியாதளவுக்கு விடுதலைப் புலிகள் பலமாக நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

வன்னியின் வவுனியா, மன்னார் பகுதி முன்னணி நிலைகளில் மட்டுமன்றி யாழ்ப்பாணப் பகுதி நிலைகளிலும் புலிகள் பலமாக இருப்பதை இந்தச் சமர் மீண்டுமொரு முறை தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்தைப்பொறுத்தவரையில் இராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த இராணுவ முன்னகர்வுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

தமிழ்ச்செல்வனின்மரணத்துடன் விடுதலைப் புலிகளின் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும், இராணுவ ரீதியாகப் பலவீனமடைந்திருப்பார்கள் எனவும் படைத் தரப்பு எதிர்பார்த்தது. அதனால்தான் பாரிய திட்டமிடலுடன், பெருந்தொகையான படைப் பலத்தைப் பயன்படுத்தி இந்த முன்னகர்வுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. குறிப்பிட்டளவு பிரதேசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது , முடிந்தளவுக்கு அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திட்டத்துடனேயே படைத் தரப்பு முன்னேறியது. கிளிநொச்சியை நோக்கிய முன்னகர்வின் முக்கிய கட்டமாக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அல்லது அவ்வாறான பிரச்சாரத்தையாவமது முன்னெடுக்கலாம் என அரச தரப்பு திட்டமிட்டிருந்தது . அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை வெகு விரைவில் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் படைத் தரப்புக்கு இருக்கின்றது. இதற்காக விடுதலைப் புலிகளிடமுள்ள திட்டங்களைச் சீர்குலைப்பதும் இந்தப் படை முன்னகர்வின் நோக்கங்களில் ஒன்று எனக் குறிப்பிடலாம். இவை அரசாங்கத்தின் இராணுவ நோக்கங்களாகும். ஆனால், இந்த இராணுவ நோக்கத்தைவிட அரசியல் நோக்கங்கள் முன்னணியில் இருந்தபடியால்தான் படைத் தரப்பு பலத்த அனர்த்த்தைச் சந்திக்கவேண்டியிருந்தது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள் .

முகமாலை படை நடவடிக்கை இடம்பெற்ற புதன்கிழமைதான் அரசாங்கத்தின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த map-mugamaaliராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விலைவாசிகளும், வாழ்க்கைச் செலவீனங்களும் பெருமளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்குவதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கவில்லை. அதேவேளையில் பாதுகாப்புக்கென என்றுமில்லாதளவுக்கு பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்திடம் யுத்தத்தை முன்னெடுப்பதைவிட வேறு தெரிவுகள் எதுவும் இல்லை என்பதை இந்த வரவு செலவுத் திட்டமும் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது.

இந்தப்பின்னணியில் வரவு செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் உருவாக்கக்கூடிய அதிருப்தியைச் சமாளிப்பதற்கு இராணுவ வெற்றியொன்றைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரச தரப்புக்கு இருந்தது. அதற்காகத்தான் அவசரமாகத் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றார்கள் விமர்சகர்கள்.

முகமாலைச் சமரில் அரச தரப்பு வெற்றிபெற்றிருந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு மக்களின் அங்கீகாரம் சாதாரணமாகவே கிடைத்திருக்கும். ஆனால், சிறிலங்கா இராணுவம் முகமாலையில் நடைபெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரை இழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், கொல்லப்பட்ட படையினரின் தொகை இதனைவிடவும் அதிகமாக இருக்கலாம் என சுயாதீன மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை 5:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளான முகமாலை, கிளாலி, பூநகரி பகுதிகளை நோக்கி படையினர் கடுமையான பீரங்கி மற்றும் மல்ரிபரல் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறினார்கள் . இந்த கனரக சூட்டாதரவுடன் மோட்டார் எறிகணைகளையும் ஏவியபடி இராணுவத்தினரின் 55 ஆவது படையணி முகமாலைப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளை நோக்கி முன்னேறியது. இந்த மோதல்களின் போது படையினருக்கு ஆதரவாக எம்ஐ-24 உலங்குவானூர்தி ஒன்றும் தாக்குதல்களில் ஈடுபட்டது.

ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் கடுமையாக இருந்தது. முன்நகர்ந்த படையினர் மீது அவர்கள் கடுமையான பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர் . படையினர் கொலைக்களத்திற்குள் சென்றுள்ளது போன்ற நிலையே காணப்பட்டது . அதாவது, அங்கு ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பொறிக்குள் அவர்கள் சிக்கி விட்டனர். படையினர் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அதனைவிட விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாக படையினரை ஒரு பொறிக்குள் கொண்டுவந்தார்கள். அதனால்தான் படையினர் பாரிய இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

படையினரை உள்ளே நுளையவிட்டுச் சுற்றிவளைத்துத் தாக்குதலை நடத்தும் உபாயத்தைப் புலிகள் பின்பற்றினார்கள். விடுதலைப் புலிகளின் எறிகணைகளுடன் , அவர்களின் பொறி வெடிகளும் படையினருக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. பொறிவெடிகளில் சிக்கியே அதிகளவான படையினர் காயமடைந்தனர். படையினருடைய பெருந்தொகையான ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இரு மணிநேர கடும் சமரின் பின்னர் படையினர் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்பு தகவல் நிலையம் வெளியிட்ட அறிக்கையில் படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுமார் 5 மைல் உள்ளே சென்று புலிகளுக்குப் பாரிய சேதங்களை ஏற்படுத்திவிட்டு படையினர் வெற்றிகரமாகப் பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முகமாலையில் படையினருக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களுடைய அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களைச் சிதறடித்துவிட்டது. பதிலாக எதிரணியினரின் கடுமையான விமர்சனங்களைத்தான் அரச தரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இம்மோதலில் 68 படையினர் கொல்லப்பட்டு 60 படையினர் காணாமல் போயிருப்பதாக எதிரணி அரசியல் தலைவர் ஒருவர் கூறியிருக்கின்றார். அத்துடன் படையினரின் இரண்டு கவச வாகனங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

 07_11_07_ltte_06

 07_11_07_ltte_05

07_11_07_ltte_02 

பாரிய இழப்பைச் சந்தித்துள்ள அரச படையினர் மற்றொரு வலிந்த தாக்குதலுக்கு இப்போதைக்குத் தயாராகுவார்களா என்பது கேள்விக்குறிதான். அநுராதபுர அனர்த்தம், இப்போது முகமாலையில் சந்தித்த இழப்பு என்பன படையினரைப் பெரிதாகப் பாதித்திருக்கின்றன . இது பற்றிய தகவல்களை மூடிமறைக்க வேண்டி நிர்ப்பந்தம் அரசுக்குள்ளது. ஆனால், உடனடியாக மற்றொரு தாக்குதல் நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகுவார்களா என்பது கேள்விக்குறிதான் .

இந்த நிலையில் படைத்தரப்பையும், அரச தரப்பையும் மட்டுமன்றி சிங்கள மக்களையும் குழப்பிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி இருக்கின்றது. அதாவது மாவீரர் வாரத்துக்கு முன்னர் மற்றொரு பாரிய தாக்குதலை விடுதலைப் புலிகள் நடததப்போகின்றார்களா என்பதுதான் அந்தக் கேள்வி ...

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >