| சுவிசில் நடைபெற்ற 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வு |
|
|
| . | |||||
| 16. December 2007 16:57 | |||||
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் Köniz Mehrzwekhalle இல் நேற்று சனிக்கிழமை (15.12.07) மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. [படங்கள் இணைப்பு]
மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகிய எழுச்சி நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் மூர்த்தி ஏற்றி வைத்தார். அகவணக்கம், மலர்வணக்கம் ஆகியவற்றினைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை கலை, பண்பாட்டுக் கழக இசைக்குழுவினரின் இசையில் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் நினைவைச் சுமந்த எழுச்சிப்பாடல்கள் பாடப்பட்டன.
'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் வரலாறு சுமந்த ஒளித்தொகுப்பு வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. எழுச்சி நடனங்கள், 'பாலா மாமா" என்ற தலைப்பில் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடத்திய மாவீரர் ஞாபகார்த்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவனின் பேச்சு, கவிதை ஆகியன இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு பாலா அண்ணனிற்கு தம் வணக்கத்தைச் செலுத்தினர்.
நிறைவாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி இறக்கப்பட்டதோடு தமிழரின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமென அனைவரும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்க நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன.
மேலதிக படங்கள் படத்தொகுப்பிள் இணைக்கப்பட்டுள்ளது
|
|||||
| < முந்தைய | அடுத்த > |
|---|


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் Köniz Mehrzwekhalle இல் நேற்று சனிக்கிழமை (15.12.07) மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 


