22. November 2008 11:27
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
15. October 2008 12:52
29. September 2008 22:52
19. August 2008 23:28
21. August 2008 23:30
சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு வலைப்பின்னலும்…மகேஸ்வரனின் படுகொலைய அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவன்   
4. January 2008 01:29
ஒரு கோரமான படுகொலைச் செய்தியுடன்தான் இந்த புதிய வருடம் பிறந்திருந்தது.     [முரசத்திற்காக ஆய்வு நிலவன்]
mageaswaran-1.jpgமுன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டதான செய்தியைத் தாங்கியதாக 2008ம் வருடம் பிறந்திருந்தது.

புத்தாண்டு தினம் காலை 9.15 மணியளவில்  கொழும்பு கொச்சிக்கடையில்  உள்ள சிறீ பொன்னம்பலவானேஸ்வரர் (சிவன் கோவில்) ஆலயத்தில் புதுவருடப் பிறப்பையொட்டி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது இவர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது மகேஸ்வரன் படுகாயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகராஜா மகேஸ்வரன் சிகிற்சைகள் பலனின்றி  காலை 10.10 மணியளவில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மகேஸ்வரனது மெய்பாதுகாவலர் ஒருவர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டார். அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்ட மேலும்  7 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மகேஸ்வரன் மீது தாக்குதலை மேற்கொண்ட கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. மகேஸ்வரனின் மெய்பாதுகாவலர்கள் திருப்பித் தாக்கியதில் கொலையாளி காயமடைந்ததாகவும், காயமடைந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவிக்கின்றது.

காயமடைந்திருக்கும் கொலையாளி இரு அடையாள அட்டைகளை வைத்திருந்தார் என்றும் அவற்றில் ஒன்று சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அடையாள அட்டை என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வசமுள்ள சிறிலங்கா தேசிய ஆள் அடையாள அட்டையில் அவரது பெயர் வசந்தன் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் அவர்வசம் இருந்த சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய அடையாள அட்டையில் கொலையாளியின் பெயர் வலன்டைன் என குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.  

மகேஸ்வரனைக் கொலை செய்த வசந்தன் என்ற நபர் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரதர் அணியில் இருந்தவர் என்றும் அந்த அணியின் யாழ்ப்பாண பொறுப்பாளர் சுபத்திரன் கொல்லப்பட்ட பின்னர் ஈ.பி.டி.பியில் இணைந்து கொண்டவர் என்றும் தெரியவருகிறது. கொழும்பில் தற்போது சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது.

தோமஸ் கொலின்ஸ் என்ற வசந்தன் என்பவர் ஈ.பி.டி.பி. துணை இராணுவக் குழுவின் தலைவரும், அரசாங்கத் தரப்பு அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மெய்க்காப்பாளராகக் கடமையாற்றியதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வுதுறையிலும் கடந்த 5 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார் என்று தற்பொழுது சிறிலங்கா ஊடகங்கள் உறுதிப்படுத்திவருகின்றன. அதாவது மகேஸ்வரனைக் கொலை செய்த கொலையாளி சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகின்றது. அதேவேளை, இந்த நபர் ஈ.பி.டி.பி.யில் ஒரு முக்கிய பதவி வகிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.டி.பி. அமைப்பு என்பது ஒரு அரசியல் சாயம் பூசப்பட்ட சிறிலங்கா அரசின் புலனாய்வு அமைப்பு என்பது யாவரும் அறிந்த ஒரு இரகசியம்

படுகொலையின் நோக்கங்கள்:       

 சரி இனி இந்த கொலையின் நோக்கம் பற்றிப் பார்போம்.

இந்த படுகொலைக்கு ஒரு முதன்மை நோக்கமும் (Primary Object), மற்றொரு இரண்டாந்தர நோக்கமும் (Secondary Object) உள்ளது.

முதன்மை நோக்கம், படுகொலை நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் மகேஸ்வரன் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த செவ்வி. என்று கூறப்படுகின்றது.  2007ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் கொழும்பில் உள்ள  தனியார் தொலைக்காட்சியான சக்தி தொலைக் காட்சியில் மின்னல் நிகழ்சியில்  கலந்துகொண்ட ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன், யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவான ஈபிடிபியினரின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார். குறிப்பாக யாழ் குடாநாட்டில் சிறிலங்கா அரச படைகள் மற்றும் ஈபிடிபியினர் அரங்கேற்றும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணமல் போதல்கள் போன்ற விடயங்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 அன்றைய நிகழ்சியில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் மகேஸ்வரன் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக வருவதற்காக ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்த டக்ளஸ் தேவானந்தா, பௌத்த பீடாதிபதிகளிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தமை ஒரு வெட்கம் கெட்ட செயல் எனவும் இதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனவும் விமர்சித்திருந்தார். இந்த அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மகேஸ்வரன் நேரடியாகவே பதில்களை வழங்கியிருந்தார். குறிப்பாக ஆயுததாரி டக்ளஸ் தொடர்பில் அதிகளவு விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இராணுவத்தின் துணைக்குழுக்கள் கொழும்பில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும்,

இராணுவத்தின் துணைக்குழுக்கள் ஒவ்வொரு மாதமும் பத்துப் பேர் வீதம் கொழும்பில் இருந்து யாழ்பாணம் கொண்டு செல்லப்பட்டு அவர்களைக் கொண்டு படுகொலைகள், கப்பம் மற்றும் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் அங்கு நடாத்தப்பட்டு வருகின்றன என்றும் மகேஸ்வரன் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த விடயம் வெகு விரைவில் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்று தெரிவித்த மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் பல ஒட்டுக் குழு உறுப்பிர்கள் தன்னால் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர் விவரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் மகேஸ்வரன் தெரிவித்தார். யாழில் செயற்படும் ஈ.பி.டி.பி. ஒட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்களை 2008ம் ஆண்டு ஜனவறி 8ம் திகதி நாடாளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அவர் அந்த தொலைக்காட்சி நேர்காணலில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

தியாகராஜா மகேஸ்வரனால் இறுதியாக வழங்கப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலே அவரது படுகொலைக்கு  காரணமாக அமைந்திருக்கலாம் என்று  நம்பப்படுகின்றது.

மகேஸ்வரனின் படுகொலைக்கான முதன்மை நோக்கமும் (Primary Object) இதுதான். மகேஸ்வரின் படுகொலைக்கான இரண்டாந்தர நோக்கமும் (Secondary Object) இருக்கின்றது. அதுதான் முக்கியமானது.ஒரு கொடுரமான படுகொலையின் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஒருவித உளவியல் பீதியை (fear psycho) உருவாக்குவதுதான்; இந்த படுகொலையின் இரண்டாந்தர நோக்கம் (Secondary Object). கடவுளும் காப்பாற்ற முடியாது

சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் ஒரு நபரை அந்தப் பாதுகாப்பு படையினரே படுகொலை செய்வதென்பது ஒன்றும் பெரிய விடயம் கிடையாது.

உண்மையிலேயே மிகவும் இலகுவானதொரு காரியம் அது. சிறிலங்காவின் முப்படைகளினதும்; தளபதியினால் ஆளப்படும் ஒரு நாட்டில், சிறிலங்கா பாதுகாப்பு படையினரின்; பூரண கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடத்தில் வைத்து, சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் உள்ள ஒரு முக்கியஸ்தரைக் கொலை செய்துவிட்டு, ஆயிரம் காரணங்களைக் கற்பிக்கலாம். மனித உரிமைகள் அமைப்பு, எதிர்கட்சிகள் போன்றன சிறிது காலம் ஒப்பாரி வைத்துவிட்டு பின்னர் அடங்கிவிடுவார்கள். கொலையாளிகளுக்கும் இது நன்றாகவே தெரியும்.

எனவே உண்மையிலேயே மகேஸ்வரனைப் படுகொலை செய்யவேண்டுமானால், அவரை எங்கு வைத்து வேண்டுமானாலும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் அவரை இலகுவாகக் கொலை செய்திருக்க முடியும்.

ஆனால் மகேஸ்வரன் பட்டப்பகலில், ஒரு இந்து ஆலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

மகேஸ்வரனின் படுகொலை ஒரு இந்து வழிபாட்டு ஸ்தலத்தில், பலர்; முன்னிலையில், ஒரு தெய்வ வழிபாhடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இடம்பெற்றிருக்கின்றது. எனவே இந்தப் படுகொலை மூலம் கொலையாளி ஒரு செய்தியைச் சொல்ல முனைந்திருப்பது நன்கு தெரிகின்றது.

மகேஸ்வரனின் படுகொலை இடம்பெறுவதற்கு சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர், இதே போன்ற ஒரு வழியாட்டுத் தலத்தில் வைத்து இடம்பெற்ற மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், ஆராதனையின் முக்கிய நிகழ்வான நற்கருணையை பெற்றுக்கொள்ளும் பொழுது, படுகொலை செய்யப்பட்டார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில், உள்நாட்டு வெளிநாட்டுப் பாதிரியார்கள், ஆயர்கள் பிரசன்னத்தில், உலகமே பார்த்துக்கொண்டிருக்கையில் இந்தப் படுகொலை நடைபெற்றது. அந்தப் படுகொலை நடைபெற்ற மட்டக்களப்பு புனிதமரியாள் இணைப் பேராலயம் மட்டக்களப்பில் அதி உச்சப் பாதுகாப்பு வலயத்தின் மத்தியில் அமைந்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் சிறிலங்கா படையினரின் பாதுகாப்பில் இருந்த ஒரு முக்கியஸ்தர்: கொலை நடைபெற்ற பொழுது அந்த இடத்தில் ஏராளமான பாதுகாப்பு படையினர் இருந்திருந்தார்கள்.

கொலையாளிகள் நினைத்திரந்தாரல் பரராஜசிங்கத்தை வெறும் இரு மெய்பாதுகாவலர்களுடன் அவர் ஆலயத்திற்கு வரும் வழியில் வைத்து கொலை செய்திருக்க முடியும். அல்லது அவர் கிருஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அவரது உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது மிக இலகுவாகக் கொலை செய்திருக்க முடியும். ஆனால், பரராஜசிங்கத்தை பலர் முன்னிலையில், ஒரு வழிபாட்டுத் தலத்தில் வைத்துத்தான் படுகொலை செய்யவேண்டும் என்று அந்தக் கொலையாளிகள் தீர்மாணித்திருந்தார்கள். அந்தப் படுகொலை மூலம் கொலையாளி ஒரு செய்தியை உலகிற்குச் சொல்ல முனைந்தார்கள். அதாவது மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டால் அவர்கள் இரக்கமின்றிப் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற செய்தியை மட்டக்களப்பு மக்களுக்குச் சொல்ல கொலையாளிகள் அப்பொழுது விரம்பினார்கள். அப்பொழுது கருணா குழுவினருக்கு மட்டக்களப்பில் ஒரு அலுவலகம் கூட இருக்கவில்லை. கருணா குழு மட்டக்களப்பில்; பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களால் அங்கு எதையும் செய்யமுடியும் என்ற ஒரு செய்தியை ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் உலகிற்குத் தெரிவிக்க அவர்கள் அப்பொழுது விரும்பினார்கள்.

மட்டக்களப்பு மக்களை ஒருவித உளவியல் பீதிக்குள் (fear psycho) வைத்திருந்து, அவர்கள் மீது ஆட்சி நடாத்த சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்பியது. அதனால்தான் பிரபல்யமான ஒரு முக்கியஸ்தரைத் தெரிவுசெய்து, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க அவரை கோரமாகப் படுகொலை செய்தது. 

பலர் பார்த்துக்கொண்டிருக்க, பக்தர்கள் முன்னிலையில் மகேஸ்வரை படுகொலை செய்ததம் இதனால்தான். சிறிலங்காப் புலனாய்வப் பிரிவினரின் செயற்பாடுகள் பற்றி தகவல் சேகரிப்பவர்களுக்கும், உண்மைகளை வெளியிட நினைப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும் என்ற செய்தியை மகேஸ்வரனின் படுகொலை மூலம் உலகிற்குத் தெரிவிக்க சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு விரும்புகின்றது.

முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்ற காவல்துறையினரின் பாதுகாப்போ, அல்லது அவர்கள் கொழம்பில் தங்கியிருப்பதோ அல்லது அவர்களை மக்கள் மத்தியில் இருப்பதோ அவர்களுக்கு உண்மையான ஒரு பாதுகாப்பு இல்லை என்கின்ற செய்தியை மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்த்த சிங்களப் புலனாய்வப் பிரிவு விரும்புகின்றது.

வழிபாட்டு தலங்களில் வைத்து பிரபல்யம் வாய்ந்த முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதன் மூலம், கடவுள் கூட எங்களிடம் இருந்து உங்களைப் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது என்ற செய்தியை உலகிற்கு சொல்வதற்கு சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்புகின்றது. 

புதிய புலனாய்வு வலைப்பின்னல்:

மகேஸ்வரனின் படுகொலைச் செய்தி வெளிவருவதற்கு முன்னய தினம், சிறிலங்கா புலனாய்வுச் செயற்பாடுகளின் புதிய வடிவம் பற்றி மற்றொரு தகவலும் வெளிவந்திருந்தது. 

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் புதிதான உளவு வலைப் பின்னல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக இராணுவத் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்திருந்தன.

சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு, மற்றும் இரகசிய பொலிஸ் பிரிவு என்பனவற்றின் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிதான ஒரு உளவு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்த புதிய உளவு வலைப் பின்னலில், சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளுடன், சிறிலங்கா விமானப் படை மற்றும் சிறிலங்கா கடற்படை உளவுப் பிரிவு அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மேற்குலக புலனாய்வு அமைப்பொன்றிடம் இருந்து விசேட பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது செயற்பாடுகளுக்கான தனியான அலுவலகங்கள், தனியான உதவிப் புலனாய்வுப் பிரிவுகள் என்பனவும், இவர்களுக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  
(இந்த பிரிவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் விபரங்களைப் பெட்டிச் செய்தியில் பார்க்கவும்)

இந்த விசேட சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளின் பணிகள் என்ன என்பது பற்றிய விடயம் மர்மமாக உள்ளதாகவும், இவர்களது பணிகள் என்ன என்பது பற்றி, மற்றைய இராணுவ அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்றும் கொழும்பு இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தப் புலனாய்வுப் பிரிவினர் நேரடியாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ போன்றவர்களினால் நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும், மற்றைய இராணுவ உயரதிகாரிகள் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகின்றது.

பிரேமதாச ஆட்சிக் காலத்திலும் இது போன்றதொரு உளவு வலைப் பின்னல் உருவாக்கப்பட்டு பிரேமதாசவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வந்தது.

 
artikel.jpg

கிழக்கு மற்றும் கொழும்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்களைக் கடத்தி, அவர்களது கண்களை பிடுங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுடன், அவர்களது உடல்களை டயரில் போட்டு எரித்து, கொடுரமான மனித உரிமை மீறல்களில் இந்த உளவு அமைப்பினர் ஈடுபட்டிருந்தது யாவரும் அறிந்ததே

  எதிர் கெரில்லாப் போரியல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கிழித்தெறிந்து விட்டது. எனவே எதிர்வரும் காலங்களில் யுத்தம் என்பது பாரிய எடுப்புடன் நடைபெறும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இன்று கிழக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட உள்ளது. இப்படியான சந்தர்பத்தில், இராணுவத்தினரின் செறிவைப் பரவலாக்க, கிழக்கிலும், யாழ்குடாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், கொழும்பிலும் விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதலை அதிகரிப்பார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தலைமை நினைக்கின்றது. எனவே ஒரு காத்திரமான எதிர் கெரில்லா போரியல் திட்டத்தை (counter insurgency) கிழக்கிலும், யாழ் குடா, வவுனியா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை சிறிலங்கா படைத்துறைக்கு இருக்கின்றது.அதனால்தான் இந்த புதிய புலனாய்வு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு மாகானத்திற்கான இராணுவ கட்டளைத்; தளபதியாக, மேஜர் ஜெணரல் ஜம்மிக்க லியனகே என்பவர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பணியகத்தின் (Directorate of Military Intelligence - DMI) பணிப்பாளராக இருந்த இவர் திடீரென்று கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். கிழக்கில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்குடனேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இராணுவ ஆக்கிரமிப்பு பிரசேத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றி, கோரமான படுகொலைகள் மூலமும், ஆட்கடத்தல், அடாவடித்தனங்கள் மூலமும் அங்கு ஒரு உளவியல் பீதியை (fear psycho) உருவாக்கி, அதன் மூலம் தமிழ் மக்களை ஆட்சி செய்வது என்பதுதான், சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வப் பிரிவுக்கு நன்கு தெரிந்த எதிர் கெரில்லாப் போரியல் யுத்தி (Counter insurgency strategy). மகேஸ்வரன் படுகொலை என்பது இந்த புலனாய்வுத் தத்துவத்தினது ஒரு வெளிப்பாடுதான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. மகிந்த ராஜபக்ஷவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு வலைப்பின்னலில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகள் சிலரது விபரம்: 

  1. ஆர்.எம்.ஏன் கருணாறட்ன (47)             வவனியா.
  2. டி.கெ.இந்டிக டி சில்வா (39) வவனியா
  3. ஏஸ்.என் கனிபா (41) வனியா .
  4. பி.ஏ.பியசேன (46)  வவனியா
  5. வி.பி.ஜி.யே புஸ்பகுமார (40) அம்பாறைக்கு
  6. எம்.ஆர்.பக்கீர் (35) திருமலை
  7. டனபால (36) திருமலை
  8. ஏ.ஜே.எம் சியாம் கட்டுநாயக்கா விமான நிலையம்
  9. ஏ.என்.எம் பண்டாற (45) வடக்கு
  10. குமார (37) – சாவச்சேரி
  11. சுகந்ததாச  - யாழ் நகரம்
  12. நிமாரல் (38) அநுராதபுரம்
  13. எஸ்.எம்.என் சமரக்கோன் - மணலாறு
  14. றட்னசிறியும் (34) –பருத்தித்துறை, மற்றும் புலோலி வடக்கு
  15. புஷ்பகுமார (29) வடமாராட்சி மற்றும் மாண்டான் பிரதேசம்
  16. கணசேகர () பளை
  17. தயாரத்ணா நெல்லியடி
  18. ஜெயதிஸ்ச கொடிகாமம்
  19. அகமத் (39) –அரியாலை
  20. ஜெயதிஸ்ச மீசாலை
  21. அளகக்கோண் -கைதடி
  22. குமார வல்வெட்டித்துறை
  23. கேவகே மன்னார்
  24. பிரியந்த சாவ்வெரி
  25. அளகக்கொடி எழுதுமட்டுவாள்
  26. டயஸ்- வாழைச்சேனை
இவ் இணையத்தில் வரும் ஆக்கங்களைப் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சங்களை எதிர்பாக்கின்றோம். அனுப்பவேண்டிய முகவரி: info@murasam.ch
 நன்றி முரசம் குழுவினர்
கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >