| சுவிசில் நடைபெற்ற கேணல்கிட்டு ஞாபகார்த்த இளையோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட |
|
|
| . | |
| 9. January 2008 05:30 | |
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை விளையாட்டுத்துறையினரால் கேணல்கிட்டுவினதும் ஏனைய 9போராளிகளினதும் ஞாபகார்த்த இளையோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 5.1.2008 – 6.1.2008 சனிஇஞாயிறு ஆகிய இருநாட்களும் சுக்மாநிலத்தில் நடைபெற்றது. 9,11,13,15 பிரிவினர்க்கானபோட்டிகள் 5ம் திகதி சனிக்கிழமையும் ,17,19 வயதுப் பிரிவினர்க்கான போட்டிகள் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன. சுற்றுப்போட்டியின் ஆரம்பநிகழ்வாக ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன.
கிட்டுஅண்ணாவினதும் ஏனைய 9 போராளிகளினதும் திருவுருவப் படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு அனைத்து கழகவீரர்களும் மலர்வணக்கம் செலுத்தி போட்டிகள் ஆரம்பமாகின.
இரண்டாம் நாள் கிட்டுஅண்ணாவினது ஏனைய 9 போராளிகளினதும் திருவுருவப் படத்திற்கு சுக்மாநில தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைப்பொறுப்பாளர் திரு.சிவபாதம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு அனைத்து கழகவீரர்களும் மலர்வணக்கம் செலுத்தி போட்டிகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன. காலை 9.30மணிக்கு ஆரம்பமான சுற்றுப்போட்டி மாலை 18.30மணிக்கு மிகவும் சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.
3ம்இடம்:- தமிழ்இளநட்சத்திர வி.க,
2ம்இடம்:- இளம்தென்றல் வி.க
1ம்இடம்:- தாய்மண் வி.க
3ம்இடம்:- தமிழ்இளநட்சத்திர வி.க,
2ம்இடம்:- ஜொலிபோய்ஸ் வி.க
1ம்இடம்:- தாய்மண் வி.க
13வயதுபிரிவு:
3ம்இடம்:-இளம்தென்றல் வி.க,
2ம்இடம்:- தாய்மண் வி.க,
1ம்இடம்:- ஈழவர் வி.க
15வயதுபிரிவு:
3ம்இடம்:- இளம்சிறுத்தைகள் வி.க,
2ம்இடம்:-தமிழ்இளம்நட்சத்திரவி.க
1ம்இடம்:- தமிழ்இளைஞர்அணி வி.க 17வயதுபிரிவு:
3ம்இடம்:- வானவில் வி.க,
2ம்இடம்:- இளம்சிறுத்தை வி.க,
1ம்இடம்:- தமிழ்இளநட்சத்திர வி.க
19வயதுபிரிவு:
3ம்இடம்:- இளம்சிறுத்தை வி.க,
2ம்இடம்:- தாய்மண் வி.க,
1ம்இடம்:- தமிழ்இளநட்சத்திர வி.க
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை விளையாட்டுத்துறையினரால் கேணல்கிட்டுவினதும் ஏனைய 9போராளிகளினதும் ஞாபகார்த்த இளையோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 5.1.2008 – 6.1.2008 சனிஇஞாயிறு ஆகிய இருநாட்களும் சுக்மாநிலத்தில் நடைபெற்றது.