29. August 2008 19:36
 
 
சுவிசில் நடைபெற்ற கேணல்கிட்டு ஞாபகார்த்த வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
15. January 2008 05:44
Kittu-Senior2.JPGதமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை விளையாட்டுத்துறையினரால் கேணல்கிட்டுவினதும் ஏனைய 9போராளிகளினதும் ஞாபகார்த்த வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 13.01.2008 ஞாயிறு சுக் மாநிலத்தில் நடைபெற்றது.

சுற்றுப்போட்டியின் ஆரம்பநிகழ்வாக ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. கிட்டுஅண்ணாவினதும் ஏனைய 9 போராளிகளினதும் திருவுருவப் படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு அனைத்து கழகவீரர்களும் மலர்வணக்கம் செலுத்தி போட்டிகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

Kittu-Senior2.JPG

Kittu-Senior3.JPG

இன்றய சுற்றுப்போட்டியில் 23கழகங்கள் கலந்து சிறப்பித்தன. இறுதி ஆட்டத்தில் வின்போய்ஸ் வி.க எதிர் இளநட்சத்திர வி.க தெரிவாகி 3:5 என்ற கோல் அடிப்படையில் இளநட்சத்திர வி.க வெற்றி அடைந்து கேணல் கிட்டுவினதும் ஏனைய 9 போராளிகளினதும் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

காலை 8.45மணிக்கு ஆரம்பமான சுற்றுப்போட்டி மாலை 18.30மணிக்கு மிகவும் சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.
3ம் இடம்:- தாய்மண் வி.க
2ம் இடம்:- வின்போய்ஸ் வி.க
1ம் இடம்:- இளநட்சத்திர வி.க

Kittu-Senior4.JPG
Kittu-Senior5.JPG

சிறந்த விளையாட்டு வீரர்:- சிவசம்பு நிமல்ராஜ் இளநட்சத்திர வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- காசிநாதன் சுமணன் நீலநட்சத்திர வி.க
இறுதி ஆட்டநாயகன்:- மகேந்திரன் கார்த்திபன் இளநட்சத்திர வி.க
அழகாக விளையாடியகழகம்:- நீலநட்சத்திர வி.க
சுற்றுப்போட்டியில் அதிககோல்களை அடித்தவீரர்:- சுகந்தன் ரிசிகேசன் வின்போய்ஸ் வி.க
 
< முந்தைய   அடுத்த >