29. August 2008 19:26
 
 
தமிழ்ப் பெண்கள் அமைப்பு சுவிஸ் கிளை நடத்திய தமிழர் திருநாள் 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
21. January 2008 16:50
Tamilar Thirunall 22.jpgநிகழ்வு 20.01.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.

தமிழ்ப் பெண்கள் அமைப்பு சுவிஸ் கிளை முதன் முறையாக நடத்திய இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், ஈகைச் சுடரேற்;றல், அகவணக்கம், வரவேற்புரையுடன் கலை நிகழ்வுகள் வீணை இசையுடன் ஆரம்பமாகின.
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை கலைபண்பாட்டுக் கழக இசைக் குழுவின் இசையில் கானங்களுடன், எழுச்சி நடனமும், இப்படியும் பரத நடனத்ததை ஆடலாம் என மக்களின் மனம் கவந்த  நடனத்துடன், நாடகங்கள், மேற்கத்தேய நடனம், பட்டிமன்றம், கவிதை, நன்றியுரை என்பன இடம்பெற்றன.

Tamilar Thirunall 01.jpg
Tamilar Thirunall 07.jpg
Tamilar Thirunall 13.jpg
Tamilar Thirunall 22.jpg

புறோக்கர் செக்கண்ட் சின்னத்தம்பி, Made in Srilanka எனும் நாடகங்கள் புலம்பெயர் வாழ்வின் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்வனவாக அமைந்திருந்தன.

இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிளாறவுஸ் மாநில தமிழ்க் கலாச்சார மன்றத்தைச் சேர்ந்த திரு.திருமதி பேனாட் ஆகியோர் வருகை தந்தனர்.

இந்நிகழ்வை ஐபிசி தமிழின் அறிவிப்பாளர் பரா.பிரபா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilar Thirunall 30.jpg

 
< முந்தைய   அடுத்த >