29. August 2008 19:43
 
 
லெப்டினன்ட் கேணல் கௌசல்யனின் வணக்க நிகழ்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
11. February 2008 18:21
Kowsaljanl.jpg07.02.2005 அன்று சிறீலங்கா அரசின் ஒட்டுப்படைகள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கௌசல்யன், மேஜர் செந்தமிழன், மேஜர் புகழன், 2ம் லெப்.விதிமாறன் மற்றும் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோரை நினைவு கூர்ந்து மூன்றாம் ஆண்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு 10.02.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தின் தூண் பிரதேசத்தில் நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடியேற்றல் , ஈகைச்சுடரேற்றல் , அகவணக்கம் , மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து சென்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கத்தை செலுத்த தொடர்ந்து மக்கள் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவினரின் இசையில் எழுச்சிப்பாடல்கள் பாடப்பட்டன.

தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளாக கௌசல்யன் வரலாற்றை வில்லிலே கூறும் வில்லுப்பாட்டு, கவிதாஞ்சலி, பேச்சு, கவிதை   என்பவற்றோடு 
கௌசல்யன் கலைக்கூடம் தூண் மாணவிகள், சலங்கை நர்த்தனாலயம் தூண்  மாணவிகள், கலைக்கோயில் ஆடல் இசைக் கலையகம் இன்ரலாக்கன் மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை சிறப்புப் பேச்சாளர் திரு. அல்பேட் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அத்துடன் கூரிய பார்வையால் தேசியத்தைத் தேடிச் சென்றவன் எனும் தலைப்பில் கவியரங்கத்துடன், துர்க்கா தமிழ் வித்தியாலயம் கொறைஸ்லிங்கன் மாணவர்களின் தங்கத்தமிழீழம் எனும் கூத்து வடிவிலான நாடகம் மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது. தூண் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினர் வழங்கிய தேசக்காற்று எனும் நாடகமும் இடம்பெற்றது.

சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் சோலைச் சிறார்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட குலுக்கல்சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றது. நிறைவாக தேசியக் கொடியிறக்கி வைக்கப்பட்டதோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாரக மந்திரம் அனைவராலும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்கப்பட நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

 
< முந்தைய   அடுத்த >