|
சுவிஸ் லுசேனில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுக் கிண்ண சதுரங்க சுற்றுப்போ |
|
|
|
சுவிஸ் நிருபர்
|
|
3. March 2008 20:36 |
சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினரால் தமிழ்மக்களிடையே முதல்தடவையாக நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப்போட்டியான “பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுக் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி 2008” 1.3.2008 சனிக்கிழமை லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்றது.
சுற்றுப்போட்டியின் ஆரம்பநிகழ்வாக அகவணக்கம், ஈகைச்சுடரேற்றல், பொதுச்சுடரேற்றல், வாழ்த்துரை என்பன இடம்பெற்றன.
பிரிகேடியர்தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு பொதுச்சுடர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் லுட்சேர்ன் மாநிலப் பொறுப்பாளர் திரு. சுபைதரன், லுட்சேர்ன் தமிழ்மன்ற பொறுப்பாளர் திரு.ரஞ்சன,; தமிழீழ விடுதலைப் புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.திருக்குமார் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியச் செயலாளர் திரு.சுந்தரலிங்கம், மத்திய சுவிஸ் சதுரங்க சம்மேளன தலைவர் றூப் பேர்ண ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் வாழ்த்துரை ஆற்றியதனைத் தொடர்ந்து திரு.சிவாஜி, திரு.சிங்கம் இவர்கள் சதுரங்க சுற்றுப்போட்டியின் விதிமுறைகளையும் விளையாட்டு சம்பந்தமான விபரங்களையும் கூறி சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தனர். போட்டிகளின் ஆரம்ப, இறுதி நிகழ்வுகளை திரு ஜஸ்டின் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வுகளை “ஐரோப்பிய தொலைக்காட்சி”யினர் (Euro Television) ஒளிப்பதிவு செய்தனர் இச்சுற்றுப்போட்டி 1வதுசுற்று 2வதுசுற்று 3வதுசுற்று 4 வதுசுற்று 5வதுசுற்று 6வதுசுற்று எனபோட்டிகள் நடைபெற்று 7வது சுற்று இறுதிச்சுற்றாக நடைபெற்றன. இச்சுற்றுப்போட்டியில் 10, 12, 14, 16, வளர்ந்தோர் ஆகியபிரிவினர்க்கான போட்டிகள் நடைபெற்றன. இச்சுற்றுப் போட்டியில் 70 க்கும் மேற்பட்ட போட்டியாளர் கலந்து சிறப்பித்தனர். ஐரோப்பாவிலேயே தமிழ் மக்களிடையே சுவிற்சர்லாந்தில் முதல் முறையாக சதுரங்கப்போட்டிகள் நடைபெற்ற போதிலும் மக்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டது சதுரங்க விளையாட்டில் தமிழ் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை காட்டியது. பெருமளவிலான பார்வையாளர்களும் கலந்து கொண்டு சதுரங்க விளையாட்டில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். போட்டிகள் யாவும் அனைத்துலக சதுரங்க விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. போட்டிகளுக்கான உபகரணங்களை மத்திய ஐரோப்பிய சதுரங்க சம்மேளனம் கொடுத்துதவியது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான சுற்றுப்போட்டி 17.30 மணிக்கு மிகவும் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது. சிறு பிள்ளைகள் முதல் வளர்ந்தோர் வரை இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் எவருமே எதிர்பார்க்காதவகையில் 10 வயது சிறுவனான சத்தியதாசன் பிரதுஷன் மிகவும் திறமையாக வளர்ந்தோர் உட்பட பல்வேறு வயதினர்களையும் எதிர்த்து விளையாடி பிரிகேரியர் சு. ப. தமிழ்ச்செல்வன் ஞாபகார்த்த நினைவு சுற்றுக்கிண்ணத்தை வெற்றி கொண்டார். அவரிற்கான சுற்றுக்கிண்ணத்தினை தமிழீழவிடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு குலம் அவர்கள் வழங்கினார்.
10 வயதுப்பிரிவில் முதலாவது இடத்தை சத்தியதாசன் பிரதுஷனும் இரண்டாவது இடத்தை அர்ச்சுதனும் மூன்றாவது இடத்தை சத்தியதாசன் பிரனுஷனும் பெற்றுக்கொண்டனர். 12 வயதுப்பிரிவில் முதலாவது இடத்தை கந்தையா சாரங்கனும் இரண்டாம் மூன்றாம் இடங்களை குருபரன் மௌலீகரன் சிறீகாந்தன் பிரகாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 14 வயதுப் பிரிவில் செல்வா வேணுஜன் முதலாவது இடத்தையும் சிறீகாந்தன் துஷீப் இரண்டாவது இடத்தையும் ரவீந்திரன் சந்துரு மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
16 வயதுப்பிரிவில் தியாகராஜா சுஜீவன் முதலாவது இடத்தையும் லோகநாதன் ஆருண் இரண்டாவது இடத்தையும் சுந்தரலிங்கம் திவ்யா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.வளந்தோருக்கான போட்டியில் மகேந்திரராஜா கிருஷ்னர் முதலாவது இடத்தை பெற இரண்டாவது மூன்றாவது இடங்களை முறையே சயந்தன் சின்னத்தம்பி, ரி. குகநேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற வீரர்களுகளுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. சுவிற்சர்லாந்து சதுரங்க ஒன்றியத் தலைவர் திரு. கிறேட்னர் கூர்ற் அவர்கள் தமது உரையில் நடைபெற்ற சுற்றுப்போட்டிகளை பாராட்டிப்பேசினார். தமிழ் மக்கள் மத்தியில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிப்பதற்கு தமது சம்மேளனத்தினாலான அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் அவரின் உரையில் தெரிவித்தார். நிகழ்வுகள் யாவும் ஏற்கனவே திட்டமிட்டபடி காலதாமதமின்றி நடைபெற்று 18.15 மணியளவில் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றன.
மேலதிக படங்கள்
|