29. August 2008 19:30
 
 
சுவிஸ் பேர்னில் நடைபெற்ற நிலவரம் பத்திரிகையின் எழுகை 2007 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
3. March 2008 21:03
04.jpgசுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன.
02.jpg
06.jpg
நூலகவியலாளர் செல்வராஜா தலைமையில் தோற்றுவாய் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தியல் அரங்கில் கல்வியும் சமூகமும் எனும் தலைப்பில் படைப்பாளர் செ.மணிவாசகர், ஊடகங்கள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் பரா பிரபா, மானுடம் சுடரும் விடுதலை எனும் தலைப்பில் கிருஸ்ணா அம்பலவாணர் ஆகியோர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் மனித உரிமைகள் மையம் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
19.jpg
அத்துடன் கல்லடி றொபட்டின் நெருப்புப் பூக்கள் நூலினை வெளியிட்டு வைத்த படைப்பாளர் கி.பி.அரவிந்தன் அந்நூலுக்கான மதிப்பீட்டுரையினை ஆற்றினார்.
நாதஸ்வர இசை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு நிலவரம் பத்திரிகை ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நடத்திய கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
27.jpg
நிலவரம் பத்திரிகையில் துசி பலூன் ஆதரவில் நடத்தப்படும் குறுக்கெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் துசி பலூன் நிறுவனத்தால் வழங்கப்பட்டதோடு தமிழரின் தாரக மந்திரத்தை அனைவரும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்க நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன. 
 
< முந்தைய   அடுத்த >