| தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவாக சுவிசில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் ப |
|
|
| . | |
| 17. March 2008 11:13 | |
தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 4வது தடவைகளாக உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 15.03.2008 – 16.03.2008 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் சுக் மாநிலத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)
வளர்ந்தோருக்கான சுற்றுப் போட்டி 15ம்திகதி சனிக்கிழமையும் இளையோருக்கான சுற்றுப்போட்டி 16ம்திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன. சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. தியாகி சிவகுமாரனின் திருவுருவப் படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு அனைத்து கழகவீரர்களும் மலர்வணக்கம் செலுத்தி போட்டிகள்யாவும் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாம் நாள் தியாகி சிவகுமாரனின் திருவுருவப் படத்திற்கு தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.திலீபன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு அனைத்து கழகவீரர்களும் மலர்வணக்கம் செலுத்தி போட்டிகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.
வளர்ந்தோர் பிரிவில் 11கழகங்களும் இளையோர் பிரிவில் 31கழகங்களும் கலந்து சிறப்பித்தன. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான சுற்றுப்போட்டி மாலை 18.30 மணிக்கு மிகவும் சிறப்பான முறையில் நிறைவுபெற்றது. வளர்ந்தோர்பிரிவு:- 3ம் இடம்:- இளம்பறவைகள் வி.க, 2ம் இடம்:- றோயல் வி.க, 1ம் இடம்:- தமிழ் இளம்நட்சத்திர வி.க, இன்றய சுற்றுப் போட்டியின் சிறந்த விளையாட்டுக் கழகம்:- வானவில் வி.க 9வயதுப்பிரிவு:- 3ம்இடம்:-தமிழ்இளநட்சத்திர வி.க, 2ம்இடம்:-தாய்மண் வி.க, 1ம்இடம்:-இளம்சிறுத்தை வி.க 11வயதுப்பிரிவு:-3ம்இடம்:-இளம்தென்றல் வி.க, 2ம்இடம்:-தமிழ்யுனைட்டெட், 1ம்இடம்:-தாய்மண் வி.க 13வயதுப்பிரிவு:-3ம்இடம்:-ஈழவர் வி.க, 2ம்இடம்:-வானவில் வி.க, 1ம்இடம்:-தாய்மண் வி.க 15வயதுப்பிரிவு:-3ம்இடம்:-வானவில் வி.க, 2ம்இடம்:-தமிழ்இளநட்சத்திர வி.க, 1ம்இடம்:-இளம்தளிர் வி.க 17வயதுப்பிரிவு:-3ம்இடம்:-தமிழ்இளநட்சத்திர வி.க, 2ம்இடம்:-தமிழ்இளைஞர்அணி வி.க, 1ம்இடம்:-இளம்சிறுத்தை வி.க |
| < முந்தைய | அடுத்த > |
|---|


தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தியாகி சிவகுமாரனின் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 4வது தடவைகளாக உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 15.03.2008 – 16.03.2008 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் சுக் மாநிலத்தில் நடைபெற்றது.