| லுட்சேர்ன் தமிழ்மன்ற முத்தமிழ் விழா 2008 |
|
|
| ரி.என்.ஜே | |
| 30. March 2008 22:19 | |
லுட்சேர்ன் தமிழ் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் முத்தமிழ்விழா இன்று 30.03.2008 வெகு சிறப்பாக St. Micheal Zentum Littau மண்டபத்தில் நடைபெற்றது. சரியாக 14.00 மணிக்கு விழா ஆரம்பமானது. வரவேற்புரையை ஆசிரியர் திருமதி அருநந்தி தவரட்ணம் அவர்கள் நடத்தினார். பிரதம விருந்தினராக திரு Bruno Rütsche கலந்து சிறப்பித்தார். அவர் உரையின் போது தமது நிறுவனமான Fabia தமிழ் மன்றத்துடனான வேலைத் திட்டங்களை பல வருடங்களாக மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து தமது ஒத்துழைப்பு தமிழ் மன்றத்திற்க்கு இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழ்மன்றத்தலைவர் நாகநாதர் ரஞ்சன் தமதுரையில் தமிழ் மன்றத்திற்கு இதுவரை நிதி உதவி செய்து வந்த கரிதாஸ் நிறுவனம் தனது உதவித்தொகையை நிறுத்தியபோது மன்றத்தை தொடர்ந்து நடத்துவதற்காக மாதாந்த நிதித்திட்டத்துடம் மக்களை அணுகியபோது அவர்கள் செய்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். கடந்த கால்ம் போல் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பின் மூலமே இந்நிகழ்வை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய கலைப்பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் அல்பேட் தமிழ்மன்றத்தின் வளர்ச்சியைப்பாராட்டிப் பேசினார்.
விழா ஆரம்பமாக முன்பாக காலை 8.30 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்மன்ற மாணவர்கள் 210 பேர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். தமிழ்மன்றத்தில் மழலையர்நிலை தொடக்கம் 10 ம் வகுப்புவரை கல்விபயிலும் மாணவ, மாணவியரின் பல கலைநிகழ்வுகள் நடைபெற்றன. லுசேர்ன் மாநிலத்தில் தமிழ்மன்றத்தினால் நடத்தப்படும் மற்றைய தமிழ்ப்பாடசாலைகளான Hochdorf, Hitzkirch மாணவர்களும் Escholzmatt மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் தமிழ்மன்றத்தால் நடைபெற்ற பல்வேறு பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|


லுட்சேர்ன் தமிழ் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் முத்தமிழ்விழா இன்று 30.03.2008 வெகு சிறப்பாக