| அதிகுறைந்த ஊதியத்தொகை 3500 என நிர்ணயிக்க கோரிக்கை |
|
|
| ரி.என்.ஜே | |
| 15. April 2008 20:17 | |
சுவிற்சர்லாந்தில் அதிகுறைந்த ஊதியத் தொகை 3500 பிராங்குகள் என திட்டவட்டமாக நிர்ணயிம் செய்ய வேண்டுமென சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி எந்த ஒரு தனிநபரும் 3500 பிராங்கிற்கு குறைவாகவோ அல்லது மணித்தியாலத்திற்கு 20 பிராங்குளிற்கு குறைவான ஊதியத்தினையோ பெறக்கூடாது எனபதே தொழிற்சங்கத்தின் நிலைப்பாடாகும்.இதன்படி தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு 4500 பிராங்கிற்கு குறைவாக ஊதியம் வழங்ககூடாது எனவும் சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான பவுல் றெஹ்ஸ்ரைனர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அண்ணளவாக 200 000 பேருக்கு மேற்பட்டோர் மேற்படி ஏழ்மை எல்லைக்கு குறைவான ஊதியம் பெறுவோராக உள்ளதாகவும் திரு. றெஹ்ஸ்ரைனர் மேலும் தெரிவித்தார். தொழில் புரிவோரில் 11 வீதத்திற்கு குறைவானோர் மாதம் 3500 பிராங்கிற்கு குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொழிற்கல்வியை மேற்கொள்வோருக்கும் குறைந்தளவு ஊதியமே வழங்கபடுவதாகவும் இவர்களது ஆகக் குறைந்த ஊதியம் 1000 பிராங் என நிர்ணயிக்கவேண்டும் எனவும் தொழிச்சங்கங்கள் கேட்டுள்ளன. 60 வீதமான தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு சாதாரண ஊதியமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்த தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. டானியேல் லம்பார்ட் தொழிற்பயிற்சி என்பது ஒரு முதலீடு எனவும் அதற்கு உரிய முறையில் மதிப்பு வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிற்சர்லாந்தில் அதிகுறைந்த ஊதியத் தொகை 3500 பிராங்குகள் என திட்டவட்டமாக நிர்ணயிம் செய்ய வேண்டுமென சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி எந்த ஒரு தனிநபரும் 3500 பிராங்கிற்கு குறைவாகவோ அல்லது மணித்தியாலத்திற்கு 20 பிராங்குளிற்கு குறைவான ஊதியத்தினையோ பெறக்கூடாது எனபதே தொழிற்சங்கத்தின் நிலைப்பாடாகும்.
