|
2007 ம் ஆண்டு இயற்கை அழிவுகளால் 710 மில்லியன் சேதம் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
16. April 2008 20:14 |
2007 ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அழிவுகளால் சுவிற்சர்லாந்தில் மிகவும் அதிகளவான பொருட்சேதம் உயிர் அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 710 மில்லியன் பிராங்குகள் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக வன ஆராய்ச்சி மையம் கணக்கிட்டுள்ளது.
கடந்த 35 வருடங்களில் இயற்கை அழிவுகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மேற்படி வன ஆய்வு மையம் இன்று புதன்கிழமை (16.04.2008)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் 8 ம் 9 ம் திகதிகளில் பெய்த தொடர் மழையினால் மட்டும் மொத்த வருட சேதத்தொகையில் அரைவாசியாக 380 மில்லியன் பிராங் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசங்களில் பல ஆறுகள் பெருக்கெடுத்து சேதங்களை ஏற்படுத்தியது. Laufen BL, Roche VD ,Lyss BE ஆகிய இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. ஆறெ (Aare) நதி பெருக்கெடுத்ததால் சொலத்தூர்ன் பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளபெருக்குகள் சேதங்களை ஏற்படுத்திய அதேவேளை 130 க்கு மேற்பட்ட மண்சரிவுகளும் அத்துடன் மலைகளில் இருந்தான கற்கள் வீழ்ந்த சம்பவங்களும் அதிகமாக ஜனவரி, மே மாதங்களில் இடம்பெற்றன. இதனால் ஏற்பட்ட சேதம் மட்டும் 23 மில்லியன் பிராங்குகளுக்கு அதிகமானதாகும்.
|