22. November 2008 04:57
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
19. August 2008 23:28
4. October 2008 12:47
12. October 2008 00:13
21. August 2008 23:30
முக்கிய செய்தி
2. November 2008 12:23
1. November 2008 06:30

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை தமிழீழ கடற்புலிகள் அணிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் டோரா தாக்குதல்...

அன்னை பூபதி நினைவு நிகழ்வு மிகவும் எழுச்சியாக சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் நடைபெற்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
20. April 2008 10:50
48a.jpgஇந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சைப் போர் தொடுத்து தன்னுயிரை தாயகத்துக்கு வித்தாக்கிய அன்னை பூபதியின் இருபதாவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நினைவு கூரலும் 19.04.2008 சனியன்று சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இவ் எழுச்சி விழா மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு இரு மாவீரர்களைப் பெற்றெடுத்த தாயார் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களுக்கான ஈகைச்சுடரினை அவர்களது உறவுகள் ஏற்றி வைத்தனர்.

அகிம்சையின் வழி நின்று தன்னுயிரை ஈகம் செய்த உலகின் முதற் பெண்ணான அன்னை பூபதிக்கும் போராட்டத்தில் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், போரிலே கொல்லப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து மண்டபம் நிறைந்திருந்த மக்கள் அன்னை பூபதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் உணர்வு பூர்வமாக தமது மலர் வணக்கத்தைச் செலுத்தினர்.

அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக் குழுவினரால் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டன.

இம்ரான் பாண்டியன் படையணியின் ஈட்டி முனைகள் இறுவட்டு வெளியீடு நடைபெற்றதைத் தொடர்ந்து விடுதலைத்தீயை அரவணைத்த அன்னை என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளைப் பேச்சாளர் திரு.அல்பேட் அவர்களின் உரையும் இடம்பெற்றது. 

திருக்கோணேஸ்வர நடனாலாயம், வல்வை நர்த்தனாலயம், மொந்துரோ தமிழர் இல்லம் ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. அன்னை பூபதியின் வரலாற்றை மிகவும் சிறப்பான வகையில் வில்லுப்பாட்டு மூலம் மாணவிகள் வழங்கினார்கள். விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக நாடகக் கலைஞர்கள் வழங்கிய மனிதம் நாடகம் நடைபெற்றது.

மண்டபத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டதோடு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தமிழரின் தாரக மந்திரத்தை அனைவரும் வலது கரத்தை உயர்த்தி தெரிவிக்க நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன. 

 
< முந்தைய   அடுத்த >
டிசம்பர் 12 ல் செங்கன் உடன்படிக்கை அமுல்?
31. October 2008 19:00
ரி.என்.ஜே
schengen322.jpgஎதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. விபரம்
போதைவஸ்து விற்பனையாளருக்கு 15 வருட சிறை
30. October 2008 20:04
ரி.என்.ஜே
gefangnis_hande_durch_gitte.jpgசுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை  சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விபரம்
மக்களை பாதித்த சடுதியான பனிவீழ்ச்சி
30. October 2008 15:58
ரி.என்.ஜே

winter_2008.jpgசுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள்  ஏற்பட்டன. காலை 9.00 மணிக்கு பின்னரே தொடரூந்து சேவை  வழமைக்கு திரும்பியது.

விபரம்
இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றே உடனடித் தீர்வு: நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம்
1. November 2008 21:01
வா.கி.குமார்

10.jpgஇலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விபரம்
உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும்: கமல்ஹாசன்
1. November 2008 19:53
வா.கி.குமார்

32.jpgஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

விபரம்
இலங்கை முப்படைபடைகள் ஆண்மையிழந்தவை –ரஜினிக்காந்த்
1. November 2008 18:58
வா.கி.குமார்
rajanikanth.jpg35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விபரம்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
1. November 2008 21:30
வா.கி.குமார்

இந்தோனேஷியாவில் மலுகு மாகாணத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

விபரம்
பாகிஸ்தானில் பால்ய விவாகம் நடத்த முயற்சி -போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்
1. November 2008 20:31
வா.கி.குமார்

pakistan.jpgபாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.

விபரம்
ஜப்பானில் தலாய்லாமா!
31. October 2008 20:12
வா.கி.குமார்

திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா, ஒரு வாரகாலப் பயணமாக ஜப்பானுக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.

விபரம்
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியினர் ஒழுங்கத்துடன் நடப்பதில்லை: சுனில் கவாஸ்கர்.
1. November 2008 12:45
PTR.
gavasgar_s.jpgடில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார். விபரம்
சச்சினைத் தொடர்ந்து கங்குலி, ஹர்பஜன் மீதும் கில்கிறிஸ்ட் குற்றக்கணைகள்.
1. November 2008 05:21
PTR.
gilley_normal.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார். விபரம்
ஷேன் வட்சனை மோதிய காம்பீருக்கு ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆடத்தடை.
31. October 2008 13:06
PTR.
ga.jpgஅவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார். விபரம்
எம்மவர் நிகழ்வு
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008 (இரண்டாம் நாள்)
title1.jpg25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008

25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.  (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிசில் நடைபெற்ற ராகமாலிகா 2008
5.jpgதமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா

பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா 19.10.2008 அன்று மாலை 3.00 மணியளவில், இல்லத்தின் ஆசிரியைகளான திருமதி சரஸ்வதி, திருமதி தாரணி, சுவிஸ் தமிழ்பேரவை துணைப்பொறுப்பாளர் திரு சண் தவராஜா அகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (படத்தொகுப்பு)

விபரம்