| சுவிஸ் கரிதாஸ்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் |
|
|
| சுவிஸ் நிருபர் | |
| 21. April 2008 20:55 | |
சுவிஸ் கரிதாஸ் (Swiss Caritas) தொண்டு நிறுவனம் உலகெங்கும் பட்டினியால் வாடும் மக்களுக்கு சத்துணவினை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மேலும் அவசர உதவியாக ஐந்து இலட்சம் சுவிஸ் பிராங்குகளை வழங்க முன்வந்துள்ளது.
முதற் கட்டமாக கய்ற்றி, மாலி, தென்சூடான், பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளுக்கு இந்த உதவிகள் சென்றடைவதாக> ஞாயிற்றுக்கிழமை அந் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். கய்ற்றியில் ஏழ்மையால் வாடும் 20000 குடும்பங்கள் இத் திட்டத்தால் பயனடையும். பத்தாயிரம் விவசாயிகளுக்கு அவர்கள் தமது தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு உதவியாக விவசாயப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தென்சூடானில் அமைதிப் பேச்சுவார்த்தையின் பின்னர் மீண்டும் நாடு திரும்பிய மக்களுக்கு நாளாந்த தேவைக்கான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாலியில் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு சந்தைகளில் வாங்கக் கூடியதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பர்மாவில் தாய்லாந்து எல்லைப் பகுதியில் வாழும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் அகதிகளுக்கு கரிதாஸ் நிறுவனமும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் உதவிகளை வழங்குகின்றன. இவர்களுக்கு அரிசி, எண்ணெய், மரக்கறி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிஸ் கரிதாஸ் (Swiss Caritas) தொண்டு நிறுவனம் உலகெங்கும் பட்டினியால் வாடும் மக்களுக்கு சத்துணவினை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மேலும் அவசர உதவியாக ஐந்து இலட்சம் சுவிஸ் பிராங்குகளை வழங்க முன்வந்துள்ளது.

