22. November 2008 05:34
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
29. September 2008 22:52
4. October 2008 12:47
3. October 2008 18:45
27. August 2008 15:01
விடுதலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற ஓர் சமுதாயத்தில் நானும் ஒரு பிரதிநிதி: கருணாரட்ணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
குணா   
21. April 2008 22:24
கருணாரட்னம் அடிகளார் 2003 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திற்கு வருகை தந்தபோது லுட்சேர்ன் தமிழ்மன்றத்தினால் வெளியிடப்பட்ட "ஊசிஇலை" இன் சார்பில் பேட்டிகாண நேர்ந்தது. பனிபடர்ந்த ஒரு இரவில் தூக்கத்தை மறந்து தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். தன் மூச்சில் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தமிழீழத்தையும் தமிழீழத்தின் வளங்களையும் அதன் எதிர்காலம் பற்றியுமே சுவாசித்தார். அவர் கண்கள் சுபீட்சமான சுதந்திரமான தமிழீழத்தை கனவு கண்டுகொண்டிருந்தது. எங்களோடு அவர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அந்த ஒரு இராக்காலப்பொழுது இப்போதும் என் மனதில் காயங்களாய் வலிக்கிறது. அவரின் உணர்வுகள் தற்போதைய காலத்தின் கண்ணாடியாதலால் நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது.

 உங்களை ஒரு மதகுருவாக அறிமுகம் செய்து கொள்ளலாமா?

அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் ஒருவனாக என்னை அறிமுகப்படுத்துகின்றேன். ஒட்டுமொத்தமாக விடுதலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்தில் நானும் ஒர் பிரதிநிதி. அத்துடன் நான் மதகுருவாக இருப்பதனால் மக்களை இலகுவாக ஒருங்கிணைத்து இந்தப் பயணத்தில் இணைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. 
 

 இன்றைய போர்ச்சூழலில் உங்கள் செயற்பாட்டை எப்படி கட்டமைத்துக்கொள்கிறீர்கள்?

 

போராட்டத்தின்போது ஸ்ரீலங்கா அரசு என்ன செய்தது? பொருளாதாரத் தடைவிதித்தது. குழந்தைகளுக்கான உணவைத் தடை செய்தது. கல்வியைத் தடை செய்தது. அதாவது மக்களின் அடித்தளக்கட்டுமான குழந்தைகளின் போசாக்கு, கல்வி போன்றவற்றிற்கு தடைவிதித்தது. இதனால் அவர்களை பட்டினியை எதிர்கொள்ளவைத்து ஒன்றுமேயில்லாத, பலவீனப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்க அரசு விரும்பியது. விடுதலைப் போராட்டத்தை இனிவரும் தலைமுறை தொடர்ந்து நடத்தாதபடி, இனிவரும் காலங்களில் யாரும் இணைந்து கொள்ள முடியாதபடி தடுப்பதற்கான பாரிய அழிவுத் திட்டமாக குழந்தைகள் அழிப்புத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில் 20000 திற்கும் மேற்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் பட்டினியால் இறக்கக்கூடிய நிலை ஏற்பட்டது.

 

சர்வதேச அங்கிகாரம் பெற நடக்கின்ற போராட்டங்கள் இங்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போல், தமிழீழத்தில் வாழும் எங்களுக்கும் தெம்பையும், தைரியத்தையும் தருகிறது.இங்கு வந்து பார்க்கும் போது இவர்களின் ஆர்வம் -எக்காலத்திலும் போராட்டம் நசுங்கப்போவதில்லை - என்பதும் தெரிகின்றது.  
அந்த வேளையில் நாங்கள் சில வாய்ப்புகளை பயன்படுத்தி, சர்வதேசத்திற்கு அழைப்பை விடுத்து சில உதவிகளைப் பெறமுடிந்தது. புலம்பெயர் மக்களின் உதவியினால்தான் அங்கு இளம் சமுதாயம் ஓர் ஆரோக்கியமான சமூகமாக நிமிர்ந்து நிற்கின்றது என்பதை நாம் மறந்துவிடமுடியாது. பாரிய இன அழிப்புகளாலும் அடக்கமுறைகளாலும் அழுத்தங்களாலும் சிதைந்து கொண்டிருக்கும் ஓர் இனம், விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைந்து போராடிக்கொண்டிருகிறார்கள். பண்பாட்டுக் கட்டுமானங்கள், வாழ்வியல் கட்டுமானங்கள், பொருளாதாரக் கட்டுமானங்கள் போன்ற கட்டுமானங்களை இழந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கையில் TRO செயற்படுகின்றது. எனவே நானும் நசுக்கப்படும் இனத்தின் அங்கத்தினராக TRO உடன் சேர்ந்து சேர்ந்து செயற்படுகின்றேன்.
போர் சூழலினால் அங்குள்ள மாணவர்களின் வாழ்வியல் மனநிலை எப்படி?

அங்கு மாணவர்களைப் பற்றி சொல்வதனால் எல்லாம் இழந்த நிலை. எங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலை. வெளிச்சமூகத்தில் (வன்னிக்கு வெளியே) நடக்கும் செய்கைகளை இழந்துவிட்டோம் என்ற ஏமாற்றம். இதுதான் அங்கு காணப்படுகின்றது.

 

நீங்கள் வன்னியிலிருந்து வந்தவர் என்ற வகையில், சகல தொடர்புகளும் துண்டிக்கபட்ட ஒரு சமூகத்தில் மாணவர்களின் கல்வி நிலையை சுருக்கமாகக் கூறமுடியுமா?

 

அங்கு தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவைதான் செயற்படுகின்றது. இது செயற்படாமல் இருந்திருந்தால் இன்று வன்னியில் கல்வி பூஜ்ஜியம் தான். ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கின்றது. பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு மாணவர்கள் தேர்வு பெறும் அளவிற்கு கல்வி செயற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் விடுமுறையில் வரும்போது, அவர்களை ஒழுங்குபடுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  ஒன்றை உருவாக்கி அவர்கள் மூலமாக பிள்ளைகளுக்கு கல்வி கற்பிற்கின்றார்கள். பேரவையைப் பாராட்டத்தான் வேண்டும். அவர்கள் செயற்படவில்லையென்றால், அரசு எதிர்பார்த்தபடி கல்வி பூஜ்ஜியமாகத்தான் போயிருக்கும்.

வன்னியிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு எவ்வாறு உள்ளது?

இந்தச் சிறுவர் பராமரிப்பு எம்மீது சுமத்தப்பட்ட சுமை. இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் செய்கின்றோம். ஏனெனில் குழந்தைகள் காப்பாற்றப்படவேண்டும். ஒரு குழந்தையாவது பட்டினியால் சாகக்கூடாது.  

தங்கள் விருப்புக்களைத் திணிப்பதில் பெற்றோர், கனவுகளைச் சுமந்து திரியும் பிள்ளைகள் இவர்களுக்கிடையிலான போராட்டம் பற்றி...

 நாம் சுவிற்சர்லாந்தில் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். இவர்கள் பிள்ளைகளை அப்படி வளர்ப்பதில்லை. அவர்களின் ஆற்றலுக்கு சுயமாக சிந்திக்க விட்டுவிடுகின்றார்கள்.

ஈழத்திலிருந்து வந்த எல்லோருக்கும் நான் சுயமாக விடுகின்ற கோரிக்கை என்னவென்றால், எமது தேசத்தில் நீர்வளம், விவசாயவளம், கனிவளம், நிலவளம், கடல்வளம், வனவளம் என்று எல்லாம் இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இவற்றில் ஏதாவது ஒரு வளம்பற்றி கற்றுகொள்ளக்கூடிய தொழில்நுட்பங்கள், வழிவகைகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் இந்த வளங்கள் பற்றிய அறிவை வளர்த்தெடுப்பதில் கவனமெடுங்கள். இவற்றில் இரண்டு இலாபங்கள் இருக்கின்றன. தாயகக் கட்டுமானங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. இவ்வளங்களைப் படிக்கும் பிள்ளைகள் தாயகம் வந்து நல்ல வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

  

எங்கள் பிள்ளைகள் மேற்கத்தைய கலாச்சாரத்தில் மூழ்குவதாக நிலவுகின்ற கருத்துப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

  

இது தவிர்க்க முடியாதது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மேற்கத்தைய சூழல் இல்லாமலேயே கலாச்சார சீரழிவு நடக்கின்றது. இதை மீடியா ஊடாக மேற்கத்தைய சமூகம் திணிக்கின்றது. முக்கியமான நோக்கம் வர்த்தகப் பொருளாதாரம். விடுதலையுணர்வு, புரட்சிகர உணர்வு தலைதூக்காமல் இருக்க இக்கலாச்சாரத்தை மீடியாவிற்குள் புகுத்தி தனிமனித உணர்வுகளை அழிக்கும் செயற்பாடுதான் இது. சுவிற்சர்லாந்தில் வாழும் பிள்ளைகளை இதற்குள் விழாமல் பாதுகாக்க முடியாது. ஆனாலும் கடுமையான போராட்டத்தினால் வெல்ல முடியும்.

 

 புலம் பெயர் தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

என்னுடைய பார்வையில் புலம் பெயர் தமிழர்கள்தான், தமிழீழத்தின் பாதுகாவலர்கள். அதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். தமிழீழத்தில் நடக்கும் அனர்த்தங்கள், அழிவுகள் வேளையில் இங்குள்ள தமிழர்கள் கொடுக்கின்ற குரல், சர்வதேச அங்கீகாரம் பெற நடக்கின்ற போராட்டங்கள் இங்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போல், தமிழீழத்தில் வாழும் எங்களுக்கும் தெம்பையும், தைரியத்தையும் தருகிறது.இங்கு வந்து பார்க்கும் போது இவர்களின் ஆர்வம் - எக்காலத்திலும் போராட்டம் நசுங்கப்போவதில்லை - என்பதும் தெரிகின்றது.  

அந்த வகையில் இங்கு வாழும் அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை நான் கூற விரும்புவது, இந்த விடுதலைப் போராட்டத்தை தனியே ஆயுதப் போராட்டமாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த தேசத்தி்ற்கான போராட்டமாக பாருங்கள். நீங்கள் தான் சகல கட்டுமானங்களையும் சீர்செய்யவேண்டும். அடுத்து மீடியா. இன்று சர்வதேச ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரேயொரு நிறுவனம் மீடியாதான்.  இந்த மீடியாவிற்கும் பலம்வாய்ந்த ஊடுருவலை நீங்கள் செய்யவேண்டும். பாரிய வல்லரசுகளின்  கையாட்களாக ஊடகங்கள் இருக்கின்றன.அதற்குள் நீங்கள் ஏதோவொரு வகையில் ஊடுருவ வேண்டும். அப்போதுதான் நாளை புதிய புதிய நெருக்கடிக்குள் இருந்து தேசத்தைக் காப்பாற்ற முடியும்.

நீங்கள் இங்கு வாழ்கின்றீர்கள். இந்நாட்டு பிரஜைகளாக மாறுங்கள். அந்தந்த நாடுகளில் அரசியலில் சேர்வது நல்லது. அப்போதுதான் உங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியும். இந்த அரசைத் தூண்டி தேசத்தின் இருப்பை நிலைநிறுத்தமுடியும். இங்குள்ள அடுத்த தலைமுறைக்கும் ஈழத்தின் இளந்தலைமுறையினருக்குமான தொடர்பைப் பேண வழிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தேவையும் உள்ளது.  
   
நன்றி: "ஊசிஇலை" சஞ்சிகை
கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >