|
கன்ரோன் கிறவ்புன்ரனில் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலக்கல்வி |
|
|
|
ரி.என்.ஜே
|
|
22. April 2008 21:11 |
சுவிற்சர்லாந்தின் கிழக்கு பிரதேச மாநிலமான கிறவ்புன்ரனில் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழி கற்பிக்கபடவுள்ளபோதிலும் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் மாநில பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.
கடந்த திங்களன்று மாநில பாராளுமன்றத்தல் ஆறு மணிநேரம் இவ்விடயம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றது. சிறுபான்மை FDP உறுப்பினர்களால் இரண்டாவது அந்நிய மொழியாக ஆங்கிலம் கற்பிக்கபடவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இக்கோரிக்கை 85 க்கு 29 என்ற வாக்குகளின் அடிப்பையில் நிராகரிக்கபட்டது.
இத்தாலி மொழி பேசும் கன்ரோன் அயலில் இருப்பதால் முதலில் இத்தாலி மொழி கற்பது இம்மொழி பேசும் பிரதேசங்களிலிருந்து மக்களை நெருங்க வைக்கும் என்பதால் இத்தாலி மொழி கற்பதை ஊக்கபடுத்த வேண்டும் என்பதை பலர் எடுத்துரைத்துள்ளனர். ஏற்கனவே பல ஜேர்மன் மொழி பேசும் கன்ரோன்களில் இத்தாலி மொழி நான்காம் வகுப்பிலிருந்து கற்பிக்கபடுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய மொழி இரண்டாம் மொழியாக அறிமுகபடுத்துவதற்கு ஆரம்ப செலவாக 26 மில்லியன் பிராங்குகளுக்கு மேல் தேவைப்படுவதாகவும் ஆங்கிலக் கல்விக்காக 16 மில்லியன் பிராங்குகள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
|