| லுசேர்ன் நகரில் சிற்றி பீச் திட்டம் |
|
|
| ரி.என்.ஜே | |
| 23. April 2008 21:55 | |
மத்திய சுவிற்சர்லாந்தின் சுற்றுலா நகரமான லுசேர்ன் நகரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட “சிற்றி பீச்” (City Beach) திட்டத்திற்காக தேவைப்படும் ஒரு மில்லியன் பிராங் தயார் நிலையில் உள்ளதாகவும், இத்திட்டம் நகரசபையின் அனுமதிக்காக மட்டு்ம் காத்திருப்பதாகவும் சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத்திட்டத்திற்கு தேவையான பணத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுசேர்ன் நகரின் உள்ள பழைய Güter Bahnhof பகுதியில் அழகான கடற்கரை போல தோற்றமளிக்கக்கூடியதாக 600 தொன் மணல் நிரப்பட்டு, பால்ம் மரங்கள் (Balm Trees) நீச்சல்தடாகம், கைப்பந்து விளையாட்டிடம், (Beach Volleyball ) பார் (Bar) போன்ற பல்வேறு சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்திலான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உத்தேச திட்டத்திற்கு நகரசபையின் அனுமதி கிடைக்கக்கூடிய வாய்ப்பு சாதகமாகவே உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இத்திட்டம் நிறைவேற்றபடும்போது சுவிற்சர்லாந்தில் மிகப்பெரிய கடற்கரை அமைப்பை கொண்ட பூங்காவாக இது மிளிரும். 11.00 மணிமுதல் 23.00 மணிவரையும் வாரஇறுதி நாட்களில் 24.00 மணிவரையும் திறந்திருக்கும் சிற்றிபீச்சிற்கு இரவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உட் செல்ல அனுமதிக்கபடுவர் ஏற்கனவே ஐரோப்பாவின் பேர்லின், பரிஸ் லண்டன் ஆகிய நகரங்களில் இவ்வகையிலான "சிற்றி பீச்" ஏற்கனவே உள்ளபோதிலும் சுவிற்சர்லாந்தில் முதன் முதலாக “சிற்றிபீச்” திட்டமிடப்பட்டுள்ளது.மேற்படி சிற்றி பீச் திட்டத்திற்கு நகரசபையின் அனுமதி வழங்கப்பட்டுளதாக இறுதிச் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மே மாத இறுதியில் புதிய சிற்றி பீச் திறந்து வைக்கபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|



மத்திய சுவிற்சர்லாந்தின் சுற்றுலா நகரமான லுசேர்ன் நகரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 
