| வடபோர்முனை வழக்கத்திற்கு மாறாக தற்போது கொதிநிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனது |
|
|
| ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி | |
| 25. ஏப்ரல் 2008 18:52 | |
புலிகளின் தளபதிகளில் மிகவும் மதிப்புப்பெற்ற கேணல் தீபன் தலைமையிலான தாக்குதல் படையணி வடபோர்முனை படைநகர்வை எதிர்பார்த்து முகமாலையில் நிலைகொண்டிருக்கிறது.
மடுப்பிடிக்கும் படைநடவடிக்கை குறிக்கப்பட்ட காலத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சர்வசாதாரணமாக மடுப்பகுதிக்கு சென்றுவருமளவுக்கு அப்பகுதி புலிகளின் ஆதிக்கத்தின் கீழேயே தற்போதுமிருக்கிறது. இதுவரைகாலமும் இடம்பெற்ற நீண்ட படைநடவடிக்கை ஒன்றின் தோல்விக்கு மகுடம் சூட்டினாற் போல் திகழ்வது ஜயசிக்குறு நடவடிக்கைதான். ஆனால் அந்த ஜயசிக்குறு தோல்வியை முந்திச் செல்லுமளவுக்கு தற்போது இடம்பெறும் பெயரிடப்படாத படைநடவடிக்கை அமைந்துள்ளது. வன்னிப்பெருநிலப்பரப்பு மீதான படை நடவடிக்கையை எடுத்துக்கொண்டால் கடந்த ஒரு வருடத்தையும் தாண்டி மேலும் நீண்டுசெல்கிறது. எனினும் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியும் இதுவரை கிட்டவில்லை. ஜயசிக்குறு சமர் சுமார் மூன்று வருடங்கள்வரை நீண்டுசென்றது. ஆனால் தற்போதைய படைநடவடிக்கை ஒருவருடத்தையே தற்போது தாண்டியிருக்கிறது. அது இன்னும் பல வருடங்களை தாண்டும் நிலையே இன்று ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய படைநடவடிக்கையின் திருப்புமுனைக் கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவே களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இதுவரைகாலமும் ஒவ்வொரு நாளும் பாரிய படையெடுப்புகளை நடத்திக்கொண்டிருந்த 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிகள் தற்போது வாரத்தில் ஒரு தடவை அல்லது மூன்று வாரங்களில் இரண்டு தடவைகள் என்றே பாரிய வலிந்த தாக்குதல்களை நடத்திவருகின்றன.
இறுதியாக கடந்த 12 ஆம் திகதி அடம்பன் மற்றும் மடுப்பகுதியைக் குறிவைத்து பாரிய படைநகர்வுகள் இடம்பெற்று அவையும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. அனைவரும் மடுப்பகுதியைக் குறிவைத்தே படைநகர்வுகள் இடம்பெறுமென எதிர்பார்த்திருக்க படையினரோ அடம்பனைக் குறிவைத்து நகரும் திட்டத்தை கையெலெடுத்தனர். இந்த நகர்வு ஆரம்பிக்கும் முன்னர் மடுவை அண்மித்துள்ள சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் 57 ஆவது படையணியின் இரண்டாவது பிரிகேட்டைப் பயன்படுத்தி சிறு சிறு திசை திருப்பும் தாக்குதல்களை நடத்தி புலிகளின் கவனத்தை சிதறிடித்துவிட்டு , 58 ஆவது படையணியைப் பயன்படுத்தி அடம்பன் நோக்கிய உண்மையான படைநகர்வை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் பிரகாரம் 11 ஆம் திகதி இரவு முதல் 12 ஆம் திகதி அதிகாலைவரை சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் 57-2 ஆவது பிரிகேட் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன. புலிகளும் பதில் தாக்குதல்களை நடத்தினர். சிறிய முன்னேற்ற நகர்வொன்றைச் செய்து புலிகளைத் திசைதிருப்ப படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைக்கொடுக்காத பட்சத்தில் , திடீரென 12 ஆம் திகதி காலை 6 மணியளவில் அடம்பன் நோக்கிய பாரிய படைநகர்வு இடம்பெற்றது. புலிகள் சின்னபண்டிவிரிச்சான் நோக்கித் திசைதிருப்பப்பட்டிருப்பர் என்ற நினைப்பில் அடம்பன் நோக்கிய பாரிய படைநகர்வை 58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் மேற்கொண்டது. இந்த பிரிகேட்டுக்கு கேணல் சுஜீவ தலைமை தாங்கினார். இந்த பிரிகேட்டில் மூன்று பற்றாலியன்கள் அடங்கியுள்ளன. இந்த மூன்று பற்றாலியன்களும் அன்றையதினம் படை நகர்வில் ஈடுபட்டன. இந்த பிரிகேட்டிலுள்ள 8ஆவது கெமுனுவோச் பற்றாலியனுக்கு லெப்.கேணல் சமிந்த ஜெயசுந்தரவும், 10ஆவது கஜபா றெஜிமன்ட் பற்றாலியனுக்கு மேஜர் சாரத சமரக்கோனும், 8 ஆவது சிங்க றெஜிமன்டுக்கு லெப்.கேணல் ரமேஸ் பெர்னாண்டோவும் தலைமை தாங்கினர். இந்த மூன்று பற்றாலியன்களிலும் மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 500 துருப்பினர் அடங்கியிருந்தனர். 2 ஆயிரத்து 500 துருப்பினரைப் பயன்படுத்தி மூன்று முனைகளில் அன்றைய படைநகர்வு இடம்பெற்றது. முதலாவது முனை கட்டுக்கரைக்குளத்திலும் , இரண்டாவது முனை பரப்பாங்கண்டலிலும், மூன்றாவது முனை இத்திக்கண்டலில் இருந்தும் திறக்கப்பட்டது. இந்த மூன்று முனைகளில் இருந்தும் நகர்வை ஆரம்பித்த துருப்பினரின் இலக்கு அடம்பன் மத்திய பகுதியாகவே இருந்தது. கடுமையான ஆட்லறித்தாக்குதல் , விமானக் குண்டுவீச்சுகள் , உலங்குவானூர்த்தித் தாக்குதல் போன்ற ஆதரவு தாக்குதல்களோடு டாங்கிகள் சகிதம் துருப்பினர் நகர முற்பட்டனர். புலிகள் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதிகளில் கவனத்தை திருப்பியிருப்பர் என்று கருதிய துருப்பினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. படைநகர்வு ஆரம்பித்ததும் கடுமையான எதிர்த்தாக்குதல்கள் வந்தன. விமானப்படை அழைக்கப்பட்டு குண்டுகள் கொட்டப்பட்டபோதும் பற்றைக்காடுகள் நிறைந்த பகுதிகள் ஊடாக முன்னேறுவதென்பது மிகவும் கடினமானதாகிப் போகவே இந்த பாரிய நகர்வு முயற்சியும் தோல்வியில் முடிந்துபோனது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த படைநகர்வின் தோல்வி நிச்சயம் படைத்தரப்பிற்கு அதிர்;ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும்காலங்களில் இந்த களமுனைகளில் படைநகர்வுகளை மேற்கொள்ளும்போது ஒன்றுக்கு பல தடவைகள் சிந்திக்க வேண்டிய நிலையை படையினருக்கு இந்த தோல்வி ஏற்படுத்தியிருக்கிறது. அன்றையதினம் மாலை 4 மணிவரை இடம்பெற்ற மோதல்களில் 30 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 75 இற்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்திருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர். ஆனால் அதனை மறுத்த படைத்தரப்பு தமது தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 34 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தது. இந்த களமுனையில் 12 பேர் ஒரேயடியாகக் கொல்லப்பட்டனர் என்று படையினர் முன்னொருபோதும் அறிவிக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால் 58-1 ஆவது பிரிகேட் சந்தித்த மிகப்பெருமிழப்பு இந்த முறியடிப்புத் தாக்குதலிலேயே ஏற்பட்டுள்ளது. அடம்பனுக்கு மேற்கில் சுமார் 800 மீற்றர் தொலைவிலும் தெற்கில் ஒரு கி.மீ தொலைவிலும் தென்கிழக்கில் ஒன்றரைக் கி.மீ தொலைவிலும் துருப்புகள் நிலை கொண்டிருப்பதாகப் படைத்தரப்பு கடந்த பல மாதங்களாகவே அறிவித்து வருகிறது. அடம்பனைக் கைப்பற்றும் பொறுப்பு 58 ஆவது படையணியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 58 ஆவது படையணிக்கு பிரிகேடியர் சவீந்திர டி சில்வா தளபதியாக உள்ளார். மாதா இல்லாத மடுப்பகுதியையேனும் கைப்பற்ற முடியாது 57 ஆவது படையணி தடுமாறுவதால் அடம்பனையாவது கைப்பற்றியாவது ஒரு ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து கொள்வது படையினரின் திட்டம். ஆனால் அதற்கும் புலிகள் இடம்கொடுக்கமாட்டார்கள் என்பதையே களமுனைச் செய்திகள் உணர்த்துகின்றன. தற்போது ஏனைய களமுனைகளுக்கான விஜயங்களைவிட வன்னிக்களமுனைகளுக்கான விஜயங்களை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சர்தபொன்சேகா அதிகப்படுத்தியிருக்கிறார். வாரத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் வன்னிக் கூட்டுப்படைத்தலைமையகத்திற்கு அவர் விஜயம் செய்கிறார். அவரது இந்த விஜயங்கள் படையினரை சோர்வடைய விடாமல் தடுப்பதற்கானதாகவே கருதப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் அவரது விஜயங்களுக்கு இருந்த முக்கியத்துவம் நாளடைவில் குறைவடையத் தொடங்கியது. தற்போது அவரது விஜயங்கள் குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாத நிலையே காணப்படுகிறது. இதற்கு பிரதான காரணம் வன்னிக்களமுனையில் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியும் கிடைக்காதமையே ஆகும். அவரது விஜயங்களுக்கு பலன் இல்லை என்ற நிலை வந்ததால்தான் அந்த விஜயங்கள் குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாத நிலை காணப்படுகிறது. அதுமட்டுமன்றி வன்னிக்களமுனையில் தாக்குதல்கள் ஆரம்பித்தபோது களமுனைக்கு அனுப்பப்பட்ட துருப்பினரில் கணிசமானளவு படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 300 படையினராவது களமுனைகளில் இருந்து அகற்றப்படுகின்றனர்.
இத்தகையதொரு நிலை நீடிப்பால் படையினர் மத்தியில் ஒருவித உளவியல் இந்தநிலை நீடிப்பது எதிர்பாராத திருப்புமுனைகளை ஏற்படுத்திவிடலாமென்பது போரியலில் அடிப்படையாகும். எனவே இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத் தேவை படைத்தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. வன்னிக்களமுனையில் அதுவும் வுவுனியா மற்றும் மன்னாரில் இந்த நிலையை மாற்ற முடியாது. மாற்ற முற்பட்டால் மேலும் நிலமை மோசமாகாலாம் என்பதையே களமுனைச் செய்திகள் உணர்த்துகின்றன. இது படைத்தரப்பிற்கு தெரியாத விடயமல்ல. அடுத்து மணலாறுக்களமுனை. முல்லைத்தீவிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் மணலாறு களமுனை இருந்தாலும் முல்லைத்தீவிற்குள் கால்வைப்பதற்கு துருப்பினர் இதுவரை பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலேயே உள்ளனர். முல்லைத்ததீவிற்குள் கால்வைப்பதானது தற்கொலைக்கு ஒப்பானது என்பது படையினருக்கும் தெரியும். முல்லைத்தீவு புலிகளின் கோட்டை. அங்கு வலிந்துபோய் வாங்கிக்கட்டக்கூடாதென்ற உறுதியான நிலைப்பாட்டில் படைத்தரப்பு உள்ளமை கடந்த ஒரு வருட காலத்தில் புலனாகியுள்ளது.
மணலாற்றுக்களமுனையில் புலிகளே வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமுள்ளன. அப்படி புலிகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதனை முறியடிக்கும் நோக்கிலேயே அங்குள்ள படையினர் உள்ளனர். அவர்களுக்கு முல்லைத்தீவிற்குள் கால்வைக்கும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. மணலாற்று களமுனை கிழக்கிற்கான தரைவழித்தொடர்பை புலிகளிற்கு ஏற்படுத்திக் கொடு;ததுவிடும் என்பதால் மணலாற்று பகுதியை தக்கவைக்கும் வகையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே மணலாறில் இருந்து படையினர் பாரிய வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் மத்தியில் நிலவும் விரக்தி நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமே. அந்தவகையில் பார்த்தால் குடாநாட்டு வடபோர் அரங்கே பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தற்போதைய களமுனையாக இனம்காணப்பட்டுள்ளது. அதாவது மடுவில் இருந்து வடபோர் முனை நோக்கி தாக்குதல்கள் திசைதிரும்புகின்றன. வடபோர் அரங்கில் படையினரின் வலிமைமிக்க 53ஆவது மற்றும் 55 ஆவது படையணிகள் நிலைகொண்டுள்ளன. அதனைவிட 51, 52 ஆவது படையணிகளும் குடாநாட்டிலேயே நிலைகொண்டுள்ளன. இவற்றில் 53, 55 ஆவது படையணிகளே தாக்குதல் அணிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் படையணிகளில் அண்மைக்காலமாக கவசத்தாக்குதல்ப் படைப்பிரிவு நவீனமய்ப்படுத்தப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே முன்னரைவிட மிகவும் வலிமையுடன் இந்த படையணிகள் திகழ்வதாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கிறார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினரைக் கொண்டுள்ள குடாநாட்டில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்படாத பாரிய தாக்குதல்கள் அடம்பெறவுள்ளதாக அவர் கடந்தவாரம் தெரிவித்திருப்பது வடபோர்முனை நோக்கி தாக்குதல்கள் திசைதிரும்பி வருவதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. மிருசுவிலில் பிரதான பின்தளம் அமைத்து நிலைகொண்டுள்ள 53 ஆவது படையணிக்கு பிரிகேடியர் சமந்த சூரிய பண்டார கட்டளைத் தளபதியாக உள்ளார். 55 ஆவது படையணிக்கு பிரிகேடியர் கமால் குணரத்ன கட்டளைத் தளபதியாக உள்ளார். 53 ஆவது பிரிகேட்டிலுள்ள மூன்று பிரிகேட்டுகளும் வரணி – நாகர்கோவில் பகுதியில் மேஜர் றொசான் ஜெயமன்ன தலைமையிலும் 55 ஆவது படையணி கிளாலி – முகமாலைப் பகுதியில் பிரிகேடியர் கமால் குணரத்ன தலைமையிலும் நிலைகொண்டுள்ளன. 55ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரத்ன அண்மையில் சினைப்பர் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியிருக்கிறார். முகமாலை களமுனைக்கு விஜயம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த அவர் தலைமையிலான குழு மீது புலிகளின் சினைப்பர் துப்பாக்கி இலக்குவைத்தது. அந்த இலக்கில் 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த லெப்.கேணல் ஜெகத் ரட்னாயக்க படுகாயமடைந்தார். லெப்.கேணல் ஜெகத் ரட்னாயக்கவுக்கு அருகிலிருந்த பிரிகேடியர் கமால் குணரத்ன மயிரிழையில் தப்பினார்.
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி
53 ஆவது படையணியில் இதுவரை மூன்று பிரிகேட்டுகளே இருந்தபோதும் கடந்தவருட இறுதிப்பகுதியில் நான்காவது தனியான பிரிகேட்டாக 53-4 ஆவது இயந்திரக் காலாற்படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கிளாலி முதல் நாகர்கோவில் வரையான நெடுங்கோட்டில் முன்னணி பாதுகாப்பரண்களை அண்மித்ததாக புலிகள் பாரிய பொறிக்கிடங்குகளை வெட்டி வைத்திருக்கின்றனர். இந்த பொறிக்கிடங்கினுள் சிக்கிவிடாமல் அதனோடு இணைந்த மண்ணரண்களையும் அழித்துக்கொண்டு வெற்றிகரமாக முன்னேறும் நோக்கிலேயே இந்த இயந்திரக் காலாற்படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 53-4 ஆவது படைப்பிரிவான இயந்திரக் காலாற்படைப்பிரிவுக்கு கேணல் ரால்ப் நுகேர கட்டளைத் தனபதியாக இருக்கிறார். இவர் தலைமையிலான இந்த படைப்பிரிவையே வடபோர்முனையின் மிகவும் சக்திவாய்ந்த பலமாக படைத்தரப்பு கருதுகிறது. இயந்திரக் காலாற்படைப்பிரிவைப் பயன்படுத்தி சடுதியான முன்னேற்றம் ஒன்றை மேற்கொண்டு ஆனையிறவுவரை செல்லலாம் என்ற திட்டமும் படைத்தரப்பிடம் உள்ளது. எனினும் 2006 ஒக்ரோபரில் இத்தகையதொரு திட்டத்துடன் வெளிக்கிட்ட முகமாலை – நாகர்கோவில் ஊடாக நகர்வை மேற்கொண்டு வெளிக்கிளம்பிய துருப்புகள் கடும் பின்னடைவுகளைச் சந்தித்து படுதோல்வியுடன் தளம்திரும்பியிருந்தன. இந்த நடவடிக்கையில் இயந்திரக்காலாற்படைப்பிரிவின் ஆறு கவச வாகனங்களையும் இழக்க நேர்ந்தது. எனவேதான் அதற்குப்பின்னர் இவ்வளவு காலமும் நீண்டமௌனம் இந்த களமுனையில் காக்கப்பட்டது. இந்த மௌனத்தை கலைக்கவேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மிகவிரைவில் இப்பகுதியில் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளன. இது புலிகளுக்கு தெரியாததல்ல. புலிகளின் தளபதிகளில் மிகவும் மதிப்புப்பெற்ற கேணல் தீபன் தலைமையிலான தாக்குதல் படையணி இத்தகைய படைநகர்வை எதிர்பார்த்து முகமாலையில் நிலைகொண்டிருக்கிறது.
அந்தவகையில் வடபோர்முனை வழக்கத்திற்கு மாறாக தற்போது கொதிநிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றனது
நன்றி: சுவிஸ் நிலவரம் பத்திரிகை
கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


புலிகளின் தளபதிகளில் மிகவும் மதிப்புப்பெற்ற கேணல் தீபன் தலைமையிலான தாக்குதல் படையணி வடபோர்முனை படைநகர்வை எதிர்பார்த்து முகமாலையில் நிலைகொண்டிருக்கிறது.
தாக்கம் ஏற்பட்டுள்ளதை படையதிகாரிகள் மறுக்க முடியாத நிலையிலுள்ளனர். நான்காம்கட்ட ஈழப்போரின் இதுவரையான காலப்பகுதியை எடுத்துக் கொண்டால் படைநடவடிக்கையின் ஆரம்பத்தில் குறித்த எந்த இலக்கையும் இதுவரை அடைந்து கொள்ள முடியவில்லை என்பதுடன் காலம்குறிக்கப்படாததால் இன்னமும் எத்தனை காலத்திற்கு களத்தில் நிற்பது என்ற விரக்தி நிலைக்கு படையினர் வந்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.
ஆரம்பத்தில் மணலாறு ஊடாகவே படையினர் முன்னேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் முல்லைத்தீவுதான். படையினரும் இந்த திட்டத்துடன்தான் ஆரம்பத்தில் இருந்தனர். மண்கிண்டிமலை ஊடாக சில தடவைகள் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தனர். ஆனால் அவை பலன்தரவில்லை. ஏன் வலியப்போய் வம்பை விலைக்கு வாங்குவான் என்ற நிலையிலேயே மணலாற்று படையினர் உள்ளனர்.



