|
கருத்துக்கணிப்பில் சுவிஸ் பிரஜாவுரிமை புதிய சட்டமூலத்திற்கு அதிக ஆதரவு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
25. April 2008 21:50 |
சுவிஸ் மக்கள் கட்சியிலால் முன்மொழியப்பட்ட புதிய சட்ட மூலமான ஜனநாயகரீதியிலான பிரஜாவுரிமை வழங்கல் என்ற சட்ட மூலத்திற்கு அதிகளவான மக்கள் ஆதரவளிப்பதாக இவ்வாரம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜீன் மாதம் முதலாம் திகதி இதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மேற்படி கருத்துக்கணிப்பு சுவிற்சர்லாந்து முழுவதும் உள்ள 1200 பேரிடம் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் எடுக்கப்பட்டது. 48 வீதமான வாக்காளர்கள் இப்பிரேரணைக்கு ஆதரவாகவும் 37 வீதமானோர் சட்டமூலத்திற்கு எதிராகவும் கருத்து கூறியுள்ளனர். 15 வீதமானோர் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகளும் இப்புதிய சட்டமூலத்தை எதிர்க்கின்றபோதிலும் சுவிஸ் மக்கள் கட்சி சட்டமூலத்திற்கு ஆதரவாக பெரும் பரப்புரைகளை நடத்திவருகின்றது. இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றபட்டு சட்டமாக்கப்படும் பட்சத்தில் பிரஜாவுரிமை கோரும் வெளிநாட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
|