| ஜெனிவாவில் சுவாச புற்றுநோய் ஐரோப்பிய மகாநாடு |
|
|
| ரி.என்.ஜே | |
| 26. April 2008 13:27 | |
சுவாசப்புற்றுநோய்க்கான சிகிச்சைமுறையை முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பான ஐரோப்பிய மகாநாடு ஜெனிவாவில் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர் இம்மகாநாட்டில் கலந்து கொண்டனர். உலகளாவிய ரீதியில் புற்றுநோயால் மரணிப்பவர் தொகையில் சுவாசப்புற்றுநோய் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. வருடாந்தம் சுவாசப்புற்று நோயினால் 1.3 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். சுவிற்சர்லாந்தில் வருடாந்தம் 3000 பேர் இந்நோயினால் இறக்கும் அதேவேளை 3600 பேர் புதிதாக சுவாசப்புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த தசாப்தத்தில் சுவாசப்புற்றுநோயினால் இறக்கும் ஆண்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நோயினால் இறக்கும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக கடந்த பத்தாண்டுகளில் பெண்களில் புகைப்போர் தொகை அதிகரித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிகவும் சோகமான இப்புள்ளிவிபரங்களின் மத்தியிலும் சுவாசப்புற்று நோய் ஆராய்ச்சியில் புத்துணர்ச்சி தற்போதைய காலப்பகுதியில் ஏற்பட்டிருப்பதாக சூரிச் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த திரு றொல்வ் ஸ்ரேஹெல் தெரிவித்தார். பல வருடங்களாக சுவாசப்புற்றுநோயில் பல வித்தியாசமான செல்களை கண்டறிந்த போதிலும் எல்லாவற்றிற்கும் ஒரே சிகிச்சை முறையே பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் சமீபத்தில் இவ்வித்தியாசமான செல்களுக்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம் என்றும் திரு ஸ்ரேஹெல் மேலும் குறிப்பிட்டடார். சமீபத்தைய சுவாசப்புற்று நோய் சிகிச்சைகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் பல நோயாளிகளை காப்பாற்றியுள்ளதாக துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சுவாசப்புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் புகைபிடித்தல் சுவாசப்புற்று நோய்கான காரணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதாகவும் அவர்களின் அறிக்கை தெரி்விக்கின்றது.
உலகளாவிய ரீதியில் பொதுவாக புற்றுநோயினால் இறப்பவர்கள் தொகை வருடத்திற்கு 11 மில்லியன் ஆகும். இது மொத்த இறப்பு வீதத்தில் 12,5 வீதமாகும். சுவிற்சர்லாந்தில் இரண்டாவது அதிகமான இறப்புகள் புற்றுநோய் காரணமாகவே நிகழ்கின்றன. 28 வீத ஆண்களும் 22 வீத பெண்களும் புற்று நோய் காரணமாக இறக்கினறனர். தொடர்ச்சியான இருமல், மூச்சு விட கஷ்ரமான நிலை, இருமலுடன் இரத்தம் வெளிவரல், பசியின்மை, நிறை குறைதல், ஆகியவை சுவாசப்புற்று நோய்கான அறிகுறிகள் ஆகும். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவாசப்புற்றுநோய்க்கான சிகிச்சைமுறையை முன்னேற்றும் வழிமுறைகள் தொடர்பான ஐரோப்பிய மகாநாடு ஜெனிவாவில் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர் இம்மகாநாட்டில் கலந்து கொண்டனர்.

