22. November 2008 13:10
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
19. August 2008 23:28
4. October 2008 12:47
3. October 2008 18:45
21. August 2008 23:30
அடிகளாரின் கனவை நனவாக்குவோம்; பேர்ன் பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்றுகூடல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிருபர் குணா   
26. April 2008 20:33
karunaratnam_26042008.jpg26.04.2008 சனிக்கிழமை கருணாரட்னம் அடிகளாரின் படுகொலையை கண்டித்து பேர்ன் பாராளுமன்ற முன்றலில் கண்டன ஒன்று கூடல் சுவிஸ் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்டிருந்தது. இவ்வொன்றுகூடலில் பெருமளவிலான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு இலங்கை அரசின் அராஜக முகத்தை சுவிஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.  [திருத்தம்]

இவ்வொன்று கூடல் சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யபட்டிந்தது. எனினும் பாராளுமன்றத்திற்கு முன் திபெத் மக்களின் போராட்ட ஒன்று கூடல் இதே நேரம் நடந்து கொண்டிரு்ந்ததால் சுவிஸ் காவற்துறையினர் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள ஒரு பூங்காவை ஒழுங்கு செய்திருந்தனர்.

இவ்வொன்று கூடலை சுவிஸ் தமிழர் பேரவையின் வெளிநாட்டு தொடர்பாளர் மேடம் அனோர் அவர்கள் அடிகளின் நினைவுச்சுடரை ஏற்றி தொடக்கி வைத்தார். தொடர்ந்து இலங்கை அரசின் சிவில் மக்கள் மீதான படுகொலையை கண்டித்து உரையாற்றினார். தொடர்ந்து பேசிய பேர்ன் ஆன்மீக பணியகத்தை சேர்ந்த திரு விக்டர் அவர்கள் அடிகளாரின் சேவையை குறிப்பிட்டதோடு நாம் சோர்ந்து சோகம் கொள்ளாது தொடர்ந்து போராடி அடிகளாரின் கனவை நனவாக்க வேண்டும் என்றார். இலங்கை அரசானது இனப்படுகொலை செய்கிறது. அதேபோல் எனக்கும் ஒருநாள் கொலை மரணம் வரலாம். அப்படி வந்தால் ஈழமக்களுக்காக அதையும் ஏற்றுக்கொள்வேன் என்று தங்களை ஒருமுறை சந்தித்த போது அடிகளார் கூறியதாக லவுசான் மெய்ப்பு பணியகத்தை சேர்ந்த திரு அன்ரன் உரையாற்றினார். 

ஒன்று கூடலை நிறைவு செய்து பேசிய சுவிஸ் தமிழர் பேரவை உபதலைவர் திரு சண் தவராசா நாம் இங்கு கூடியிருப்பது ஓர் இரங்கல் ஒன்று கூடலுக்காக அல்ல.  அடிகளாரின் படுகொலையையும் இலங்கை அரசின் அராஜங்களையும் இந்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூடியிருக்கிறோம் என்றார்.

அடிகளாரின் படுகொலை மரணமானது எம் மக்கள் மத்தியில் எவ்வளவு வடுவை ஆழபடுத்தியுள்ளது என்பதை இங்கு கூடியிருந்த மக்களின் முகங்களில் தெரிந்தது. ஒன்று கூடல் நிறைவடைய மக்கள் கலைகின்றனர். ஒவ்வொருவர் கையிலும் அடிகளால் பற்றிய துண்டுப்பிரசுரம் ஓர் செய்தியை சொல்லியது.

 
< முந்தைய   அடுத்த >