20. August 2008 20:14
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
30. July 2008 06:43
27. July 2008 09:43
15. August 2008 17:36
8. August 2008 18:51
வடபோர் கள முனையில் சிறீலங்கா பரிசு கொடுத்து தமிழீழத்திடம் பரிசு பெறத்தொடங்கிவிட்டது! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆக்கம் மதி   
27. April 2008 19:23

theepan.jpgவன்னியின் வடபோர்முனை என்பது இன்று அனல் பறக்கும் களமாக தெரிகிறது. 23.04.2008 அன்று கிளாலிக்கும் முகமாலைக்கும் இடையில் சிறிலங்காவின் சிறப்பு பயிற்சிகளை பெற்ற படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளிற்கும் இடையில் மிகக்கடுமையான சமர் இடம் பெற்றுள்ளது. இந்தச் சமரின் உண்மை நிலை தொடர்பாக சிறீலங்காவின் அரசும் அதன் படை உயர் வட்டாரங்களும் இருட்டடிப்பு செய்ய வேண்டிய நிலைமைக்கு களத்தில் சிறீலங்காப்படையினர் இழப்பைக் கண்டுள்ளனர்.

இலங்கைத் தீவில் வடக்குப் பிரதேசத்தில் தமிழர் தாயகப்பிரதேசத்தின் முக்கிய களமாக கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையுள்ள களமும் ஒன்றாகவுள்ளது. இந்தக்களம் யாழ்ப்பாணத்தின் தெற்காக ஏ ஒன்பது வீதியில் muhamalai.jpgமுகமாலையில் மையம் கொண்டிருக்க... யாழ் கடல்நீரேரிப் பக்கமாக கிளாலியும், வடமராட்சி கிழக்குப் பக்கமாக பெருங்கடலோரம் நாகர்கோவிலும் என கிளாலி தொடக்கம் நாகர்கோவில்வரை நீண்ட முன்னரங்கை கொண்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தில் சிறீலங்காப்படையினர் மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். எட்டாண்டுகளுக்கு முன்னர் ஆனையிறவு மையம் கொண்டிருக்க ஏறக்குறைய பதினையாயிரம் படையினரை இயக்கச்சியில் இருந்து பரந்தன் வரையும் ஆனையிறவுக்கு வடக்கு தெற்காக வைத்திருந்தது போல உச்சக்கட்டப் பாதுகாப்பேற்பாடுகளை குறிப்பிட்ட பிரதேசத்தில் வைத்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்திற்குள் தமிழீழவிடுதலைப் புலிகளை உள்நுளைய விடாது தடுக்கும் பாதுகாப்பரணாக இருக்கும் இந்தக்களத்தை விட்டு தெற்காக வன்னிப்பெருநிலப்பரப்பிற்குள் சிறீலங்காப் படையினர் நுளைந்து விடக்கூடாதென தமிழீழ விடுதலைப்புலிகளும் தமக்கே உரித்தான தொழில் நுட்பத்தோடு முன்னரங்கப் பகுதியை பலப்படுத்தி வைத்துள்ளனர். இப்படியான களத்தோடு ஒட்டியதாக வரலாற்றில் நாம் பல விடயங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

23.04.2008 அதிகாலை 01.30 அளவில் கிளாலிக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட களமுனையில் இருந்து பெரும் எடுப்பில் சிறீலங்காப்படையினர் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். பலத்த  எறிகணைச் சூட்டாதரவு, வான் தாக்குதல், டாங்கிப் படையணியின் முன்நகர்வு என்பனவற்றுடன் சிறப்பு பயிற்சி பெற்ற காலாட்படையினர் நகர்வுகளை செய்த அந்த நாள் சிறீலங்காப்படையினரால் "தேர்ந்தெடுக்கப்பட்டநாள்",என்று கூறலாம். அதற்கான காரணமாக நாம் 22.04.2000 அன்றைத்தான் நினைவுக்கு கொண்டுவரவேண்டும். 22.04.2000 அன்று தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் ஆனையிறவுத் தளத்தை மீட்டெடுத்த நாளிற்கு அடுத்த நாள் அதீத நம்பிக்கையுடன் முன்னேறியது. ஆனையிறவுவரை முன்னேறி விடலாம் என்ற கருதுகோள் சரியாகவே தெரிகிறது.

1993 ல் யாழ்தேவி இராணுவநடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட இந்தப் பிரதேசத்தில் பல படை நடவடிக்கைகளைக் கண்டுள்ளனர். ஆனையிறவுத் தளம் சிறீலங்காப் படையினரின் ஆளுகைக்குள் இருந்த போது யாழ்ப்பாணத்திற்குள் பெருமளவான பிரதேசம் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தது. இதன்போது ஆனையிறவுத் தளத்தை விட்டு சிறீலங்காப் படையினர் வெளியேறி வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள்ளோ அல்லது யாழ்ப்பாணத்திற்குள்ளோ சிறீலங்காப்படையினர் முன்னேறிவிடக்கூடாதென ஆனையிறவை சூழவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரணமைத்திருந்த காலம். இந்தக் காலப்பகுதியில் யாழ் கடல்நீரேரி ஓரமாக யாழ்தேவி என்ற பெயர் சூட்டலுடன் 29.09.1993 அன்று சுமார் ஐயாயிரம் படையினர் அளவில் கவசப்படையினரின் முன்நகர்வோடு வான் படையினர் மூலம் குண்டுவீச்சு தாக்குதலையும் நடத்தியவாறு பலத்த எறிகணைகளையும் செயதவாறு ஆனையிறவில் இருந்த யாழ்பாணத்தை நோக்கிச் சென்றனர். ஆரம்பத்தில் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் கிளாலியில் வழிமறித்து எதிர்ச்சமரில் ஈடுபட்டனர்.

 

theepan.jpg

படம்:மதி

பௌத்த சின்னத்தை பரிசாக வழங்கிய பலகல்ல பரிசாக தீபனிடம் என்ன பதில் பரிசாக எதிர்பார்தாரோ? இன்றைய சிறீலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகா வடபோர்முனையில் தீபனுக்கு பரிசு கொடுக்க புறப்பட்டார். பலகல்லவிற்கு தீபன் பரிசு கொடுக்கவில்லை. ஆனால்... சரத் பொன்சேகாவிற்கு கேணல் தீபன் பரிசு கொடுக்க தொடங்கி விட்டார்.

புலோப்பளையிலும், கிளாலியிலும் சிறீலங்காப்படையினரை வழிமறித்து புலிகள் சமர் புரிந்ததில் 125 படையினர் பலியாகினர். கேர்னல் சரத் பொன்சேகா (இன்றைய சிறீலங்கா படைத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா) உட்பட 284 சிறீலங்காப் படையினர் காயமடைய்தனர். இரண்டு ரி56 டாங்கிகள், கோபுரகவசவண்டி ஒன்று ஆகியன முற்றாக அழிக்கப்பட்டன. இரண்டு கோபுரகவசவண்டிகள்(பவள்) சேதமாக்கப்பட்டன. ஆனையிறவில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி மீண்டும் ஆனையிறவிற்கே திருப்பி அனுப்பட்டது.

2001 ல் தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை

குறிப்பிட்ட காலத்தின் பின்னர் களநிலமை மாறியது சூரிக்கதிர் படைநடவடிக்கை மூலம் சிறீலங்காப் படையினர் பிடிக்குள் யாழ்ப்பாணம் என்றாகியது. இந்தக் கள மாற்றத்தின் பின்னர் தான் 22.04.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கையகப்படுத்தினார்கள். இதன்பின்னர் ஓராண்டு கடந்த நிலையில் 25.04.2001 அன்று சிறீலங்காப்படையினர் தீச்சுவாலை என்ற பெயர் சூட்டலுடன் ஆனையிறவை மீண்டும் கையகப்படுத்தும் எண்ணத்தோடு பெருமெடுப்பில் முன்னேறினர். சுமார் பன்னிரெண்டாயிரம் படையினரை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் சமராடினர். ஆனையிறவை மீண்டும் கைப்பற்றி சிங்கக் கொடியைப் பறக்க விடுவோம் என்ற இறுமாப்போடு நகர்ந்த தீச்சுவாலை  புலிகளின் எதிர்சமரினால் திணறியது. நாளொன்றிற்கு சுமார் எண்பத்தையாயிரம் வரையான எறிகணைகளை எகிறியபடியே நகர்ந்த தீச்சுவாலைக்குள் தீக்குளித்தபடி சமராடிய புலிகள்.... ஐநூறுக்கும் அதிகமான சிறீலங்காப் படையினரை அழித்து, ஆயிரத்திற்கும் அதிகமான படையினரை படுகாயமடையச் செய்து 27.04.2001 அன்று தீச்சுவாலை அணைக்கப்ட்டது.

2006 ல் ஏமாற்று சமாதான நாடகத்தின் மத்தியிலும் இராணுவத்தாக்குதல்

மீண்டும் குறிப்பிட்ட இக்களத்தில் மாற்றம் ஏற்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர்(ஒப்பந்தம் செய்யப்பட்டது 22.02.2002) போர்நிறுத்தம் எழுத்தில் இருக்கும்போதே....  11.08.2006 அன்று கிழக்கில் புலிகளை கிலிகொள்ள வைத்துவிட்டோம் வடக்கில் புலிகளை வழிப்படுத்திவிடுவோம் என்று ஆனையிறவே இலக்காகியது. களமுனை எரிமைலையாய் வெடித்தது. மூர்க்கத்தனமான முன்னகர்வை செய்வதற்கு டாங்கிப் படையணியையும், பல்குழல் எறிகுழல் செலுத்திகளையும் மலையென நம்பி சிறப்பு பயிற்சி பெற்ற சிறீலங்காப் படையிரே முன்னேறினர். இந்தக்களமுனை திறக்கப்படுவதற்கு முன்னதாக படைத்தளபதி சரத் பொன்சேகாவின் உற்சாகமூட்டும் நடவடிக்கைகளும் இருந்தது. புலிகளின் எதிர்சமரின் தாற்பரியம் புரிய வைக்கக் கூடிய களமாக இருந்தமையால் சற்று அமைதியான களத்தில் 09.09.2006 அன்றும் சிறீலங்காப்படையினர் சுடுகுழல்களின் சூடாறமுன்னரே.... புலிகள் களைப்படைந்திருப்பார்கள் என்ற கணிப்போடு முன்னேற முன்பட்டு அந்த முயற்சியும் திருவினையாகாத நிலைமைதான் களமுனையில் காணப்பட்டது.

11.10.2006 அன்று புதிய தெம்பை வரவழைத்தவர்களாக முகமாலைக் களத்தை திறந்தனர். முகமாலையில் என்ன நடக்கின்றதென போரியல் ஆய்வாளர்களே சரியாக எதிர்வு கூறலைச் சொல்லிவிட முடியாதளவிற்கு புலிகளின் எதிர்ச்சமர் மிகக்கடுமையாக இருந்தது. விளைவு பலநூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். எழுபத்தைந்து படையினரின் உடலங்களையும் களத்தில் கைவிட்டுத் திரும்பியது சிறீலங்காப் படையணிகள். இந்த எதிர்ச்சமரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய குண்டுத் தாக்குதல் ஒன்றைச் செய்திருக்க வேண்டுமென பயிற்சி பெற்றவர்கள் கூறுமளவிற்கு களமுனையில் சமரின் உக்கிரம் இருந்துள்ளது.

சமாதானம் பேசிக்கொண்டு மறுபுறத்தில் தேசத்தின் பாதுகாப்பென படையை வலுவாக்கிக் கொண்டு சமாதானப் போர்வையோடு சண்டை செய்த களத்தில் சமாதானம் வெடித்த களமாக 11.10.2006 அன்று முகமாலைக் களத்தை வரலாற்றில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் சிறீலங்காப் படைகளை திகைக்க வைத்த களமாக அன்றைய சமர்களம் இருந்தது.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தக்களம் பல சமர்களைக் கண்ட களமாக இருக்கிறது. இங்கே நாம் இன்னுமொரு முக்கிய தகவலை நோக்க வேண்டும். ஆனையிறவிற்கு ஈடாகத்தான் இன்று முகமாலை யாழ்பாணத்திற்கான நுளைவாயிலாக உள்ளது. ஆனால்... ஆனையிறைவை விடவும் சிறீலங்காப் படையணிகள் அதிகம் நிலை கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கொண்ட களமாகும். இந்த இடத்தை பின்தளம், வழங்கலுக்கான பிரதான தளம் என்ற நிலைப்பாட்டுடன் இங்கிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இதனை அறிவால் உணரவில்லையெனில் இன்னும் அனுபவங்களை கண்டுதான் சிறீலங்காப் படைவட்டாரங்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாய எதிர்ச்சமர் நடவடிக்கையில் குறிப்பிட்ட இந்தக் களத்தில்... சிறீலங்காப்படையினருக்கு காயங்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியதாகவும் இதனால் பல உயர் வட்டாரங்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கொழும்பில் பாதுகாப்பு விவகாரப் பத்தியெழுத்துக்களையும் செய்திகளையும் எழுதும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தீச்சுவாலை படைநகர்வு தோல்விகண்ட பின் தெரிவித்திருந்தார். இதில் ஒரு உண்மையும் இருக்கிறது.

போரியல் ஆய்வாளர்களை மட்டுமல்ல போரியல் வல்லுனர்களையும் திகைக்கவைத்த புலிகளின் போர்த்தந்திரம்.

போரின்போது சுமார் ஐநூறு படையினர் கொல்லப்பட்டு விட்டால்.. அதன் உளவியல் தாக்கம் குறிப்பிட்டளவு தூரத்தை தாண்டாது. குறிப்பிட்டு சொல்வதானால் ஓயாத அலைகளை ஒன்று நடவடிக்கையில் முல்லைத்தீவு படைத்தளத்தை துடைத்தளித்த புலிகளின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். அந்தக் கதையை அப்படியே மூடி மறைத்த்து போல் அமுக்கி விட்டனர். ஆனால்.. தீச்சுவாலை முறியடிப்பு சமரின்போது காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களை களமுனையில் இருந்து அகற்றுவதுடன் பலாலிக்கு கொண்டு சென்ற பின் கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும். கொழும்பில் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவையங்களை இழந்தோரை பராமரிக்க வேண்டும். இவற்றோடு காயமடைந்த படையினர் தமது களமுனை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இது சிறீலங்கா படைவட்டாரங்களில் உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்தும். ஆகவே.. ஒட்டுமொத்தத்தில் குறிப்பிட்ட இந்த களத்தில் படையினரை புலிகள் கூடுதலாக காயப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது.

23.04.2008 அன்றும் நானூறுக்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். இதனால் படையினர் மத்தியில் உளவியல் தாக்கம் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் என்பது தவிர்க்க இயலாததே. காரணம் நாட்டிற்காக தம்மை ஈகம் செய்யும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு முன் வரும் சிறீலங்காப் படையினர் என்னதான் சிங்களப் பேரினவாதத்தை ஊட்டினாலும் கொடுப்பனவுகள், சலுகைகள் பற்றிய அக்கறை, பதவி ஆசை என்பனவற்றை புறம் தள்ளிய படையல்லவே. எனவே அவயங்களை இழந்த படையினர் ஏனைய படையாட்களின் மனதை கலங்க வைப்பார்கள். எனவே நாம் இங்கு குறிப்பிட்ட நோக்கும் களம் நீண்ட காலமாக படையினருக்கு படுகாயத்தைக் கூடுதலாக ஏற்படுத்தும் களமாக காணப்படுகிறது.

இனி இறுதியாக நடந்த சிறீலங்காப்படையினரின் முன்நகர்வினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ச்சமரினையும் பற்றி வெளிவந்த தகவல்களை சிறீலங்காப் படை உயர் வட்டாரமும், அரசும் முக்கியமாக பாதுகாப்பு நிலவரங்களை பேசவல்ல சிறீலங்காவின் அமைச்சரான கெகலிய ரம்புகெவெல நிலை தடுமாறி உளறினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு முன்னுக்கு பின் முரணாகப் பேசினார், என்பது பற்றியும் பார்ப்போம்.

முகமாலையில் புலிகளின் முன்னரங்கை கைப்பற்றிவிட்டோம் முப்பத்தியெட்டுப் படையினர் தான் பலியாகினர் என்று ரம்புக்வெல அறிவித்தார். பின்னர் நாற்பத்து மூன்று படையினர் பலியாகினர் முப்பத்தி மூன்று படையினரை காணவில்லை என்ற அறிவிப்பு வந்தது. இரு தடவை ஊடகவியலாளரையும் சந்தித்து மழுப்பிவிடவே முற்பட்டனர். ஒட்டு மொத்தமாக களத்தில் சிறீலங்காப்படையினருக்கு ஏற்பட்ட இழப்பை மூனி மறைப்பதில் தான் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.

புலிகளின் முன்னரங்கை கைப்பறிவிட்டோம் என கூறி மூக்குடைபபட்டனர். உண்மையில் புலிகளின் முன்னரங்கை கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆளணி இழப்பை ஏற்படுத்தியிருந்தால் சிறீலங்காப் படையினர் தான் புலிகளின் உடலங்களை கைப்பறியிருக்கவேண்டும். ஆனால்.. நடந்த்தென்ன சிறீலங்காப் படையினரின் முப்பத்து மூன்று சடலங்களை கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் நல்ல நிலையில் இருந்த இருபத்தெட்டு சடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமூடாக ஒப்படைத்து விட்டு எஞ்சிய மூன்று சடலங்களையும் படையாட்களுக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

 

ஆய்வு: முரசத்திற்காக மதி

மறுபுறம் காயமடைந்தவர்கள் நானூறிற்கும் அதிகமான படையினர். அவர்களை கொழும்பிற்கு கொண்டு சென்றதுடன் நூற்றிற்கும் அதிகமான படையினரின் சடலங்களை கொழும்பிற்கு கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற் நிலமை தான் யாழ்பாணத்தில் இருந்தது. ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையின் பின்னர் முல்லைத்தீவில் நானூறிற்கும் அதிகமான படையினரின் சடலங்களைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநோச்சியில் வைத்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஊடாக ஒப்படைத்தனர். புலிகள் உரிய மரியாதையுடன் ஒப்படைத்த சடலங்களை உறவுகளிடம் ஒப்படைக்காது வவுனியா பம்பைமடுவை அண்டிய காட்டுப்பகுதியில் எரியூட்டி அழித்தனர். சுமார் ஐம்பது சிறீலங்காப் படையினரின் சடலங்களைத் தான் உறவினர்களிடம் சேர்ப்பித்தனர்.

ஆனால் இன்று இதே போன்றவொரு வேலையைச் செய்துவிட முடியாத நிலமைதான் யாழ்ப்பாணத்துள் இருக்கிறது. எனவே தான்.. கிளாலி முகமாலை களமுனையில் எடுக்கபட்ட சடலங்களை கைவிடவும் முடியாது. ஏனெனில் களத்தில் கைப்பற்றும் படையினரின் சடலங்களை மட்டும் எண்ணி அறிக்கையிடாது, படையாளிற்குரிய இலக்கம், பெயர், அவர்களின் கையடக்க தொலைபேசி இலக்கம் என்பனவற்றையும் புலிகள் வெளியிடுகின்றனர். புலிகளால் இணையத்தள ஊடகங்களுக்கும் இந்த விடயங்கள் வழங்கபடுகின்றன. எனவே உண்மை பலவழிகளிலும் வெளியிடப்படுகின்றன.

சடலங்களை ஒப்படைக்கும் போது உரிய மரியாதை கொடுக்கபட்டது. போர்களத்தில் சிறீலங்காப் படையிரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடலங்களை கைப்பற்றி ஒப்படைத்துள்ளனர். ஆனால்.. அந்த வேளையில் மிகமோசமான நாகரீகமற்ற கொடூர சிந்தனையுடன் தான் சிங்களப் படையும், சிறீலங்கா அரசும் நடந்திருக்கிறது. அனைத்துலக போர் விதிமுறைகளிற்கு முரணாக செயற்பட்டார்கள் என்பதிலும் பார்க்க மனித விழுமியங்களை ஏறிமிதித்துச் செயற்பட்டனர் எனச் சொல்லலாம். அனுராதபுரம் வான்படைத் தள அழிப்பின் பின்னர் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உடலங்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் அதாவது சிறீலங்காப் படையினரின் மனோநிலையை மட்டுமல்ல சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையைமும் வெளிப்படுத்தினர். இதேபோன்று தான் மணலாறு, மண்கிண்டிமலை படைத்தள தாக்குதல்களின் போது சிறீலங்காப் படையினர் கைப்பற்றிய புலிகளின் உடலங்களை நிர்வாணமாக்கி பௌத்த மதத்தின் தர்ம்ம் பற்றி எடுத்துரைக்கும் சிங்களம் புத்தரை வெட்கித்தலைகுனிய வைத்தது. இவற்றைப பார்க்கின்றபோது புலிகள் படையினரின் சடலங்களை உரிய மரியாதையுடன் ஒப்படைப்பதில் இருந்து தமிழீழ விடுதலைப் போர் பற்றி உலகம் நேர்மையாகப் பார்க்க வேண்டும்.

களத்தின் உண்மை நிலையை மறைக்க வழியின்றி இறுதியில் சிங்களப் பேரினவாதிகள் ஒப்புக்கொண்டனர். கொழும்பில் றேமன் மலர்ச்சாலையிலும், பொறளை மலர்ச்சாலையிலும் வைக்கபட்ட சடலக்களுமாக 165 சடலங்கள் உள்ளமையால் 165 படையினர் பலியாகினர். இருபது படையினர் காணாமல் போயினர் என ஒப்புக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. (மட்டைப்பந்து ஓட்டங்களை நேர்முகம் செய்யும் விதமாக எண்ணிக்கை வெளியிடுவதில் ஆனந்தம் கொள்ளும் பத்தியெழுதாளனாக யாரும் எண்ணிவிடாதீர்கள்) சிங்களப் பேரினவாதம் திணிக்கும் வன்முறையை தமிழர் எதிர்கொள்வதைத் தவிர வழியில்லை என்ற நிலமை.... தமிழர் விரும்பி ஏற்றதல்ல. திணிக்கபட்டது. எனவே தான் தமிழ் இளைஞர்களை காணாமற் போகச் செய்தவர்களின் வாயால் களத்தில் படையினர் காணாமல் போகின்றனர் எனச் செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இக்களத்தில் போர்த்தளபாடங்களை இழத்ததிலும் பார்க்க உயிரிழப்பும் காயமடைந்ததுமாக சிறீலங்காப்படையினர் களத்தில் இருந்து ஒரு பற்றாலியனை இழந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தரப்பில் பதினாறு போராளிகளே வீரச்சாவைந்தனர் எனக் கூறினர். உண்மையில் இந்தக் களத்தில் புலிகளிற்கு இழப்பு குறைவுதான். அதற்கான காரணம் புதிய போரியற் தொழில்நுட்பம்..... இன்னது தான் என்று விவரிக்க முடியாத போரியல் விஞ்ஞானம். உலகப் போரியல் ஆய்வாளர்களை விழி விரிய வைக்கும் விதமாகவே காணப்படுகிறது.

முன்னேறிய சிறீலங்காப் படையினரை எதிர்ப்புக் காட்டியபடியே புலிகள் பின்நகர்ந்து தாம் விரித்த வலைக்குள் உள்வரச்செய்து பலமுனை எறிகணை எகிழல்களோடு  பொறிவெடிகளின் கோர்வையிலும் சிக்க வைத்து தமது ஆளணி இழப்பை குறைவாகவே வைத்துக்கொண்டு நெருப்பெடுத்துள்ளனர். கொழும்பு திகைக்கிறது. சமாதானம் வெடிகும் என்றது இதுதானா? சிங்கள மக்கள் விலையேற்றத்தால் விக்கித்து நிற்கின்றனர். அவர்களை எவ்வாறு சமாளிப்பது? சமாதானம் என ஏதாவது வழியில் குரல் கொடுக்கலாமா? என்றும் சிந்திக்க தோன்றும்.

 

சமாதானம் பேசும் போது அன்றைய சிறீலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பலகல்ல வவுனியாவின் வடக்காக ஓமந்தைப் பிரதேசத்தில் ஏ9 வீதியோரம் விளக்கு வைத்த குளத்தில் வைத்து கைதிகள் பரிமாற்றம் நடந்த வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபனுக்கு பரிசொன்று வழங்கினார். சமாதானத்தை ஒரு தட்டில் ஏந்தியபடி மறுதட்டில் போரை தீவிரமாக முயற்சிகளை செய்தபடி பௌத்த சின்னத்தை பரிசாக வழங்கிய பலகல்ல பரிசாக தீபனிடம் என்ன பதில் பரிசாக எதிர்பார்தாரோ? இன்றைய சிறீலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகா வடபோர்முனையில் தீபனுக்கு பரிசு கொடுக்க புறப்பட்டார். பலகல்லவிற்கு தீபன் பரிசு கொடுக்கவில்லை. ஆனால்... சரத் பொன்சேகாவிற்கு கேணல் தீபன் பரிசு கொடுக்க தொடங்கி விட்டார்.

 

சரத் பொன்சேகா வடபோர்முனையில் தீபனுக்கு பலநாடுகளிடம் பெற்ற போர்த்தளபாடங்களைப் பரிசாக வழங்க தீபன் சிறீலங்காப்படையினைரை சிதறடித்துப் பரிசு வழங்குகிறார். இதிலென்ன புதினம் என்றால் ஆளையாள் நேரடியாக கையாலாகு செய்தபடி பரிசைப்பெறவுமில்ல் வழங்கவும் இல்லை. தளபதி கேணல் தீபனின் பரிசு கொடுப்பு தொடரும் என்பது திண்ணம்.         
கருத்துக்கள் (10)
dominic wrote on June 19, 2008
Title: ...
All the best for your efforts and hard works

S.Krishanthan wrote on June 11, 2008
Title: Tigers are the best
We gonna fuck bladdy sinhales. I'm sure one day we gonna celebrate our freedom day as sson aas possible under the path of great national leader.fanatastic write more like this and kill sinhales by your enthusiatic writting. i'm slaute your writting.

இலக்கியா wrote on May 05, 2008
Title: வழ்த்துக்கள்
இம்மாதிரியான சிந்தனை மிக்க கட்டுரைக்கு எனது பாராட்டுகளும், தொடர்ந்து எழுதுவதற்க்கு வழ்த்துக்களும்.

Nivetha wrote on April 30, 2008
Title: Nalla irukkuthu
Intha websiteukku enda best wishes
Ippadye thodaratungo
Unmaya intha kadduray nallave irukkuthu
smilies/kiss.gif

Sure wrote on April 30, 2008
Title: Vanakam
intha kaddurai romba nalla irukku...ithai mathary vera kaddurai eluthi naal nalla irukkum endu ninaikran.nalla karuttugal kondana.valthukkal! smilies/cheesy.gif smilies/wink.gif smilies/smiley.gif
Ashwin wrote on April 30, 2008
Title: ...
nice website

Sanu wrote on April 30, 2008
Title: ....
Inde kaddurai nalla irukku smilies/smiley.gif
Nitha wrote on April 30, 2008
Title: ...
இந்த வித்தியாசமான மற்றும் ஆர்வமான கட்டுரைக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும். smilies/cheesy.gif
Rathika wrote on April 30, 2008
Title: வடபோர் கள முனையில் சிறீலங்கா பரிசு கொடுத்து தமிழீழத்திடம் பரிசு பெறத்தொட
Inda kaddurai mikavum arvamanathu, itharku enathu manamartha valthukkalum nanrikalum. smilies/cheesy.gif
tipan wrote on April 28, 2008
Title: ...
unkalin kadduraikku enathu manamantha nanrykal ennul eluntha kelvikalukku pathil kidaithathu makilci smilies/cheesy.gif

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >