22. November 2008 11:38
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
4. October 2008 12:47
27. August 2008 15:01
11. October 2008 23:48
3. October 2008 18:45
சட்டவிரோதரீதியில் ஐரோ 2008 சீட்டுக்கள் விற்பனையில் – உதைபந்தாட்ட சம்மேளனம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
29. April 2008 22:05

euro_ticketoriginal.jpgஎதிர்வரும் ஜீன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பியக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டிக்கான போலி நுழைவுச்சீட்டுகள் இணையத்தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக அனைத்துலக உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதை முறியடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ள சம்மேளனம் இவ்வாரம் மேலதிக நுழைவுச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யபடவுள்ளதாவும் தெரிவித்துள்ளது.

 

euro2008_tickets.jpgஅத்துடன் பலர் தாம் ஏற்கனவே வாங்கிய நுழைவுச்சீட்டுக்களை 5000 ஐரோவிற்கும் அதிகமான விலையில் மீள்விற்பனை செய்யதுள்ளதும் தெரியவந்துள்ளது. பல இணையத்தளங்களின் மூலம் ஆரம்பப்போட்டிக்குரிய சீட்டுக்கள் 1000 டொலருக்கும், வியன்னாவில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிகளுக்கான சீட்டுக்கள் 7000 டொலருக்கும் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் மீது கண்காணிப்பு

பல இணையத்தளங்கள் முலம் சட்டவிரோதமான முறையில் சீட்டுக்கள் விற்பனை செய்யபடுவதை நாமறிவோம். அவ்விணையத்தளங்களை நாம் கண்காணித்துவருகின்றோம். தேவையேற்படில் அந்தந்த நாட்டு தேசிய சட்டங்களின் பிரகாரம் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என்று ஐரோ 2008 தலைமை நிர்வாக மேலாளரான திரு.மாட்ரின் காலேன் தெரிவித்தார். எனினும் துரதிர்டவசமாக இவ்விணையத்தளங்கள் நுழைவுச்சீட்டுகளை எவ்வாறு பெறுகின்றன என்பது குறித்த எந்த அடையாளமும் தெரிவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பல நாடுகளி்ல் சீட்டுகளை மீள்விற்பனை செய்வதை தடுப்பதற்கான நீதிமன்ற ஆணையை தம்மால் பெற முடியாதிருப்பதாகவும் சம்மேளன பேச்சாளரான திரு.வில்லியம் கையாற் அசோஸியேற்றரட் பிரஸ் செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.   

அனுமதிக்கு உத்தரவாதம் இல்லை

மேலும் தமது நுழைவுச்சீட்டுகளை உத்தியோகபூர்வமற்ற முறையில் வாங்கியவர்களுக்கு மைதானத்திற்குள் நுழையும் அனுமதிக்கு தன்னால் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது என்றும் திரு வில்லியம் மேலும் தெரிவித்தார். இந்நுழைவுச்சீட்டுக்களை பெறுவதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக உதைபந்தாட்ட ரசிகர்களிடம் இருந்த வந்த முறைப்பாடுகளை குறித்து கருத்து செய்தியாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த சம்மேளனத்தலைவர் மைகேல் பிளன்ரினி 80 000 ஆசனங்களை கொண்ட மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டுக்காக 15 மில்லியன் பேர் விண்ணப்பிக்கும் போது 14 மில்லியன் பேருக்கு மேல் ஏமாற்றமடைவது இயல்பே என்றும் இந்த யதார்த்தத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஏற்பாடுகள் பூர்த்தி

முதலாவது ஆட்டத்திற்கு 41 நாட்களே இருக்கும் இவ்வேளையில் ஐரோ 2008 இற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கபட்டுள்ளதாக தலைமை மேலாளர் தெரிவித்தார். அனைத்து விளையாட்டரங்கங்களும் தயார் நிலையில் உள்ளது. மற்றைய நடைமுறை ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்  "Everything is going well,"  என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.  
 
< முந்தைய   அடுத்த >