12. October 2008 03:30
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
3. October 2008 18:45
4. October 2008 12:47
16. August 2008 15:10
19. August 2008 23:28
இலங்கை செய்திகள்
முக்கிய செய்தி
11. October 2008 19:41

மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில்  படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது....

11. October 2008 15:44

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீது...

சுவிசில் நடைபெற்ற கானக்குயில் 2008 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
30. April 2008 08:08
28 - 1st malalai kanakkuyil 2008.jpgசிறுவர் இருதய சத்திர சிகிச்கை நிதிக்காக சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழக அறக்கடளையின் ஒழுங்கமைப்பில் 11 வது ஐரோப்பா தழுவிய கானக்குயில் 2008 சூரிச் அல்பிஸ்குட்லி மண்டபத்தில் 27.04.2008 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)

நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் படையணியின் கோரத்தனமான தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர் கருணாரட்ணம் அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக அறக்கட்டளை சுவிஸ் பொறுப்பாளர் சு.சண்முகதாசன்; ஈகைச்சுடரேற்றினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களும், பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

03.jpg

01.jpg

கானக்குயில் 2008 ஆரம்பநிகழ்வில் வெண்புறா நிறுவனத்தின் ஐரோப்பிய  பொறுப்பாளர் டாக்டர் மூர்த்தி, இத்தாலி நாட்டு தமிழர் புனர்வாழ்வுக்கழக் பொறுப்பாளர் திரு. கோணேஸ் ஆகியோர் விழா சுடர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து அகவணக்கம், இராதா நடனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் என்பனவும் இடம்பெற்றன.


கானக்குயில் 2008 இல்  தமிழீழ வெளியீட்டுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.  தலைவா ஆணைகொடு இசைத்தட்டை சுவிஸ் கிளை வெளியீட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் செல்வா வெளியீட்டுவைக்க வெண்புறா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் என் எஸ் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

விடுதலை மூச்சு, குருதிச்சன்னங்கள் ஆகியவற்றின் இறுவெட்டை சுவிஸ் கிளை வெளியீட்டுப் பிரிவின் துணைப்பொறுப்பாளர் சேந்தன் வெளியிட்டுவைக்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இத்தாலி நாட்டுப் பொறுப்பாளர். திரு கோணேஸ் பெற்றுக்கொண்டார்.

12 - 1st swiss.jpg

16 - 1st swiss.jpg

(மேலதிக படங்கள்)

தொடர்ந்து சுவிஸ்  இளம்கானக்குயில், சுவிஸ் கானக்குயில் மற்றும் சுவிஸ் மழலைகள் கானக்குயில் ஆகியோரிற்க்கான போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டோர் ஐரோப்பிய போட்டியாளர்களுடன் மோதினர். தமிழீழ தேசப்பாடல்களை இளையோரும், சிறுவர்களும் மிகவும் சிறப்பாகப் பாடினார்கள். இடையே மேற்கத்தேய நடனங்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் சிறப்பம்சமாக பத்திரிகையாளர் திரு. கனகரவி;, வெண்புறா நிறுவனத்தின ஐரோப்பிய   பொறுப்பாளர் டாக்டர் மூர்த்தி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் பேச்சாளர் திரு. அல்பேட் ஆகியோரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

28 - 1st malalai kanakkuyil 2008.jpg

55.jpg

நிகழ்வினை அறிவிப்பாளர்; திரு.யஸ்ரின் சக அறிவிப்பாளர்; திருமதி. கற்பகத்துடன் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர். போட்டிகளில் வென்றவர்களிற்கான பரிசில்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

சுவிஸ் இளம்கானக்குயில்;
முதலாம் இடம்   அஜானா  தயானந்தன்
இரண்டாம் இடம்    மதுசங்கா பாஸ்கரன்
முன்றாம் இடம்     வைஷ்ணவி  வரதராசன்
சுவிஸ் கானக்குயில்
முதலாம் இடம் -   கீர்த்திகா  சிறீஸ்கந்தவேள்
இரண்டாம் இடம் -  தர்சினி திலீபன்
முன்றாம் இடம்   -   சுந்தரலிங்கம்  புவனேந்திரன்
சுவிஸ் மழலைகள் கானக்குயில்
முதலாம் இடம் பிரவீணா  பிரேமானந்தன்  
இரண்டாம் இடம்   சரண்யா ஜெயக்குமார்
முன்றாம் இடம்    சைந்தவி  கேதீஸ்வரன்
ஐரோப்பா   இளம்கானகுயில்
முதலாம் இடம்  மதுசங்கா  பாஸ்கரன்
இரண்டாம் இடம்    அஜானா  தயானந்தன்
முன்றாம் இடம்    நேர்த்திகா  சிவகுணராசா
ஐரோப்பா  கானக்குயில்
முதலாம் இடம்  கலைவாணி ஜெயலிங்கம்
இரண்டாம் இடம்    தர்சினி திலீபன்
முன்றாம் இடம்    தமிழினி  கந்தசாமி
 
< முந்தைய   அடுத்த >
நிதி நெருக்கடி -வில்லியம் ரெல் திரைபடம் கைவிடப்பட்டது.
11. October 2008 23:27
ரி.என்.ஜே

tell_g.jpgநடப்பு சர்வதேச நிதிநெருக்கடியின் விளைவாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சுவிற்சர்லர்லாந்தின் விடுதலைபோராளியான வில்லியம் ரெல்லின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான «The Adventures of William Tell» ரத்துச் செய்யபட்டுள்ளது.

விபரம்
ஜெனிவாவிற்கான விமானசேவையை குறைத்தது லிபியா
11. October 2008 22:27
ரி.என்.ஜே
libya.pngலிபிய அதிபர் கேர்ணல் கடாபியின் மகன் ஜெனிவா நகரில் கைது செய்யபட்டு வழக்கு தாக்கல் செய்யபட்டதன் விளைவாக லிபியாவிற்கும் சுவிற்சர்லாந்திற்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர முறுகல் நிலை தொடர்கிறது. லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து ஜெனிவாவிற்கு நடைபெற்று வந்த வாரத்திற்கு மூன்று தடவையான விமானப்போக்குவரத்தில் இரண்டை லிபியா ரத்து செய்துள்ளது. விபரம்
செப்ரெம்பரில் வேலையற்றோர் தொகை உயர்வு
10. October 2008 11:57
ரி.என்.ஜே

arbeitlose.jpgசெப்ரெம்பர் மாதத்தில் சுவிற்சர்லாந்தில் வேலையற்றோர் தொளை உயர்வடைந்துள்ளது. முன்னய மாதத்தை விட 1941 பேர் புதிதாக வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர். வேலையின்மை வீதம் செப்ரெம்பர் இறுதியில் 2,4 வீதமாக உள்ளது.

விபரம்
வைகோ நடத்திய போராட்டத்தில் ஒலி பெருக்கிகள், லாரி அப்புறப்படுத்தப்பட்டது ஏன்?-போலீசார் விளக்கம்
11. October 2008 20:06
வா.கி.குமார்
vaiko_arrest.jpgவைகோ நடத்திய போராட்டத்தில் ஒலி பெருக்கிகள், லாரி அப்புறப்படுத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். விபரம்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பா.ஜ.க.வும் புறக்கணிக்கிறது: இல. கணேசன் அறிவிப்பு
11. October 2008 19:55
வா.கி.குமார்

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க.வும் அறிவித்துள்ளது.

விபரம்
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு: வணிகர் சங்கங்களின் பேரவை
11. October 2008 12:17
வா.கி.குமார்

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.10.08) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு நடத்தப்படவுள்ளது.

விபரம்
ஈராக்கில் குண்டு வெடித்து பாராளுமன்ற உறுப்பினர் பலி
11. October 2008 20:33
வா.கி.குமார்

irag.jpgஈராக் நாட்டில் ஷியா மதகுரு மொக்டாதா அல் சதர் அமைப்பைச் சேர்ந்த எம்.பி ஒருவர் சென்ற கார் அருகே குண்டு வெடித்ததில் அவர் பலியானார். இதை தொடர்ந்து அந்த நாட்டில் பெரும் மோதல் ஏற்பட்டது.

விபரம்
பாகிஸ்தானில் பஸ், விபத்தில் சிக்கியதில் 20 பேர் பலி
11. October 2008 20:20
வா.கி.குமார்

பாகிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 20 பேர் பலியானார்கள். 11 சிறுவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பஞ்சாப் மாநிலத்தில் லோத்ரான் என்ற இடத்தில் நடந்தது.

விபரம்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு நோபல் சமாதான பரிசு
11. October 2008 20:18
வா.கி.குமார்

பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

விபரம்
முதல் டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313
11. October 2008 20:15
வா.கி.குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.

விபரம்
ஆசிய-பசிபிக் மகளிர் டென்னிஸ் அணியின் தலைவராக சானியா மிர்ஷா தேர்வு.
10. October 2008 06:36
PTR.
sania_asia_cap.jpgமகளிருக்கான உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடரின், ஆசிய-பசிபிக் அணியின் தலைவராக இந்திய வீராங்கனை சானியா மிர்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹொங்காங்கில் உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் திகதி  ஆரம்பிக்கின்றது. இத்தொடரில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியபசிபிக் அணிகள் மோதுகின்றன. விபரம்
பங்களாதேஷ்-நியூஸிலாந்து கிரிக்கட் தொடர்: முதலாவது போட்டியில் அதிர்ச்சி அளித்தது பங்களாதேஷ்.
10. October 2008 06:30
PTR.
newz_bangh.jpgபங்களாதேஷ்-நியூஸிலாந்து கிரிக்கட் அணிகளுக்கிடையில் டாக்காவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்று ரீதியிலான வெற்றியை பங்களாதேஷ் பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக அந்த அணி பெறும் முதலாவது சர்வதேச வெற்றி இது. இதுவரை, இரு அணிகளும் 12 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன. விபரம்
எம்மவர் நிகழ்வு
சுவிஸ் லுட்சேர்னில் நடைபெற்ற எழுச்சிவிழா 2008

இலங்கை இந்திய கூட்டுச் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக அகிம்சைப்போர் புரிந்து விதையான லெப்.கேணல் திலீபன், முதற் களப்பலியான பெண் போராளி 2 ம் லெப்.மாலதி, மூத்த உறுப்பினர் கேணல் சங்கர், கேணல் ராயூ, சிறீலங்கா அரசின் சதியால் பலியான லெப்.கேணல் நாதன் , கப்டன் கஜன் ஆகிய தமிழீழ விடுதலையின் தடையகற்றிகளை நினைவு கூர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரின் ஏற்பாட்டில் எழுச்சி விழா நடைபெற்றது. (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டு விழா 2008
111.jpgசுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008, சூரிச் மாநிலத்தில்
வின்ரத்தூர் “ஐஸ்காலே’’ விளையாட்டு அரங்கில் 16.08.2008 சனிக்கிழமை முதல் நாள் நிகழ்வாக ஆரம்பமாகியது. (படத்தொகுப்பு)
விபரம்
 
சுவிஸ்சில் நடைபெற்ற 25வது ஆண்டு கறுப்புயூலை நினைவு கூரும் நிகழ்வு
25.JPGசிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.  (படத்தொகுப்பு)
விபரம்
 
பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு
pongu_tamil_-23.jpgபிரித்தானியாவில்‘எங்களுக்கு தமிழீழம் வேண்டும்’என்ற இளையோரின் மேடை முழக்கத்துடன் 40000க்கும் மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்களின் உணர்வுடன் பொங்கியெழுந்தது பொங்கு தமிழ் நிகழ்வின் படத்தொகுப்பு