| கலைபண்பாட்டுக் கழகம் (சுவிஸ்) முதல் முறையாக ஐரோப்பா தழுவிய ரீதியில் நடத்திய “விடுதலைக்குயி |
|
|
| . | |
| 7. February 2007 03:11 | |
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை கலைபண்பாட்டுக் கழகம் முதல் முறையாக ஐரோப்பா தழுவிய ரீதியில் நடத்திய “விடுதலைக்குயில் 2007” பாடற்போட்டி நிகழ்வு 03.02.2007 சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்றிருந்தது.
இந் நிகழ்வில் நோர்வே, பிரான்ஸ், டென்மார்க் உட்பட சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போட்டியாளர்கள் தோற்றியிருந்தார்கள். ![]() மழலை விடுதலைக்குயில், இளம் விடுதலைக்குயில், விடுதலைக்குயில் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டியின் தெரிவுப் போட்டியில் 80 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிறைவுப் போட்டிக்கு 36 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டியிட்டிருந்தார்கள். ![]() இப் போட்டிகளில் மழலை விடுதலைக்குயிலாக நோர்வே நாட்டிலிருந்து வருகை தந்து போட்டியிட்ட அஜினராஜா அகர்சனும் இளம் விடுதலைக்குயிலாக டென்மார்க்கிலிருந்து வருகை தந்து போட்டியிட்ட வசந்தராஜா ஸ்ரெபினாவும் விடுதலைக்குயிலாக நோர்வேயிலிருந்து வருகை தந்த ஏ.எஸ்.ரூபனும் தெரிவுசெய்யப்பட்டார்கள். -ஈழத்துப்பித்தன் |
| < முந்தைய | அடுத்த > |
|---|